நல்லா யூஸ் பண்ணாரு.. தனுஷ்ட்ட போராடினேன்.. ஓபனாக பேசிய சிவகார்த்திகேயன்
சென்னை: தனுஷ் கைகளில் இப்போது ஏகப்பட்ட படங்கள் இருக்கின்றன. தற்போதைய தேதியில் கோலிவுட்டில் அதிக படங்களை கைகளில் வைத்திருக்கும் ஹீரோ என்றால் அவர் தனுஷ்தான். அந்த அளவுக்கு படங்கள் இருக்கின்றன. இதற்கிடையே இப்போது டாப் ஹீரோக்களில் ஒருவராக இருக்கும் சிவகார்த்திகேயனையும் சினிமாவுக்குள் அழைத்து வந்தவர் தனுஷ்தான். இந்நிலையில் தனுஷ் குறித்து சிவகார்த்திகேயன் பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியிருக்கிறது.
தனுஷின் நடிப்பில் கடைசியாக ராயன், கேப்டன் மில்லர் ஆகிய திரைப்படங்கள் வெளியாகின. அவற்றில் கேப்டன் மில்லருக்கு போட்டியாக சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படமும் வெளியானது. இரண்டு படங்களில் எந்தப் படம் வெல்லும் என்ற எதிர்பார்ப்பு ஒட்டுமொத்த கோலிவுட்டிலும் இருந்த சூழலில்; அசால்ட்டாக பந்தயம் அடித்தது அயலான். இதனால் தனுஷின் ரசிகர்கள் கொஞ்சம் அப்செட்டிலேயே இருந்தார்கள். அந்த அப்செட்டை அதிகப்படுத்தும்படிதான் அமைந்தது ராயன் படத்தின் ரிசல்ட்டும். இத்தனைக்கும் அது தனுஷுக்கு 50ஆவது படமாகும்.

குபேரா: இப்போது அவர் சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ஏற்கனவே தெலுங்கில் தனது மார்க்கெட்டை வளர்ப்பதற்காக அவர் நடித்த வாத்தி படம் வாரிவிட்டது. எனவே குபேரா படமும் அந்த லிஸ்ட்டில் சேருமா இல்லை ஹிட் லிஸ்ட்டில் இணையுமா என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்திருக்கிறது. குபேராவில் தனுஷுடன் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.
தனுஷின் லைன் அப்: இது ஒருபக்கம் இருக்க கோலிவுட்டில் இப்போது அதிக படங்களை வைத்திருப்பது தனுஷ்தான். அடுத்ததாக அவர் ஹிந்தியில் ஒரு படம், ஹாலிவுட்டில் ஒரு படம், லப்பர் பந்து இயக்குநருடன் ஒரு படம், அமரன் இயக்குநருடன் ஒரு படம், போர்தொழில் இயக்குநருடன் ஒரு படம், இளையராஜாவின் பயோபிக், இட்லி கடை என பல படங்களை வைத்திருக்கிறார். இவற்றில் இட்லி கடை படத்தை அவரே இயக்கி நடிக்கவும் செய்கிறார். அந்தப் படத்தின் வேலைகள் மும்முரமாக போய்க்கொண்டிருக்கின்றன.
எஸ்கே, தனுஷ்: இதற்கிடையே தற்போது டாப் ஹீரோக்களில் ஒருவராக இருக்கும் சிவகார்த்திகேயனை சினிமாவுக்குள் அழைத்து வந்தவர் என்றால் அவர் தனுஷ்தான். தான் நடித்த 3 படத்தில் சிறிய ரோல் கொடுத்தார். அதற்கு பிறகு அவரை வைத்து எதிர்நீச்சல் என்ற படத்தை தயாரித்தார். தயாரித்ததோடு மட்டுமின்றி வெற்றிமாறனிடம் சொல்லி கதையையும் அவரது உதவி இயக்குநரை கொண்டு வரவும் செய்தார். இப்படி சிவாவின் வளர்ச்சியில் தனுஷின் பங்கு அளப்பரியது.
போராடுனேன்: சூழல் இப்படி இருக்க இருவருக்கும் மனஸ்தாபம் என்றெல்லாம் பேச்சுக்கள் ஓடிக்கொண்டிருந்தன. இந்நிலையில் தனுஷ் குறித்து சிவகார்த்திகேயன் பேசியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு அவர் அளித்த பேட்டியில், "எதிர்நீச்சல் படத்தின் பாடலில் தனுஷுடன் நடனமாட நான் ரொம்பவே போராடினேன். அவர் தனக்கு இருக்கும் உடலை சரியாக பயன்படுத்திக்கொள்கிறார். அவரை மாதிரி நடனம் ஆட வேண்டும்" என்றார்.


Click it and Unblock the Notifications











