Sivakarthikeyan: சிவகார்த்திகேயனை யாரென்றே தெரியாமல் முழித்த பிரபல இயக்குநர்... ஆனால் இன்று!

சென்னை: தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர்.

சின்ன திரையில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக கலக்கி வந்த சிவா, இப்போது சினிமாவிலும் அதிரடி காட்டி வருகிறார்.

இந்நிலையில், சிவகார்த்திகேயனை யாரென தெரியாமல் திருதிருவென முழித்துள்ளார் பிரபல இயக்குநர் ஒருவர்.

அந்த சம்பவம் குறித்து அவரே மனம் திறந்து பேசியுள்ளது வைரலாகியுள்ளது.

 Sivakarthikeyan: Malayalam director Vineeth Sreenivasan about Sivakarthikeyan

சிவகார்த்திகேயனை யாரென தெரியாமல் முழித்த இயக்குநர்: சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 14ம் தேதி வெளியான மாவீரன், ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. பாசிட்டிவான விமர்சனங்களுடன் பாக்ஸ் ஆபிஸில் 50 கோடிக்கும் மேல் வசூலித்து மாஸ் காட்டியது. பிரின்ஸ் படத்தில் மிஸ் பண்ணதை மாவீரன் படத்தில் பிடித்துவிட்டார் சிவகார்த்திகேயன்.

சினிமாவில் நடிக்கும் முன்னர் விஜய் டிவியின் நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடம் பிரபலமாகிவிட்டார். போட்டியாளராக வந்தவர் பின்னர் விஜய் டிவியின் ஸ்டார் ஹோஸ்ட் என்ற உயரத்தை ரொம்பவே சீக்கிரமாக பிடித்துவிட்டார். அதேபோல் தான் மெரினா படம் மூலம் நடிகரான சிவகார்த்திகேயன் இப்போது கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவராக மாஸ் காட்டி வருகிறார்.

இந்நிலையில் மலையாள இயக்குநர் வினீத் ஸ்ரீனிவாசன் சிவகார்த்திகேயன் குறித்து ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். தட்டத்தின் மறயத்து, ஒரு வடக்கன் செல்ஃபி, ஹிருதயம் போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் வினீத் ஸ்ரீனிவாசன். அதேபோல், ஓ சாந்தி ஒசனா, தங்கம், 2018 உள்ளிட்ட மேலும் பல படங்களிலும் நடித்துள்ளார்.

மலையாளத்தில் முன்னணி திரை பிரபலமாக வலம் வரும் வினீத் ஸ்ரீனிவாசன், ஒருமுறை சிவகார்த்திகேயனை சந்தித்துள்ளாராம். அதாவது ஹோட்டலில் பிரியாணி சாப்பிட்டு வெளியே சென்றுள்ளார் வினீத் ஸ்ரீனிவாசன். அப்போது அவரிடம் ஓடிப்போய் பேசிய சிவகார்த்திகேயன் தன்னை அறிமுகம் செய்துள்ளார். ஆனால், அப்போது வினீத் ஸ்ரீனிவாசனுக்கு சிவகார்த்திகேயனை யாரென்று தெரியவில்லையாம்.

மேலும், "உங்களுக்கு கோகுல் தெரியுமா? அவர் என்னுடைய நண்பர். 'பலவட்டம்' என்ற உங்களது மியூசி ஆல்பத்துக்கு கோரியோகிராபி செய்த கோகுல் எனது நண்பர் தான்" எனக் கூறியுள்ளார். அப்போதும் சிவகார்த்திகேயனை யாரென்று அடையாளம் தெரியாமல் முழித்துள்ளார் வினீத் ஸ்ரீனிவாசன். இந்தச் சம்பவம் சில நாட்களுக்குப் பிறகு தான் மெரினா படத்தின் போஸ்டரை பார்த்துள்ளார்.

அதன்பின்னர் அவர் குறுகிய காலத்தில் கோலிவுட்டின் முன்னணி ஹீரோவாக வளர்ந்ததைப் பார்த்து வினீத் ஸ்ரீனிவாசன் ரொம்பவே ஆச்சரியப்பட்டாராம். இதனை தற்போது ஒரு பேட்டியில் பகிர்ந்து சிவகார்த்திகேயனை பாராட்டியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X