Simran: சிம்ரனுக்காக காத்திருந்த சிவாஜி... காலில் விழ வைத்த SAC... முதல் படத்திலேயே இப்படியா?

சென்னை: 1990களின் இறுதியில் தமிழ்த் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் சிம்ரன்.

விஜய்யுடன் ஒன்ஸ்மோர், பிரபுதேவாவுடன் VIP என இரண்டு படங்களிலும் ஒரே நேரத்தில் நடித்தார்.

ஒன்ஸ்மோர் படத்தில் விஜய், சிம்ரன் ஆகியோருடன் சிவாஜி கணேசனும் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பில் நடந்த ஒரு சம்பவம் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

காலில் விழுந்த சிம்ரன்:1995ம் ஆண்டு இந்தியில் வெளியான சனம் படத்தில் தான் சிம்ரன் அறிமுகமானார். இந்தப் படம் தோல்வியடைந்ததால், பாலிவுட்டில் இருந்து தென்னிந்திய சினிமா பக்கம் வந்தார் சிம்ரன். மலையாளத்தில் மம்முட்டியுடன் இந்திரபிரஸ்தம், கன்னடத்தில் சிவராஜ்குமாருடன் சிம்ஹடா மாரி, தெலுங்கில் ஒரு படம் என தனது கணக்கைத் தொடங்கினார்.

 Simran: SAC anger Simran for keeping Sivaji waiting and makes him fall on his feet

அதன்பின்னர் 1997ம் ஆண்டு தமிழில் ஒன்ஸ்மோர், V.I.P என இரண்டு படங்களிலும் ஒரே நேரத்தில் கமிட்டானார். இதில், ஒன்ஸ்மோர் படம் மூலம் முதன்முறையாக விஜய்யுடன் ஜோடி சேர்ந்தார். இந்தப் படத்தை விஜய்யின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் தான் இயக்கினார். விஜய், சிம்ரன் ஆகியோருடன் சிவாஜியும் சரோஜா தேவியும் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தனர்.

இந்தப் படத்தில் சிம்ரன், சிவாஜி கணேசன் இருவரும் சேர்ந்து நடிக்கும் ஒரு காட்சியை படமாக்க விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சி திட்டமிட்டுள்ளார். காலையில் 8 மணிக்கு ஷூட்டிங் என்பதால், சிவாஜி வழக்கம்போல ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே மேக்கப் போட்டுக்கொண்டு ஷூட்டிங் ஸ்பாட் சென்றுவிட்டாராம். ஆனால், சிம்ரன் ஆற அமர பொருமையாக 10 மணிக்கும் மேல் படப்பிடிப்புக்குச் சென்றுள்ளார்.

இதனால் சிவாஜி கொஞ்சம் டென்ஷனாகிவிட்டதாக தெரிகிறது. இதனை புரிந்துகொண்ட எஸ்.ஏ சந்திரசேகர், சிம்ரனை ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்தே லெஃப்ட் ரைட் வாங்கியுள்ளார். பாலிவுட்டில் இருந்து கோலிவுட் வந்த புதிது என்பதால், சிவாஜியை பற்றி எதுவும் தெரியாமல் இருந்துள்ளார் சிம்ரன். அதுமட்டும் இல்லாமல் பாலிவுட்டில் 10 மணிக்கு மேல் தான் ஷூட்டிங் தொடங்கும் என்ற நினைப்பில் சிம்ரன் லேட்டாக சென்றுள்ளார்.

இதனையடுத்து ஷூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு சிம்ரனை வீட்டுக்கு போக சொல்லிவிட்டாராம் எஸ்.ஏ சந்திரசேகர். அதன்பிறகு சிவாஜி டென்ஷனாக இருந்ததைப் பார்த்த சிம்ரன், அவரை கூல் செய்வதற்காக காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டுள்ளார். அதன்பின்னரே அந்தக் காட்சியை படமாக்கியுள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர். முதல் படத்திலேயே இப்படியொரு அனுபவம் கிடைத்ததால், அதன்பிறகு படப்பிடிப்புக்கு லேட்டாக சென்றதில்லையாம் சிம்ரன்.

ஒன்ஸ்மோர் படத்தைத் தொடர்ந்து நேருக்கு நேர், துள்ளாத மனமும் துள்ளும், பிரியமானவளே, உதயா ஆகிய படங்களில் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளார் சிம்ரன். இப்போது வரையும் விஜய்க்கு இணையாக ஆடும் நடிகை என்றால் அது சிம்ரன் தான் என ரசிகர்கள் அடித்துக் கூறுகின்றனர். அந்தளவிற்கு விஜய் - சிம்ரன் காம்போ கோலிவுட்டின் மேஜிக்கல் ஜோடி என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X