ஜால்ரா பயலுகளா ஓடிப்போங்க.. ரஜினிக்காக சண்டைக்கு சென்ற சிவாஜி கணேசன்.. இப்படியும் நடந்திருக்கா?

சென்னை: சிவாஜி கணேசன் அனைத்து நடிகர்களுக்கும் ரோல் மாடலாக இருக்கிறார். அவரை போல் எப்படியாவது ந்டித்துவிட வேண்டும் என்ற் நோக்கத்தில்தான் பல நடிகர்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த்தின் நடிப்பை சிவாஜி கணேசன் பாராட்டியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கிறது.

பராசக்தி படத்தில் ஹீரோவாக அறிமுகமான சிவாஜி கணேசன் இன்று பலருக்கும் நடிப்பில் ஒளி கொடுத்துக்கொண்டிருக்கிறார். தனது மிகச்சிறந்த நடிப்பால் இந்தியா முழுவதும் பிரபலமடைந்த அவர்; இறந்து இத்தனை வருடங்கள் ஆனாலும் இன்னமும் அதே பிரபல்யத்தில்தான் நீடித்துக்கொண்டிருக்கிறார். பல நடிகர்களும் அவர் போல் பெயர் வாங்கிவிட வேண்டும் நினைத்து கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

எந்த கேரக்டராக இருந்தாலும்: எந்தக் கேரக்டராக இருந்தாலும் அதுவாகவே மாறிவிடக்கூடிய தன்மை படைத்த அவர் பல படங்களில் யாராலும் கொடுக்க முடியாத நடிப்பை கொடுத்திருக்கிறார். ஹீரோவாக கலக்கிய அவர் குணசித்திர கதாபாத்திரங்களிலும் பட்டையை கிளப்பியவர். தேவர் மகன், படையப்பா, லவ் டுடே என அவர் கேரக்டர் ரோல் செய்த படங்கள் எல்லாம் அவரது நடிப்பால் அடுத்தக்கட்டத்துக்கு நகர்ந்திருக்கும்.

Sivaji Ganesan Praised Rajiniknth Acting Jouranlist Cheyyaru Balu Shares Throwback Incident
Photo Credit:

ரஜினியுடன் பந்தம்: சிவாஜியை பொறுத்தவரை தன்னுடைய காலத்தில் வளர்ந்து வந்த ஹீரோக்கள் மத்தியில் ப்ரியம் வைத்திருந்தவர். ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரிடமெல்லாம் நெருக்க்கமாக பழகியவர். பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவனாக ரஜினியை நடிக்கவும், கமலை ஆதித்த கரிகாலன் வேடத்தில் நடிக்கவும் சொல்லியவர் சிவாஜி என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் படையப்பா படத்தில்தான் முதன்முதலில் ஒரு கோடி ரூபாய் சம்பளமாக சிவாஜி வாங்கினார்.

ரஜினியின் நடிப்பு பற்றி: இந்நிலையில் ரஜினிகாந்த்தின் நடிப்பை சிவாஜி பாராட்டியிருக்கிறார். அதாவது, 'ஆறிலிருந்து அறுபதுவரை திரைப்படத்தை பார்த்துவிட்டு ஷூட்டிங் வந்திருக்கிறார். அப்போது அங்கிருந்த தனது ஆதரவாளர்களிடம் அந்தப் படத்தை குறிப்பிட்டு எப்படி இருக்கிற்து என்று கேட்க; அவர்களோ, 'படம் ஒன்றும் பெரிய பிரமாதமில்லை. வெளியே பேசிக்கொள்ளும் அளவுக்கு இல்லை. அந்த ஹீரோவுக்கு ஒழுங்காவே நடிக்க வரல.

நீங்கள்தான்: நீங்கள் அந்த கேரக்டரில் நடித்திருந்தால்தான் சரியாக இருந்திருக்கும்' என கூறினார்களாம். உடனே சிவாஜி சட்டென திரும்பி, 'அட ஜால்ரா பயலுகளா ஓடிப்போங்கடா என சொல்லிவிட்டு; தன்னருகே இருந்தவரிடம், 'அந்தப் பையன் நல்லா நடிச்சிருக்கான். அவனுக்குனு ஒரு தனித்துவம் இருக்கு. பெரிய ஆளா வருவான்' என்று கூறினாராம். இதனை பிரபல பத்திரிகையாளரான செய்யாறு பாலு தனது யூடியூப் சேனலில் வெளியிட்டிருக்கும் வீடியோவில் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆறிலிருந்து அறுபதுவரை: கடந்த 1979ஆம் ஆண்டு பஞ்சு அருணாச்சலம் எழுத்தில் எஸ்.பி. முத்துராமன் இயக்கிய படம் ஆறிலிருந்து அறுபதுவரை. அப்படம் இன்றுவரை ரஜினியின் கரியரில் ஒரு கல்ட் க்ளாசிக் திரைப்படமாக திகழ்ந்துகொண்டிருக்கிறது. ரஜினிகாந்த்தின் நடிப்பு அந்தப் படத்தில் வேறு பரிமாணத்தை காண்பித்தது. மேலும் ரஜினியால் கமர்ஷியல் ரோல்களும் செய்ய முடியும், இந்த மாதிரியான ரோல்களையும் செய்ய முடியும் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X