பிரசாந்த் எனக்கு ராசியான ஜோடி.. எப்போதுமே அவர் தான் டாப் ஸ்டார்.. பிரபல நடிகை ஓப்பன் டாக்

சென்னை: டாப் ஸ்டார் பிரசாந்திற்கு கடந்த ஆண்டு ராசியாக அமைந்தது. வெங்கட் பிரபு இயக்கிய கோட் படத்தில் விஜய்க்கு நண்பனாக நடித்திருந்தார். இதன் பின்பு அந்தகன் திரைப்படமும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. பிரசாந்தின் பிறந்தநாளான இன்று அவர் நடிக்கும் படங்கள் குறித்த அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கும் நிலையில், பிரபல நடிகை பிரசாந்த் குறித்து கூறியிருப்பது மெய்சிலிர்க்க வைத்திருக்கிறது. இருவருக்கும் அப்படி ஒரு கெமிஸ்ட்ரி அமைந்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனார் பிரசாந்த். நடிகர், இயக்குநர் என பன்முகத்தன்மை கொண்ட தியாகராஜனின் மகனாக சினிமாவில் அறிமுகம் கிடைத்தாலும். அதன் பிறகு அவர் தேர்ந்தெடுத்து நடித்த படங்கள் கொடுத்த வெற்றியால் டாப் ஸ்டாராக உயர்ந்திருக்கிறார். 90களில் பெண் ரசிகைகளுக்கு பிடித்த ஆணழகன் பிரசாந்த். லெஜண்ட் இயக்குநர்களின் படங்களில் நடித்த இளம் நடிகர்களின் வரிசையிலும் இவர் இடம்பிடித்திருக்கிறார்.

simran-says-actor-prashanth-is-a-perfect-match-for-her

இயக்குநர்கள் ஷங்கர், மணிரத்னம், பாலுமகேந்திரா, அகத்தியன் என முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடித்து வெற்றியும் கண்டுள்ளார். அதேபோன்று அறிமுகம் இல்லாத புதுமுக இயக்குநர்களுக்கும் வாய்ப்பளித்தவர் பிரசாந்த். காதல், நட்பு, கவிதை, இல்லாத பிரசாந்த் படங்களே இல்லை. பிரியாத வரம் வேண்டும், கண்ணெதிரே தோன்றினால், ஹலோ, காதல் கவிதை, ஜோடி, பார்த்தேன் ரசித்தேன், மஜ்னு என அடுக்கிக் கொண்டே போகலாம். பிரசாந்த் படங்களை நம்பி தியேட்டருக்குள் சென்றால் அப்படம் மனதிற்கு நெருக்கமான உள்ளுணர்வை தரும் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளார். ஆண்களை விட பெண் ரசிகைகள் அவருக்கு அதிகம். இன்றைக்கும் பிரசாந்த் படங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் போது அவர்களது கண்களில் ஒரு ஆச்சர்யத்தை காணலாம். இப்படத்தை பார்க்கும் போது செம பீல் ஆகும் எனக் கூறி சிலாகித்த காலமும் இருக்கிறது.

simran-says-actor-prashanth-is-a-perfect-match-for-her

டாப் ஹீரோயின்கள்: ஒவ்வொரு படத்திற்கும் ஒரு நடிகை என தமிழ் சினிமாவில் இளம் நடிகராக அதிக ஹீரோயின்களோடு நடித்தவர் பிரசாந்த். இவர் படத்தில் நடிக்கும் நடிகைகள் அனைவரும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்தவர்கள் தான். அதில், சிம்ரன், சினேகா, தேவயாணி, மும்தாஜ், லைலா முக்கிய தடத்தை பதித்திருக்கிறார்கள். சிம்ரன் இன்றைக்கும் பல படங்களில் நடித்துகொண்டு பிஸியாக இருக்கிறார். லைலா பார்த்தேன் ரசித்தேன் படத்திற்கு பிறகு பிரசாந்திற்கு கோட் படத்தில் ஜோடியாக நடித்திருக்கிறார். திருமண வாழ்க்கையில் சறுக்கிய பிரசாந்த் அதன் பிறகு அவர் நடித்த படங்கள் பெரிதளவில் கவன்ததை ஈர்க்கவில்லை. அவ்வப்போது அவர் நடிக்கும் படங்களும் சுமாரான வரவேற்பை பெற்றன.

ஹரி - பிரசாந்த் கூட்டணி: பிரசாந்த் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், தமிழ் படத்திற்கு பிறகு இயக்குநர் ஹரியுடன் மீண்டும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவர் நடிக்கும் படத்தில் தமிழ்நாட்டையே கலக்கி கொண்டிருக்கும் சென்ஷேனல் ஹீரோயின் கயாடு லோஹர் ஹீரோயினாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது. ஹரி காம்பினேஷனில் பிரசாந்த் இணைந்தால் பக்கா கமர்ஷியல் படமாகத்தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்தாண்டு அவர் பிறந்தநாளில் அந்தகன் படம் குறித்த அப்டேட் வெளியானது. அதேபோன்று இன்றும் அவர் நடிக்கும் படம் குறித்த அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

ராசியான ஹீரோ: பிரசாந்த் - சிம்ரன் ஜோடியை திரையில் பார்த்தால் கெமிஸ்ட்ரி என்ற வார்த்தை தொற்றிக்கொள்ளும். ஆப் ஸ்கீரினில் சேட்டை பிடித்த நண்பர்களாக இருந்தாலும், ஆன் ஸ்கீரினில் காதல் என்ற வார்த்தையில் ரசிகர்களுக்கு கண்ணீர் வர வைத்து விடுவார்கள். நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்ரனும் பிரசாந்தும் அந்தகன் படத்தில் இணைந்து நடித்தனர். இப்படமும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. படத்திற்கான விமர்சனங்களும் பாராட்டை பெற்றன. இதில், சிம்ரன் நெகட்டிவ் ரோலில் நடித்து கலக்கியிருப்பார். இந்தி ரீமேக் படமாக இருந்தாலும், தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றார் போல் சில மாற்றங்களை செய்திருந்தார் இயக்குநர்.

simran-says-actor-prashanth-is-a-perfect-match-for-her

பிரசாந்த் எப்போதும் டாப் ஸ்டார்: அந்தகன் பட புரோமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற சிம்ரன் பிரசாந்தை பற்றி ஜாலியாக பேசியிருந்தார், சினிமாவை பொறுத்தவரை பிரசாந்த் எனக்கு ராசியான ஜோடி. அவருடன் நடித்த எல்லா படங்களுமே எனக்கு ஹிட் படங்களாக அமைந்திருக்கிறது. எல்லோரும் கூறுவது போல் கம்பேக் கொடுக்க நினைப்பவர் இல்லை. பிரசாந்த் எப்போதும் டாப் ஸ்டார் என கூறினார். ரொம்ப அழகான விசயங்களை நேரில் பகிர முடியாது. படப்பிடிப்பில் ரொம்ப சேட்டை பிடித்த நபர் என்றும் மனிதாபிமானம் உள்ள நடிகராக நேரில் பார்த்திருக்கிறேன். அமேசிங் பர்சன் என்று அழகான தமிழில் சிம்ரன் கூறினார். இதை கேட்ட பிரசாந்த் அமைதியாக பார்த்து ரசித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X