சிவகார்த்திகேயனுக்கு நடந்த காதல் தோல்வி பற்றி தெரியுமா?.. அவரே சொன்னதை கேளுங்க

சென்னை: சிவகார்த்திகேயன் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்துவருகிறார். மேலும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்திலும் ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கிறார். இரண்டு படங்கள் மீதும் அவரும், அவரது ரசிகர்களும் உச்சக்கட்ட நம்பிக்கையை வைத்திருக்கிறார்கள். அமரன் கொடுத்த மெகா வெற்றியை இந்தப் படங்களிலும் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்கிற முனைப்பில் எஸ்கே உழைத்துவருவது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் அவரது காதல் தோல்வி குறித்து தெரியவந்திருக்கிறது.

சிவகார்த்திகேயன் சின்னத்திரையிலிருந்து சினிமாவுக்கு வந்தவர். ஆரம்பத்தில் ஏகப்பட்ட விமர்சனங்களை சந்தித்த அவர்; சில படங்களிலேயே காணாமல் போய்விடுவார் என்று பலரும் நினைத்தார்கள். ஆனால் தன்னுடைய உழைப்பை நூறு சதவீதம் கொட்டியதால் அவரை சினிமா வெளியே அனுப்பாமல் தனக்குள்ளேயே வைத்துக்கொண்டது. இதன் காரணமாக வரிசையாக அவர் ஹிட் படங்களை கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக கோலிவுட்டில் முன்னேற ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Throwback Stories Sivakarthikeyan

முன்னணி நடிகர்: அவரது வளர்ச்சியை டாக்டர், டான் ஆகிய இரண்டு படங்கள் உயரத்துக்கு கொண்டு செல்ல ஆரம்பித்தன. அந்த இரண்டு படங்களுமே 100 கோடி ரூபாயை வசூலித்தன.அதனைத் தொடர்ந்து நடித்த பிரின்ஸ் படம் தோல்வியடைந்தது. சுதாரித்துக்கொண்ட அவர் மீண்டும் கதைகள் தேர்வில் அதீத கவனம் செலுத்த ஆரம்பித்தார். அந்தவகையில் அவர் நடித்த மாவீரன், அயலான் ஆகிய இரண்டு படங்களுமே மெகா ஹிட்டாகின. இதனால் அவர் முன்னணி நடிகர் என்ற இடத்தை உறுதி செய்துகொண்டார்.

அமரன் மெகா வெற்றி: இப்படிப்பட்ட சூழலில்தான் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்தார். கமல் தயாரிப்பில் சாய் பல்லவி உள்ளிட்டோரும் நடித்திருந்தார்கள். படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்ட அந்தப் படம் வசூல் ரீதியாகவும் சூப்பர் வரவேற்பை பாக்ஸ் ஆஃபிஸில் பெற்றது. உலகம் முழுவதும் அந்தப் படம் 350 கோடி ரூபாய் வசூலித்தது. அந்த மெகா வெற்றியின் காரணமாக சிவகார்த்திகேயன் இப்போது டாப் 3 ஹீரோக்கள் லிஸ்ட்டுக்குள் இருக்கிறார். சம்பளத்தையும் உயர்த்தியிருக்கிறார்.

அடுத்த படங்கள்: அவர் இப்போது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்திலும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்திலும் நடித்துவருகிறார். இரண்டு படங்களுமே மெகா ஹிட்டாகும் என்கிற நம்பிக்கை அவரிடமும், அவரது ரசிகர்களிடமும் இருக்கிறது. குறிப்பாக பராசக்தி படத்தை புறநானூறு என்ற பெயரில் சூர்யாவை வைத்து இயக்க சுதா திட்டமிட்டிருந்ததும், அறிவிப்பு வெளியானதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் சில காரணங்களால் அந்தப் படத்திலிருந்து சூர்யா வெளியேறிவிட்டார்.

காதல் தோல்வி: இந்நிலையில் சிவகார்த்திகேயனின் வாழ்க்கையில் நடந்த காதல் தோல்வி குறித்து தெரியவந்திருக்கிறது. அதாவது அவர் ஒரு பெண்ணை ஒருதலையாக காதலித்தாராம். காதலை அந்தப் பெண்ணிடமும் சொல்லவில்லையாம். அந்த சமயத்தில் அந்த பெண் இன்னொரு பையனை காதலித்ததால் இவரது ஒருதலை காதல் முடிவுக்கு வந்துவிட்டதாம். சில காலம் கழித்து இவர் விஜய் டிவியில் வேலை செய்துகொண்டிருந்தபோது அந்தப் பெண்ணை ஒரு ஷாப்பிங் மாலில் பார்த்தாராம். அப்போது வேறு ஒரு பையனோடு வந்ததை பார்த்து சிவகார்த்திகேயன் ரொம்பவே சந்தோஷப்பட்டாராம். இதனை அவர் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X