சமந்தாவை பார்த்தால் சூப்பர்தான்.. அடேங்கப்பா நாக சைதன்யா காதலி சோபிதா ஓபனாக சொல்லிட்டாங்களே

சென்னை: சமந்தா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தியிலும் பிஸியான நடிகை. நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர்; சில வருடங்களுக்கு முன்பு பிரிந்தார். பிறகு அவருக்கு மையோசிடிஸ் எனும் அரியவகை தோல் நோய் வந்தது. அதிலிருந்து மீண்டிருக்கும் அவர் இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அநேகமாக அடுத்தடுத்து அவர் நடிக்கும் பற்றிய அறிவிப்புகள் விரைவில் வரலாம்.

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிறிய ரோலில் நடித்து சினிமா எண்ட்ரி கொடுத்தவர் சமந்தா. பிறகு பாணா காத்தாடி படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அந்தப் படத்துக்கு பிறகு தமிழில் அவருக்கு வரிசையாக வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வர ஆரம்பித்தார். அழகு மட்டுமின்றி திறமையும் அவருக்கு இருந்ததால் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகமும் அவருக்கான கதவை திறந்தது.

throwback stories samantha

நாக சைதன்யாவுடன் காதல்: தெலுங்கில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ரீமேக்கில் நடித்தபோது அதன் ஹீரோ நாக சைதன்யாவை காதலித்தார் சாம். இருவருக்கும் வீட்டு சம்மதத்துடன் கடந்த 2017ஆம் ஆண்டு கோவாவில் கிராண்டாக திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகும் அவர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். இரண்டு பேருமே காதலோடு வாழ்க்கையை நகர்த்திவந்த சூழலில்; நாங்கள் பிரிவதாக திடீரென இருவரும் அறிவித்தனர். அதற்கு காரணம் சமந்தா தொடர்ந்து நடித்ததுதான் என்று சொல்லப்படுகிறது.

வீழ்ச்சி டூ எழுச்சி: திருமண முறிவுக்கு பிறகு சமந்தா திரையுலக கரியரில் ஃபுல் ஃபார்மில் இருந்தார். முக்கியமாக புஷ்பா படத்தில் அவர் போட்ட கவர்ச்சி நடனத்துக்கு பலரும் சொக்கிப்போனார்கள். சூழல் இப்பட் இருக்க அவருக்கு மையோசிடிஸ் நோய் வந்தது. அந்த நோயிலிருந்து மீண்ட அவர் குஷி, சாகுந்தலம் படங்களில் நடித்தார். இரண்டு படங்களுமே தோல்வியடைந்தன. பிறகு குட்டி பிரேக் எடுத்த அவர் இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். சிட்டாடல் வெப் சீரிஸ் மற்றும் சில படங்களில் கமிட்டாகியிருக்கிறார்.

நாக சைதன்யா திருமணம்: இதற்கிடையே சமந்தாவுடனான பிரிவுக்கு பிறகு நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்தார் நாக சைதன்யா. இரண்டு பேருக்கும் அண்மையில்தான் ஹைதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. விரைவில் அவர்களின் திருமணம் நடக்கவிருக்கிறது. இந்த நிச்சயதார்த்தம் குறித்து பேசிய நடிகரும் நாக சைதன்யாவின் தந்தையுமான நாகார்ஜுனா, ஒரு பிரிவுக்கு பிறகு சைதன்யா மன உளைச்சலில் இருந்தார். எங்கள் குடும்பமும் அப்படித்தான் இருந்தது. ஒருவழியாக இப்போது அவருக்கான சந்தோஷத்தை தேடிக்கொடுத்துவிட்டோம் என்று திருப்தியுடன் தெரிவித்திருந்தார்.

சோபிதாவின் பேட்டி: இந்நிலையில் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொள்ளவிருக்கும் சோபிதா துலிபாலா; சமந்தா தொடர்பாக ஒரு பேட்டியில் பேசியது ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் பேட்டியில் பேசிய அவர், "சமந்தாவின் திரையுலக பயணத்தை பார்த்தால் சூப்பர் கூலாகத்தான் இருக்கிறது. அவருடைய படங்களை எடுத்துக்கொண்டால் அவர்தான் அந்தப் படங்களின் தலைப்பு செய்தியாக இருக்கிறார். அதைப் பார்க்கும்போது ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறது" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X