Vijay - பாபா பட தோல்வி.. பார்ட்டி வைத்து கொண்டாடினாரா விஜய்?.. பரபரக்கும் தகவல்

சென்னை: Rajini and Vijay (ரஜினி மற்றும் விஜய்) பாபா பட தோல்வியை கோலிவுட்டில் சில நடிகர்கள் பார்ட்டி வைத்து கொண்டாடினார்களாம்.

பேருந்து நடத்துநராக தனது வாழ்க்கையை தொடங்கிய ரஜினிகாந்த், சினிமா மீது இருக்கும் ஆர்வத்தால் வேலையை உதறிவிட்டு சினிமா கல்லூரியில் இணைந்து படித்தார். அதனையடுத்து பாலசந்தர் கண்ணில் படம் அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தப் படத்தில் ரஜினியுடன் கமல் ஹாசனும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Some actors in Kollywood celebrated the failure of Baba by throwing a party

போராட்ட ரஜினி: கமல் ஹாசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிவிட்டதால் அவருக்கான போராட்டங்கள் சினிமாவில் கொஞ்சம் குறைவாகத்தான் இருந்தது. ஆனால் ரஜினிக்கு அப்படி இல்லை. எந்த பின்னணியும் இல்லை, ஹீரோவுக்கான முக லட்சணம் இல்லை என விமர்சனங்களையும், பல போராட்டங்களையும் சந்தித்தவர். இப்போது அவர் சூப்பர் ஸ்டாராக அதிக சம்பளம் வாங்கும் ஹீரோவாக இருந்தாலும் ஆரம்பக்காலட்டத்தில் அவர் கடுமையாக அவமானப்பட்டிருக்கிறார்.

போராட்டங்களை தாண்டிய வெற்றி: இப்படி பல அவமானங்களையும், போராட்டத்தையும் சந்தித்த ரஜினிகாந்த் தனது திறமையாலும், ஸ்டைலாலும், விடாமுயற்சியாலும் பெரும் வெற்றி கண்டு மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். அவர் இதுவரை 169 படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக அவர் நடிப்பில் வெளியான ஜெயிலர் படம்கூட மெகா ஹிட்டாகி 700 கோடி ரூபாய்வரை வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பாபா: ஆனால் ரஜினிகாந்த் ரொம்பவே எதிர்பார்த்த படம் பாபா. ஏனெனில் அந்தக் கதையை ரஜினி எழுதியிருந்தார். மேலும் தனது மனதுக்கு நெருக்கமான கதையாகவும் அதை கருதினார். ஆனால் 2002ஆம் ஆண்டு படம் வெளியானது. ஆனால் படம் படுதோல்வியை சந்தித்தது. இதனால் விநியோகஸ்தர்களுக்கு ரஜினிகாந்த் பணத்தை திருப்பி கொடுக்கும் அளவுக்கு நிலைமை சென்றது.

ரஜினி காலி: பாபா படம் அளவுக்கதிமான எதிர்பார்ப்போடு வந்து பெரிய தோல்வியை சந்தித்தது. இதனால் ரஜினிகாந்த்தால் இனி எழுந்திருக்கவே முடியாது காலியாகிவிட்டார் என்று பலரும் கருதினார்கள். ஆனால் அடுத்த படமான சந்திரமுகியிலேயே மெகா ப்ளாக் பஸ்டரை அவர் கொடுத்தது தனிக்கதை.

யாரும் நினைக்காத உயரம்: அதாவது ரஜினியின் சூப்பர் ஸ்டார் பட்டம் மீது இன்றுவரை சிலருக்கு கண் இருக்கிறது. ஏன் சமீபத்தில்கூட விஜய்க்கும் ரஜினிக்கும் இடையே அந்த பஞ்சாயத்து ஓடியது அனைவரும் அறிந்தது. இப்போதே இப்படி என்றால் அப்போது சொல்லவா வேண்டும். அந்தக் காலகட்டத்தில் நடிக்க வந்தவர்கள், நடித்துக்கொண்டிருந்தவர்களுக்கு ஒரே நோக்கம் நாம் சூப்பர் ஸ்டார் ஆகிவிட வேண்டும் என்பதுதான். ஆனால் ரஜினியோ யாரும் நினைத்து பார்க்க முடியாத உயரத்தில் இருந்தார்.

Some actors in Kollywood celebrated the failure of Baba by throwing a party

பார்ட்டி வைத்தாரா விஜய்?: இந்நிலையில் பாபா படத்தின் தோல்வியின் போது நடந்ததாக சில விஷயங்கள் கூறப்படுகின்றன. அதாவது ரஜினியின் தோல்வியை எதிர்பார்த்திருந்த சிலர் பாபா சறுக்கியத விஜய்யும் அவரது தந்தையும் பார்ட்டி வைத்து கொண்டாடினார்கள் என்று் அந்த சமயத்தில் கிசுகிசு பரவியதாம். அதேசமயம் விஜய் பார்ட்டி வைத்தார் என்பதில் உறுதி இல்லை ஆனால் சில நடிகர்கள் பார்ட்டி வைத்தது உண்மைதான் என்று பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X