அரசியல் கட்சி தலைவரிடம் அடி வாங்கிய சிம்பு.. என்ன காரணம் தெரியுமா?.. இதுவேற நடந்திருக்கா?

சென்னை: சிம்பு இப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் படத்தில் நடித்துவருகிறார். அந்தப் படத்துக்கு பிறகு தேசிங்கு பெரியசாமி இயக்கத்திலும், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்திலும் நடிக்கவிருக்கிறார். மீண்டும் பழையபடி நடிக்க ஆரம்பித்துவிட்டதால் அவரது ரசிகர்களுக்கு உச்சகக்ட்ட மகிழ்ச்சி இருக்கிறது. இந்நிலையில் அரசியல் கட்சி தலைவரிடம் சிம்பு அறை வாங்கிய சம்பவம் தெரிய வந்திருக்கிறது.

சின்ன வயதிலிருந்தே நடித்துவரும் சிம்பு; சில வருடங்களுக்கு முன்பு கவனத்தை சிதறவிட்டு உடல் எடையை கூடவிட்டு தடுமாறிக்கொண்டிருந்தார். இனிமேல் எஸ்டிஆர் அவ்வளவுதான் என்று பலரும் கணித்தார்கள். ஆனால் எப்போதும் கம்பேக் கொடுப்பதில் வல்லவரான அவர் உடல் எடையை குறைத்து மாநாடு படத்தில் தரமாக நடித்திருந்தார். படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி நூறு கோடி ரூபாய் வசூலித்தது. அடுத்ததாக அவர் வெந்து தணிந்தது காடு, பத்து தல, தக் லைஃப் ஆகிய படங்களில் நடித்தார். அவற்றில் வெந்து தணிந்தது காடு மட்டும்தான் ஓரளவுக்கு வெற்றி பெற்றது.

வெற்றிமாறனுடன் கூட்டணி: இப்போது அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் படத்தில் நடித்துவருகிறார். நீண்ட வருடங்களாக எதிர்பார்த்த கூட்டணி இப்போது அமைந்திருப்பதால் இப்படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இதில் விஜய் சேதுபதியும் முக்கியமான ரோலில் நடிக்க கமிட்டானார். ஆனால் இப்போது அவர் டேட் பிரச்னையால் இதிலிருந்து விலகிவிட்டார் என்றும்; அவருக்கு பதிலாக ராணா டகுபதி நடிக்கிறார் எனவும் சொல்லப்படுகிறது.

Simbu Viral Interview How Kalaignar Karunanidhi Once Slapped Him at an Event
Photo Credit:

ஃபுல் ஃபார்மில் சிம்பு: அரசனுக்கு பிறகு அஸ்வத் மாரிமுத்து இயக்கத்திலும், தேசிங்கு பெரியசாமி இயக்கத்திலும் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்ர் எஸ்டிஆர். அரசன் மாதிரியே இந்த இரண்டு படங்களின் மீதும் அதீத ஹைப் எகிறியுள்ளது. இரண்டு இயக்குநர்களுமே இதற்கு முன்பு எடுத்த படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே எஸ்டிஆரை வைத்து இயக்கும் படத்திலும் வெற்றியை பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிம்புவின் பேட்டி: இந்நிலையில் சிம்பு கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது. அவர் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி குறித்து பேசுகையில், "வல்லவன் படத்தை இயக்கிய நேரத்தில் கலைஞர் கருணாநிதி தாத்தா எனக்கு படத்தை போட்டு காண்பிக்க வேண்டும் என சொல்லியிருந்தார். அவரை நான் தாத்தா என்றுதான் எப்போதும் அழைப்பேன். அவர் சொல்லிவிட்டு சென்றுவிட்டார். ஆனால் நான் அவர் சொன்னதையே மறந்துவிட்டேன்.

நாட்டிய அரங்கேற்ற விழா: அதனையடுத்து நாட்டிய அரங்கேற்ற விழா ஒன்று நடந்தது. இதற்கிடையே படமும் ரிலீஸாகிவிட்டது. அந்த விழாவில் கலந்துகொள்ள நான் சென்றிருந்தேன். கலைஞர் கருணாநிதியும் வந்திருந்தார். அவர் சொன்னது எனக்கு நியாபகத்திலேயே இல்லை. அவரை பிடித்து நான் அழைத்து சென்றபோது, எனது கன்னத்திலேயே பளார் என்று ஒன்று அறைந்து உன்னை படத்தை திரையிட சொன்னேனே ஏன் செய்யவில்லை என கேட்டார். உடனே நானோ சீக்கிரமே உங்களுக்கு திரையிட்டு காண்பிக்கிறேன் என சொல்லி சமாளித்துவிட்டேன்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X