என்னால ஒரு ஆம்பளைய காதலிக்க முடியாது... கலாய்த்து தள்ளிய சிவாஜி... கலங்கிய கமல்!

சென்னை: கமல் நடிப்பில் 1996ம் ஆண்டு வெளியான அவ்வை சண்முகி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கமலுடன் மீனா, மறைந்த பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசன், மணிவண்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்தப் படத்தில் முதலில் ஜெமினியின் பாத்திரத்தில் சிவாஜி தான் நடிக்கவிருந்தாராம்.

ஆனால், அவ்வை சண்முகி படத்தில் கமலுடன் சிவாஜி நடிக்க மறுத்த காரணம் குறித்து தற்போது தகவல் கிடைத்துள்ளது.

 கமலின் அவ்வை சண்முகி

கமலின் அவ்வை சண்முகி

வித்தியாசமான கேரக்டர்களில் நடிப்பதில் கமல்ஹாசனை மிஞ்சுவதற்கு ஆளே கிடையாது. அவர் முதன்முறையாக பெண் பாத்திரத்தில் நடித்த அவ்வை சண்முகி திரைப்படம் 1996ம் ஆண்டு வெளியானது. கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கமல், மீனா, ஜெமினி கணேசன், நாகேஷ், மணிவண்ணன், நாசர், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றதோடு திரையரங்குகளில் 100 நாட்களையும் கடந்து ஓடியது.

 கமலை காதலித்த ஜெமினி

கமலை காதலித்த ஜெமினி

இந்தப் படத்தில் மீனாவின் அப்பாவாக ஜெமினி கணேசன் நடித்திருந்தார். காதலித்து திருமணம் செய்துகொள்ளும் கமலுக்கும் மீனாவுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு பிரிந்துவிடுவார்கள். தனது மகளுக்காக அவ்வை சண்முகி என பாட்டி வேடம் போட்டு மீனாவின் வீட்டில் வேலை பார்ப்பார் கமல். அப்போது அவ்வை சண்முகி வேடத்தில் இருக்கும் கமலை உருகி உருகி காதலிப்பார் ஜெமினி. கமல் - ஜெமினி இருவரும் இணைந்து காமெடியில் கலக்கியிருந்தனர்.

 நடிக்க மறுத்த சிவாஜி

நடிக்க மறுத்த சிவாஜி

அவ்வை சண்முகி என்ற லேடீஸ் கெட்டப் மட்டும் இல்லாமல் கமலே அந்த பாத்திரத்துக்கு டப்பிங் பேசி அசத்தியிருந்தார். இந்நிலையில் இந்தப் படத்திற்காக முதலில் சிவாஜியை நடிக்க வைக்கலாம் என கமல்ஹாசனும் கேஎஸ் ரவிக்குமாரும் முடிவு செய்திருந்தனர். ஆனால், "சிவாஜி தன்னால் ஆம்பளையை காதலிப்பதாக நடிக்க முடியாது. இதுக்கெல்லாம் ஜெமினி தான் சரியான ஆளு, அவன்கிட்ட போய் கேளுங்க. அவன் தான் ஆம்பளையை கூட உருகி உருகி காதலிப்பான்" என கூறிவிட்டாராம்.

 சீனில் வந்த ஜெமினி

சீனில் வந்த ஜெமினி

அதன்பிறகே சிவாஜிக்குப் பதிலாக ஜெமினி கமிட் ஆனாராம். கமல், கேஎஸ் ரவிக்குமார் இருவரிடமும் சிவாஜி சொன்னது போலவே, ஜெமினியும் அவ்வை சண்முகியை காதலிக்கும் காட்சிகளில் பட்டையைக் கிளப்பியுள்ளார். கமல் - ஜெமினி இருவரும் நடித்த காட்சிகள், ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தேவர் மகன் படத்துக்குப் பிறகு கமலும் சிவாஜியும் இணைந்து நடித்ததில்லை. அந்த குறை அவ்வை சண்முகி படம் மூலம் முடிவுக்கு வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், அது நடக்காமல் போனது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X