தனுஷ் - ஐஸ்வர்யா குடும்ப பிரச்னை நமக்கு எதுக்கு?.. சிவகார்த்திகேயன் இப்படி சொல்லிட்டாரே ப்பா
சென்னை: ரஜினிகாந்த்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை தனுஷ் காதலித்து திருமணம் செய்துகொண்டார். பத்து வருடங்களுக்கும் மேலாக ஒன்றாக வாழ்ந்த அவர்கள் கடந்த வருடம் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்று பிரிந்தார்கள். அவர்களது பிரிவு குடும்பத்தினருக்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் உச்சக்கட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்படிப்பட்ட சூழலில் தனுஷ் - ஐஸ்வர்யா குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் பேசியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராக தற்போது விளங்கிக்கொண்டிருக்கிறார் தனுஷ். ஆடுகளம், அசுரன் ஆகிய படங்களுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதினையும் வென்றவர் அவர். இப்போது அவரை புகழ்பவர்கள் எல்லாம் அவர் நடிக்க வந்த புதிதில் கடுமையாக கிண்டல் செய்தார்கள். முக்கியமாக அவரது உருவத்தை வைத்து ஓபனாகவே விமர்சித்தார்கள். ஆனால் தனுஷ் அதனையெல்லாம் கண்டுகொள்ளவில்லை. மாறாக தனது திறமையில் மட்டுமே தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்த ஆரம்பித்தார்.
ரஜினி மகளுடன் திருமணம்: அப்படி அவர் திறமையை வளர்த்த சமயத்தில் நடித்த படம்தான் காதல் கொண்டேன். அந்தப் படத்தை அவரது சகோதரர் செல்வராகவன் இயக்கியிருந்தார். அதீல் அவரது நடிப்பை பார்த்து மிரண்டு போனவர்களில் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும் ஒருவர். அதனைத் தொடர்ந்து பாராட்டுவதற்காக தனுஷை நேரில் சந்தித்தார் ஐஸ்வர்யா. அப்போது இரண்டு பேருக்கும் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. இருவரது காதலுக்கும் ரஜினிகாந்த் சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து அவர்களுக்கு கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

நிம்மதியான வாழ்க்கை: காதல் திருமணத்துக்கு பிறகு இரண்டு பேரும் தங்களது வாழ்க்கையை உச்சக்கட்ட மகிழ்ச்சியோடு வாழ்ந்துவந்தார்கள். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்களும் இருக்கிறார்கள். மனைவியின் இயக்குநர் ஆசையை தெரிந்துகொண்டு ஐஸ்வர்யா இயக்கிய 3 படத்தில் ஹீரோவாக நடித்தார் தனுஷ். மேலும் ஐஸ்வர்யாவின் இரண்டாவது படமான வை ராஜா வை படத்தில் கெஸ்ட் ரோலிலும் நடித்துக்கொடுத்தார். அதேபோல் பல விழாக்களுக்கு இரண்டு பேரும் ஒன்றாக வந்து கலந்துகொள்வதையும் வழக்கமாக வைத்திருந்தார்கள்.
விவாகரத்து: ஆனால் யாரின் பார்வை பட்டதோ தெரியவில்லை சில வருடங்களுக்கு முன்பு அவர்கள், 'தாங்கள் இரண்டு பேரும் பிரிந்து தனித்தனி பாதையில் பயணிக்கவிருக்கிறோம்' என்று சொல்லி தங்களது பிரிவை அறிவித்தார்கள். அதன் பிறகு சில வருடங்கள் கழித்து அதாவது கடந்த வருடம் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மனுத்தாக்கல் செய்தார்கள். இரண்டு பேருக்குமே விவாகரத்தில் விருப்பம் இருந்ததன் காரணமாக அவர்களுக்கு நீதிமண்றம் டைவர்ஸ் வழங்கியது. இந்த விவகாரம் ரஜினிகாந்த்துக்கு உச்சக்கட்ட மன வேதனையை கொடுத்திருப்பதாக விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன் பேச்சு: இந்நிலையில் இவர்கள் இருவர் பற்றி சிவகார்த்திகேயன் பேசிய வீடியோ ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது. 3 பட சமயத்தில் அனிருத், தனுஷ், ஐஸ்வர்யா கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றை தனியார் நிகழ்ச்சியில் சிவாதான் தொகுத்து வழங்கினார். அப்போது தனுஷ், 'காதல் கொண்டேன் ட்ரெய்லர் பார்த்தபோதே என்னிடம் ஐஸ்வர்யா விழுந்துவிட்டார். நீங்கள் எல்லாம் தவறாக புரிந்துகொண்டிருக்கிறீர்கள். நான் அவரை (ஐஸ்வர்யாவை) தேடி போகவில்லை அவர்தான் என்னை தேடி வந்தார்' என்று கூறினார்.
அதற்கு ஐஸ்வர்யாவோ சிவகார்த்திகேயனை பார்த்து, 'இப்போது இதற்கு நீங்கள் என்ன கவுண்ட்டர் கொடுக்கப்போகிறீர்கள் என்று நான் கேட்டே ஆக வேண்டும்' என்று கூற, உடனே பதறிய எஸ்கேவோ ஆடியன்ஸை பார்த்து, 'நாமெல்லாம் பேசிக்கொண்டு இருப்போம். அவங்க குடும்ப பிரச்னை நமக்கு எதுக்கு பாஸ்' என்று ஜாலியாக கூறினார். அந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்களோ, சிவா செம விவரம்தான் போங்க என்று கமென்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











