அண்ணன் தம்பி மாதிரி பழகுறோம்.. நமக்குள் என்ன பிரச்னை.. ஃபோனில் பேசிக்கொண்ட தனுஷ் - சிவகார்த்திகேயன்

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனை சினிமாவுக்குள் கொண்டு வந்தவர் தனுஷ். 3 படத்தில் சப்போர்ட்டிங் ஆர்ட்டிஸ்ட் ரோல் கொடுத்தார். அதில் மிகச்சிறப்பாகவே நடித்திருந்தார் சிவா. அதனையடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான மெரினா படத்தில் ஹீரோவாக அறிமுகமானார் எஸ்கே. தொடர்ந்து தனது திறமையை வளர்த்துக்கொண்டு படிப்படியாக முன்னேறி இப்போது டாப் 10 இடங்களுக்குள் ஜொலித்துக்கொண்டிருக்கிறார். ஆனால் சமீபகாலமாக அவரை சுற்றி சர்ச்சைகளும் எழுந்தபடி இருக்கின்றன.

சினிமாவில் வென்றுவிட வேண்டும் என்று பலர் முயன்று கொண்டேயிருக்கிறார்கள். ஆனால் எல்லோருக்கும் சினிமா என்னும் மாய உலகம் கதவை திறந்துவிடுவதில்லை. நிறைய திறமையும், கொஞ்சம் அதிர்ஷ்டமும், மிகப்பெரிய உழைப்பும் யாரிடமும் இருக்கிறதோ அவர்களால் மட்டும்தான் சினிமாவில் ஜொலிக்க முடிகிறது. அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் அறிமுகமாகி பல நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தொகுத்து வழங்கியவர்.

Throwback Stories Sivakarthikeyan Dhanush

3 அறிமுகம்: அப்போது அவரது திறமையை சரியாக கண்டுகொண்ட தனுஷ் தனது முன்னாள் மனைவி ஐஸ்வர்யா இயக்கிய 3 படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். அதில் மிகச்சிறப்பாக சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து மெரினா படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அந்தப் படத்திலும் சொல்லிக்கொள்ளும்படிதான் நடித்திருந்தார் சிவா. ஆனால் சிவா ஹீரோவானது பலருக்கு பிடிக்கவில்லை என்பதுதான் எதார்த்தமான உண்மை.

அடித்து நொறுக்கப்பட்ட ஆரூடம்: சிவகார்த்திகேயன் ஹீரோ ஆனதும் இவர் எல்லாம் சில படங்கள்தான் தாக்குப்பிடிப்பார் என்று ஓபனாகவே பலர் பேசினார்கள். ஆனால் அதையெல்லாம் அவர் கண்டுகொள்ளாமல் தனது திறமையை வளர்ப்பதில் மட்டுமே கவனமாக இருந்தார். அப்படி வளர்த்த திறமையை கொண்டு படிப்படியாக வளர்ந்து தன்னை பற்றி கூறப்பட்ட ஆரூடங்களை அடித்து சுக்கு நூறாக்கினார். அதேபோல் அவர் நடித்த படங்களும் ஏ,பி,சி செண்ட்டர்களில் பட்டையை கிளப்ப தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்திருக்கிறார் இப்போது.

சமீப சர்ச்சை: ஒருபக்கம் சிவாவின் வளர்ச்சி அசுரத்தனமாக இருக்க; மறுபக்கம் க்ளீன் பாய் இமேஜும் இருந்தது. ஆனால் சமீபகாலமாக அவரை சுற்றி பல்வேறு சர்ச்சைகள் எழுகின்றன. இசையமைப்பாளர் இமான் வைத்த குற்றச்சாட்டு ஓய்வதற்குள்: கொட்டுக்காளி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் எஸ்கே பேசியது அடுத்த சர்ச்சையை பற்ற வைத்தது. அந்தப் பேச்சில் அவர் தனுஷைத்தான் மறைமுகமாக சாடியிருக்கிறார் என்று பலரும் பேசினார்கள். மேலும் வளர்த்துவிட்டவரையே உதைக்கிறாரே என்றெல்லாம் பேசினார்கள்.

சந்தித்துக்கொண்ட தனுஷ் - எஸ்கே: இந்தப் பேச்சுக்கள் பலமாக எழுந்தாலும் தனுஷும், சிவகார்த்திகேயனும் இதுகுறித்து வாய் திறக்கவில்லை. மாறாக இருவரும் சமீபத்தில் சந்தித்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இன்று வெளியாகி செம ட்ரெண்டிங்கானது. அந்தப் புகைப்படம் பரவியதை அடுத்து தனுஷ் - சிவகார்திகேயன் பிரச்னை என்ற செய்தி வேல்யூ இழந்து போனது. மேலும் இதிலிருந்தே தெரிகிறதா எஸ்கே மீது வேண்டுமென்று வன்மத்தை கக்குகிறார்கள் என சிவாவின் ரசிகர்களும் கூற ஆரம்பித்திருக்கிறார்கள்.

ட்ரெண்டாகும் வீடியோ: இந்நிலையில் இன்னொரு வீடியோவும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அதாவது காக்கி சட்டை படத்தின் ப்ரோமொஷனில் சிவகார்த்திகேயனுக்கு தனுஷ் ஃபோன் செய்தார். அப்போது, 'என்ன சிவா நமக்குள் ஏதோ பிரச்னை என்று சொல்கிறார்கள். அண்ணன் தம்பி மாதிரி பழகிக்கொண்டிருக்கிறோம். இவங்க இப்படி சொல்றாங்க. இவங்களுக்காக நாம் சேர்ந்து தினமும் ஒரு ஃபோட்டோவா போட முடியும்' என்று கேட்டார். அதற்கு பதிலளித்த சிவாவோ, 'ஆமா சார். நாம ஒழுங்கா பழங்கிட்டு இருக்கோம். இவங்க ஒழுங்கா இருக்க குடும்பத்துல கும்மி அடிச்சிட்டு போய்டுவாங்க போல' என்றார். இந்த வீடியோதான் இப்போது அதிகம் பகிரப்பட்டுவருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X