நயன்தாராவிடம் மன்னிப்பு கேட்க எதுவுமே இல்லை.. அட சிம்பு என்னப்பா இப்படி சொல்லிருக்காரு

சென்னை: சிம்புவின் நடிப்பில் கடைசியாக தக் லைஃப் திரைப்படம் வெளியானது. பெரிய எதிர்பார்ப்போடு வெளியான அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றது. அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இதற்கிடையே ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் அவர் நடிக்கவிருந்த படம் ட்ராப்பாகிவிட்டதாகவும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது.

சினிமாவில் மாநாடு படத்தின் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய சிம்புவுக்கு அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டராக அமைந்தது. விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டு வசூலில் 100 கோடி ரூபாய் க்ளப்பில் சேர்ந்தது. அடுத்து அவர் நடித்த பத்து தல, வெந்து தணிந்தது காடு ஆகிய இரண்டு படங்களும் அவருக்கு நல்ல ரெஸ்பான்ஸையே பெற்றுக்கொடுத்தன. இதன் காரணமாக உச்சக்கட்ட உற்சாகத்தில் இருக்கிறார்கள் அவரும், அவரது ரசிகர்களும்.

தக் லைஃப்: இப்படிப்பட்ட நிலைமையில்தான் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் ஹீரோவாக நடித்த தக் லைஃப் படத்தில் நடித்தார் சிம்பு. முதன்முறையாக கமலுடன் எஸ்டிஆர் இணைந்ததன் காரணமாக படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. அண்மையில் வெளியான அந்தப் படம் படுதோல்வியைத்தான் சந்தித்தது. மேலும் சிம்பு இந்தப் படத்தில் நடித்திருக்கவே வேண்டாம் என்று அவரது ரசிகர்கள் ஓபனாக கூறினார்கள்.

Simbu says he won t apologize to Nayanthara Here are Throwback Interview
Photo Credit:

அடுத்த படங்கள்: சிம்பு அடுத்ததாக அஸ்வத் மாரிமுத்து, தேசிங்கு பெரியசாமி ஆகியோரின் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். உச்சக்கட்ட சர்ப்ரைஸாக வெற்றிமாறன் இயக்கத்திலும் நடிக்கிறார் சிம்பு. படத்தின் ஷூட்டிங் சமீபத்தில்தான் தொடங்கியது. மேலும் இதில் இயக்குநார் நெல்சன் திலீப்குமாரும் முக்கியமான வேடத்தில் நடிப்பதாக தெரிகிறது. அதுதொடர்பான புகைப்படங்கள் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி பெரிய ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது.

சிம்பு 49 ட்ராப்?: அதேசமயம் பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட்டானார் எஸ்டிஆர். அதில் சந்தானம் காமெடி ரோலில் நடிப்பதாகவும் பேசப்பட்டது. தற்காலிகமாக படத்துக்கு எஸ்டிஆர் 49 என்று பெயரும் வைக்கப்பட்டது. ஆனால் அந்தப் படம் ட்ராப்பாகிவிட்டதாக கடந்த சில நாட்களாகவே பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன. அதற்கு யூகங்களாக பல காரணங்களும் சொல்லப்ப்டுகின்றன.

நோ திருமணம்: இதற்கிடையே சிம்பு இரண்டு காதல் தோல்விகளை சந்தித்திருக்கிறார். முதலில் நடிகை நயன்தாராவை வல்லவன் பட சமயத்தில் காதலித்தார். அந்தக் காதல் சில காரணங்களால் பாதியில் முடிந்தது. அடுத்ததாக நடிகை ஹன்சிகா மோத்வனியை காதலித்தார். அஜித் - ஷாலினி போல் இருப்போம் என்று ஓபனாகவே பேசினார் சிம்பு. ஆனால் அக்காதலும் பிரேக்கப்பில்தான் முடிந்தது. இப்போது சிங்கிளாக இருக்கும் சிம்பு சில வருடங்களுக்கு முன்பு கொடுத்த பேட்டி ட்ரெண்டாகியிருக்கிறது.

நயன்தாராவிடம் மன்னிப்பு: அதாவது தனியார் சேனல் ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிம்புவிடம் நயன்தாரா இப்போது காதலை சொன்னால் ஏற்றுக்கொள்வீர்கள் என்றும் அவரிடம் மன்னிப்பு கேட்பீர்களா என்றும் கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "நாங்கள் இப்போது நல்ல நண்பர்கள் அவ்வளவுதான். இப்போது பார்த்தாலும் நார்மலாகத்தான் பேசிக்கொள்வோம். நான் அவரிடமும் அவர் என்னிடமும் மன்னிப்பு கேட்பதற்கு ஒன்றுமே இல்லை. நாங்கள் அடித்துக்கொண்டு வெட்டிக்கொண்டோமா மன்னிப்பு கேட்பதற்கு. அதெல்லாம் ஒன்றும் இல்லை" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X