சென்சார் அதிகாரிகளையே மிரளவிட்ட எஸ்.ஜே.சூர்யா.. தலைவன் வேற ரகம் பார்த்து உஷாரு
சென்னை: வாலி படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமான எஸ்.ஜே.சூர்யா இதுவரை கம்மியான படங்களையே இயக்கியிருக்கிறார். ஆனால் அவர் இயக்கிய படங்கள் ஒன்று விமர்சன ரீதியாக கொண்டாடப்படும் அல்லது வணிக ரீதியாக பெரிய ரெஸ்பான்ஸை பெறும். கடந்த சில வருடங்களாக இயக்கத்திலிருந்து ஒதுங்கி நடிப்பில் மட்டும் கவனம் செலுத்திவந்த அவர்; இப்போது கில்லர் என்ற படத்தை இயக்கி ரீ என்ட்ரி கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
வசந்த் உள்ளிட்டோரிடம் உதவி இயக்குநராக இருந்த எஸ்.ஜே.சூர்யா; அஜித்தை வைத்து வாலி படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார். கொஞ்சம் பிசகினாலும் எக்குத்தப்பாக புரிந்துகொள்ளக்கூடிய கதையாக அது இருந்தாலும் சூர்யாவின் அட்டகாசமான மேக்கிங் படத்தை மெகா ஹிட்டாக்கியது. அதற்கு பிறகு விஜய்யை வைத்து இயக்கிய குஷியும் மெகா ப்ளாக் பஸ்டர். இரண்டு படங்களின் வெற்றிக்கு பிறகு ஹீரோவாக அறிமுகமான அவர் நியூ, அன்பே ஆருயிரே உள்ளிட்ட படங்களை இயக்கி நடித்தார்.

சம்பவம் செய்த சூர்யா: அவர் ஹீரோவாக நடித்தாலும் அப்படங்களும் ஹிட்டாகவே செய்தன. குறிப்பாக அவர் தன்னுடைய படங்களில் எடுத்துக்கொண்ட கதைக்களங்கள் அப்போதைக்கு தமிழ் சினிமாவில் யாரும் தொடாத சப்ஜெக்ட்டுகள். இதன் காரணமாகவும் அவர் தனித்து தெரிய ஆரம்பித்தார். வரிசையாக ஹிட்டுகளை கொடுத்த அவருக்கு நடிப்பதற்கான வாய்ப்புகள் வரிசையாக கிடைத்தன. எனவே அதிலும் கவனம் செலுத்திய அவர் கடைசியாக இசை படத்தை இயக்கினார்.
நடிகராக பிஸி: இசை படமும் வித்தியாசமான அட்டெம்ப்ட்தான் என்றாலும் பெரிதாக க்ளிக ஆகவில்லை. இனி இயக்கத்துக்கு கொஞ்ச நாட்கள் குட் பை சொல்லிவிட்டு இறைவி, குட் பேட் அக்லி, மாநாடு, வீர தீர சூரன், கேம் சேஞ்சர் என பல படங்களில் வில்லனாக நடித்தார். இயக்குநராகவும், ஹீரோவாகவும் எப்படி பெரிய அப்ளாஸை அள்ளினாரோ அதேபோல் வில்லனாகவும் தரமான நடிப்பை வெளிப்படுத்தி தடத்தை ஆழமாக பதித்துவிட்டார். தமிழில் பத்து படங்கள் வெளியானால் அதில் குறைந்தபட்சம் இரண்டு படங்களிலாவது சூர்யா இருக்கும் நிலைமை உருவாகிவிட்டது.
கில்லர் எஸ்.ஜே.சூர்யா: அவர் எவ்வளவுதான் நடித்தாலும் மீண்டும் இயக்க வேண்டுமென்று பலரும் ஆசைப்பட்டார்கள். சூழல் இப்படி இருக்க கில்லர் என்கிற பெயரில் புதிய படத்தை இயக்குகிறார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்புதான் வந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஏற்கனவே நியூ, அன்பே ஆருயிரே படங்களில் இந்த கூட்டணி இணைந்து தரமான சம்பவங்கள் செய்தது குறிப்பிடத்தக்கது.
அந்தணன் பேட்டி: இந்நிலையில் எஸ்.ஜே.சூர்யா பற்றி பிரபல பத்திரிகையாளர் அந்தணன் பேசியிருக்கும் விஷயம் கவனத்தை ஈர்த்துள்ளது. தனியார் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில், "ஜனநாயகன், பராசக்தி படங்களுக்கு சென்சார் அதிகாரிகள் பிரச்னை கொடுத்ததை பார்த்தோம். ஆனால் எஸ்.ஜே.சூர்யா அவர்களையே அலற விட்டவர். அவருடைய ஒரு படம் சென்சாருக்கு சென்றது. தேவையில்லாத சில விஷயங்களை எல்லாம் திருத்தம் என்கிற பெயரில் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். உடனே வாக்குவாதத்தை ஆரம்பித்துவிட்ட எஸ்.ஜே.சூர்யா ஒருகட்டத்தில் கோபமாகி தனது மொபைலை தரையில் போட்டு நொறுக்கிவிட்டார். அதை பார்த்து அதிகாரிகள் பயந்துவிட்டார்களாம். பிறகு எப்படியோ அந்தப் பிரச்னை எல்லாம் தீர்ந்து படம் ரிலீஸாகிவிட்டது" என்றார்.


Click it and Unblock the Notifications











