Simbu - சிம்பு முதன்முதலில் குடிக்க ஆரம்பித்தது அந்த சோகத்தில்தானாம்.. அவரே சொன்ன விஷயம்
சென்னை: Simbu (சிம்பு) தான் எப்போது முதன்முதலில் குடிக்க ஆரம்பித்தேன் என சிம்பு பேசிய வீடியோ ட்ரெண்டாகியுள்ளது.
சிம்பு தனிப்பட்ட சில பிரச்னைகள் காரணமாக திரைப்படங்களில் கவனம் செலுத்த முடியாமல் இருந்தார். ஒருவழியாக எண்ணத்தை ஒருநிலைப்படுத்தி உடல் எடையை குறைத்து ஈஸ்வரன் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். அந்தப் படம் தோல்வியை சந்தித்தது. எனவே தனது இரண்டாவது இன்னிங்ஸிலும் அவர் தடுமாறுவாரோ என ரசிகர்கள் கவலை கொள்ள ஆரம்பித்தனர்.

மாநாடு: இப்படிப்பட்ட சூழலில் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்தார். அரசியல் களத்தையும், டைம் லூப் கான்செப்ட்டையும் மையமாக வைத்து படம் உருவாகியிருந்தது. சிம்புவின் எனர்ஜியான நடிப்பு, வெங்கட் பிரபு அசாத்தியமான திரைக்கதை ஆகியவை இணைந்து படத்தை மெகா ஹிட்டாக்கின. மேலும் படமானது நூறு கோடி ரூபாயை வசூலித்து அசத்தியது.
வெந்து தணிந்தது காடு: இதனையடுத்து கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்தார். அந்தப் படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. குறிப்பாக சிம்புவின் நடிப்பை பார்த்த பலரும் சிறந்த நடிகர் என்பதை சிம்பு உணர்த்திவிட்டார் என புகழ்ந்தனர். தொடர்ந்து நடித்த பத்து தல படம் சறுக்கியது. கன்னட படமான மஃப்டி படத்தின் ரீமேக்காக அது அமைந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் வரிசையாக இரண்டு ஹிட் கொடுத்த எஸ்டிஆர் மூன்றாவது படத்தில் சறுக்கியது அவரது ரசிகர்களுக்கு கொஞ்சம் அப்செட்.
எஸ்டிஆர் 48: தற்போது தனது 48ஆவது படத்தில் நடிக்க கமல் ஹாசன் தயாரிப்பில் கமிட்டாகியிருக்கிறார். படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். பத்து தல படத்தில் ஏற்பட்ட சறுக்கலை இந்தப் படத்தின் மூலம் சரி பண்ணிவிடலாம் என்ற முனைப்பில் சிம்பு பணியாற்றவிருக்கிறார். இந்தப் படத்துக்காக சிம்பு மார்ஷியல் ஆர்ட்ஸ் உள்ளிட்ட கலைகளை கற்றுவருவதாக கூறப்படுகிறது.
சிம்பு ஓபன் டாக்: இதற்கிடையே சிம்பு உடல் எடை கூடி இடையில் நடிக்க முடியாமல் போனதற்கான காரணம் அவர் அளவுக்கதிகமாக மது அருந்தினார் என்று பல தகவல்கள் ஓடின. ஆனால் சிம்பு முதன்முறையாக குடிக்க ஆரம்பித்தது குறித்து அவரே பேசியிருக்கிறார். சிம்பு அளித்த பேட்டி ஒன்றில், "நான் முதன்முறையாக குடிக்க ஆரம்பித்தது என்றால் மைக்கேல் ஜாக்சன் உயிரிழந்த அன்றுதான். அப்போது எனக்கு 25 அல்லது 26 வயது இருக்கும். அதற்கு முன் நான் குடித்தது இல்லை.
மைக்கேல் ஜாக்சன் உயிரிழந்த செய்தி வந்த போது நான் துபாயில் இருந்தேன். அப்போது வொயிட் வைனில் வோட்காவை கலந்து குடித்துவிட்டேன். எப்படி குடிக்க வேண்டும் என்றுகூட எனக்கு தெரியவில்லை. ஆனால் இவர்களோ நான் அளவுக்கதிகமாக குடித்ததால்தான் உடல் எடை கூடிவிட்டதாக சொன்னார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











