போட்டுக்கொடுத்த வாத்தியார்.. சிவகார்த்திகேயனை அடி வெளுத்துவிட்ட அக்கா.. என்ன நடந்தது தெரியுமா?
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக அயலான் திரைப்படம் வெளியானது. பிரின்ஸ் படத்தின் தோல்வியால் ரொம்பவே துவண்டிருந்த சிவகார்த்திகேயன் மாவீரன், அயலான் என்று வரிசையாக இரண்டு ஹிட் படங்களை கொடுத்து மீண்டும் எழுந்துவிட்டார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். தற்போது அவர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 21ஆவது படத்தில் நடித்துவருகிறார். கமல் ஹாசன் படத்தை தயாரித்துவருகிறார்
சின்னத்திரையில் நுழைந்து வெள்ளித்திரையில் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். திறமையின் துணை கொண்டு அசுர வளர்ச்சி அடைந்திருக்கும் சிவகார்த்திகேயனுக்கு பலர் ரசிகர்களாக இருக்கின்றனர். கமர்ஷியல் பாதையை தேர்ந்தெடுத்து அதில் கவனமாக செல்லும் சிவகார்த்திகேயன் தெலுங்கிலும் தனது மார்க்கெட்டை விஸ்தாரமாக்கும் நோக்கத்தில் அனூதீப் இயக்கத்தில் பிரின்ஸ் படத்தில் நடித்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு படம் வெளியானது.

பிரின்ஸ்: . ஆனால் அவரது எதிர்பார்ப்பை தவிடு பொடியாக்கியது பிரின்ஸ் ரிசல்ட். படம் திரையிடப்பட்ட ஒரு வாரத்திலேயே திரையரங்குகளில் இருந்து படம் தூக்கப்பட்டது. இதனால் டாக்டர், டான் என வரிசையாக நூறு கோடி ரூபாய் வசூலித்த சிவகார்த்திகேயன் அதிர்ச்சியின் உச்சத்துக்கு சென்றார். முக்கியமாக அவரது ரசிகர்களையும் பலர் ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர்.
மாவீரன்: பிரின்ஸ் படத்தை தொடர்ந்து மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்தார் சிவகார்த்திகேயன். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் போன படம் மிஸ் ஆனது போல் இந்தப் படம் மிஸ் ஆகாது என்று கூறியிருந்தார். மாவீரன் படத்தின் ரிசல்ட்டை பார்த்த ரசிகர்கள் சிவகார்த்திகேயன் சொன்னது மாதிரியே செய்துவிட்டார் என்று உற்சாகத்தின் உச்சத்துக்கு சென்றனர். அடுத்ததாக வெளியான அயலான் திரைப்படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது குறிப்பிடத்தக்கது.
ஓரங்கட்டிய அயலான்: முக்கியமாக தன்னை அறிமுகப்படுத்திய தனுஷுக்கு போட்டியாக பொங்கலில் களமிறங்கி வென்றிருக்கிறார் சிவகார்த்திகேயன். மாவீரன், அயலான் என்று தொடர்ந்து இரண்டு படங்கள் ஹிட்டடித்திருப்பதால் எஸ்கேவின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். முக்கியமாக இனி சிவகார்த்திகேயனுக்கு எந்தச் சறுக்கலும் இருக்காது என்று நம்பிக்கை தெரிவித்துவருகின்றனர். அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். அதன் பூஜை சமீபத்தில் நடந்தது.
க்ளீன் பாய் இமேஜ்: கோலிவுட்டில் சிவகார்த்திகேயனுக்கு க்ளீன் பாய் என்ற இமேஜ் இருக்கிறது. அதாவது மதுப்பழக்கமோ, புகை பழக்கமோ இல்லாமல் இருக்கும் அவர் தேவையில்லாத சர்ச்சைகளில் சிக்காமலும்; அப்படியே சிக்கினாலும் அதனை கடந்து போகும் பக்குவத்துடனும் இருக்கிறார். இன்று அவர் தனது 39ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்தச் சூழலில் அவர் வாழ்க்கையில் நடந்த ஒரு விஷயத்தை பற்றி பார்க்கலாம்.
என்ன நடந்தது: அதாவது சிவகார்த்திகேயனின் குடும்பம் ரொம்பவே ஸ்ட்ரிக்ட்டான குடும்பம். அவரது அப்பா தாஸ் உயிரிழந்த பிறகு அந்தக் குடும்பம் சிவகார்த்திகேயனை மட்டுமே நம்பி இருந்திருக்கிறது. அதன் காரணமாக அவர் நன்றாக படித்து நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்பதி அவரது அம்மாவும், அக்காவும் தெளிவாகவும் உறுதியாகவும் இருந்திருக்கிறார்கள். இதனால் அவரது படிப்பு மீது அக்காவுக்கு கூடுதல் அக்கறை இருந்தது.
சிவகார்த்திகேயன் பள்ளி படிக்கும்போது தனது அக்காவின் டீச்சரிடம்தான் இயற்பியல் பாடத்துக்கு டியூஷன் போனாராம். டியூசனில் ஒரு டெஸ்ட் நடத்தப்பட்டிருக்கிறது. ஆனால் அதில் சிவகார்த்திகேயன் ஒழுங்கான மார்க் எடுக்கவில்லையாம். இதனையடுத்து அந்த டீச்சர் சிவகார்த்திகேயன் வீட்டுக்கு ஃபோன் செய்து அவரது அக்காவிடம், உன் தம்பி ஒழுங்காக டெஸ்ட் எழுதலை ம்மா என்று சொல்லியிருக்கிறார்.
உடனே அவரது அக்கா ஃபோனை வைத்துவிட்டு சிவகார்த்திகேயனை அழைத்து மூன்று மணி நேரம் இயற்பியல் சொல்லிக்கொடுத்தாராம். அப்போது கடுமையாக அடிக்கவும் செய்தாராம். மறுநாள் இயற்பியல் பாடத்துக்கான பொது தேர்வில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயன் 183 மதிப்பெண்கள் எடுத்து அசத்தினாராம். அந்த அளவுக்கு சிவகார்த்திகேயன் மீது அவரது அக்கா அவ்வளவு கவனத்தை வைத்திருந்திருக்கிறார். அதனால்தான் அவரால் சினிமாவில் க்ளீன் பாய் இமேஜோடு வலம் வர முடிகிறது. பிறந்தநாள் வாழ்த்துகள் சிவகார்த்திகேயன்.


Click it and Unblock the Notifications











