சேலையில் புஷ்-அப்ஸ் எடுக்கும் சிம்ரன்.. 49 வயசுல மாஸ் பண்றாங்களே.. வீடியோவ மிஸ் பண்ணீடாதீங்க!

சென்னை: நடிகை சிம்ரன் தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக 2000களில் வலம் வந்தவர். விஜய், அஜித், சூர்யா, கமல் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பல ஹிட் கொடுத்தவர். 49 வயதாகும் சிம்ரன் இப்போது அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் நடித்துள்ளார். இந்த படம் நாளை அதாவது ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. அவர் கலந்து கொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், புடவையில் புஷ்-அப்ஸ் எடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

சிம்ரன் திறமையான நடிகை என்பது பலருக்கும் தெரியும். இன்றைக்கு லேடி சூப்பர் ஸ்டார் என நடிகைகளுக்கு இடையில் பனிப்போர் நடந்து வரும் காலகட்டத்தில், தனது அட்டகாசமான நடிப்பு, நடனத் திறன் என எல்லாவற்றிலும் ரசிகர்கள் மனதை ஆட்சி செய்தவர். அவர் இருந்த காலகட்டத்தில் ஆல்தோட்ட பூபதி பாடலுக்கு இவரை விட்டால், வேறு யாராலும் நடனமாட முடியாது எனக் கூறும் அளவிற்கு பிரமாதப்படுத்தியிருக்கிறார்.

Actress Simran Took Push-Ups With Saree In Vijay TV Show Throwback Video Goes Trending

கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் நடித்த பின்னர், இவரது திரைவாழ்க்கை மொத்தமாக மாறிவிட்டது என்றாலும், அவ்வப்போது ஏதாவது ஒரு படத்தில் நடித்துக் கொண்டுதான் இருந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் பேட்ட படத்தில் நடித்த பின்னர், ஆண்டுக்கு ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என முடிவெடுத்ததைப்போல் நடித்து வருகிறார். பாவ கதைகள் ஆந்தாலஜி கதைகளிலும் நடித்திருந்தார். நாளை வெளியாகவுள்ள குட் பேட் அக்லி படத்தில் அவரது கதாபாத்திரத்தை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்.

Actress Simran Took Push-Ups With Saree In Vijay TV Show Throwback Video Goes Trending

புஷ்-அப்ஸ்: இது மட்டும் இல்லாமல், சசிகுமார் உடன் இணைந்து டூரிஸ்ட் ஃபேமிலி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் படம் பல உலக நாடுகளில் நடத்தப்படும் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிம்ரன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஸ்டார்ட் மியூசிக் என்ற நிகழ்ச்சியில், கடந்த 10 மாதங்களுஜ்க்கு முன்னதாக கலந்து கொண்டார். இதில் கலந்து கொண்ட சிம்ரன், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பிரியங்கா தேஷ்பாண்டே கேட்டுக் கொண்டதற்கு இணங்கி, புஷ்-அப்ஸ் எடுத்தார். அதுவும் சிம்ரன் புடவை கட்டியிருந்த நிலையிலும் புஷ்-அப்ஸ் எடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Actress Simran Took Push-Ups With Saree In Vijay TV Show Throwback Video Goes Trending

டயட்: மேலும் சிம்ரனிடம் நீங்க என்ன மாதிரியான டயட் ஃபாலோ செய்கிறீர்கள் என்ற கேள்வியைக் கேட்டபோது, எனக்கு வயதாகிக் கொண்டே போகிறது. எனது தசைகளும் நாளுக்கு நாள் வலுவிழந்து கொண்டே செல்கிறது. எனவே நான் பெரும்பாலும் புரத உணவை அதிகம் எடுத்துக் கொள்கிறேன் என பதில் அளித்தார். சிம்ரன் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியின் வீடியோவை விஜய் டிவி தனது யூடியூப் சேனலில் பகிர்ந்துள்ளது. இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் ஸ்ரீகாந்த், பிக்பாஸ் புகழ் தர்ஷிகா மற்றும் சின்னத்திரை பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர். 10 மாதங்களுக்கு முந்தைய வீடியோவாக இருந்தாலும் இணையத்தில் இந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X