Sivakarthikeyan - உனக்கு யாருடா 5 லட்சம் கொடுக்குறாங்க.. அம்மாவிடம் செம பல்பு வாங்கிய சிவகார்த்திகேயன்

சென்னை: Sivakarthikeyan (சிவகார்த்திகேயன்) சிவகார்த்திகேயனை பார்த்து அவரது தாய் உனக்கு யாருப்பா ஐந்து லட்சம் கொடுக்க போறாங்க என்று கேட்ட சம்பவம் தெரியவந்திருக்கிறது.

சின்னத்திரையில் நடந்த ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக பங்கேற்று பிறகு வெற்றியாளராக மாறி தொகுப்பாளராக ஜொலித்தவர் சிவகார்த்திகேயன். இவரது லுக்கையும், டைமிங்கையும் பார்த்த தனுஷ் தனது 3 படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு பாண்டிராஜ் இயக்கத்தில் மெரினா படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அந்தப் படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை. இருப்பினும் அடுத்தடுத்து பட வாய்ப்பு கிடைத்தது.

Sivakarthikeyan mother asked him who is going to give you five lakhs

மெகா ஹிட்டுகள்: தொடர்ந்து அவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், மான் கராத்தே உள்ளிட்ட படங்கள் ஹிட்டாக சிறுவர்களையும், சிறுமிகளையும் கவர்ந்த ஹீரோவாக வளர்ந்தார் சிவா. கமர்ஷியல் பாதையை தேர்ந்தெடுத்து அதில் தற்போது தெளிவாக பயணம் செய்துகொண்டிருக்கிறார். மேலும் அவர் நடித்த டாக்டர், டான் ஆகிய படங்கள் 100 கோடி ரூபாயை வசூலித்து சிவகார்த்திகேயனை டாப் 10 ஹீரோக்கள் வரிசையில் நிறுத்தியது.

அடிவாங்கிய பிரின்ஸ்: இரண்டு படங்கள் தொடர்ந்து 100 கோடி ரூபாய் வசூலித்த உற்சாகத்தில் பிரின்ஸ் படத்தில் நடித்தார். தெலுங்கிலும் தனது மார்க்கெட்டை உயர்த்தலாம் என்ற நோக்கத்தில் நடித்த பிரின்ஸ் படம் பெரும் தோல்வி அடைந்தது. அவரது கரியரில் சீமராஜா என்ற மிகப்பெரிய தோல்வி படத்துக்கு பிறகு பிரின்ஸ் மாபெரும் தோல்வி படமாக அமைந்தது. தோல்வியோடு மட்டுமின்றி ஒரு வாரத்திலேயே திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்டது.

காப்பாற்றிய மாவீரன்: பிரின்ஸ் படத்தின் தோல்வி படுதோல்வியாக அமைந்தது. இதன் காரணமாக மடோன் அஸ்வின் இயக்கத்தில் வெளியான மாவீரன் படத்தை ரொம்பவே எதிர்பார்த்திருந்தார் சிவகார்த்திகேயன். அவரது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அடுத்ததாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்துவருகிறார் சிவா. கமல் ஹாசன் தயாரிக்கிறார்.

உனக்கு ஐந்து லட்சமா?: இந்தச் சூழலில் சிவகார்த்திகேயன் அவர் தாயிடம் பல்பு வாங்கிய சம்பவம் தெரியவந்திருக்கிறது. அதாவது கலக்கப்போவது யாரு டைட்டிலை வென்றுவிட்டு தனது தாய்க்கு ஃபோன் செய்திருக்கிறார் சிவகார்த்திகேயன். அப்போது அவரது தாய் சொல்லுப்பா என்று சொல்ல; இவரோ அம்மா நான் கலக்கப்போவது யாரு வென்றுவிட்டேன் என சொல்லியிருக்கிறார்.

அதற்கு அவரோ அப்படியா சரி ப்பா என கூற; அம்மா அம்மா உண்மையிலே நான் ஜெயிச்சிட்டேன். ஐந்து லட்சம் ரூபாய் பரிசு தராங்க என தெரிவித்திருக்கிறார். அதற்கும் அசராத சிவாவின் அம்மா, 'ஆமா உனக்கு யார் ஐந்து லட்சம் தர போறாங்க. சும்மா இருப்பா ஆமா அந்த எம்.பி.ஏ படிப்பு என்ன ஆச்சு என கேட்டுவிட்டு சீக்கிரம் படிக்கிற வேலையை பாருப்பா' என சொல்லி ஃபோனை வைத்துவிட்டாராம். இந்தத் தகவலை சிவகார்த்திகேயன் ஒரு நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X