மதுரை பற்றி அஜித் சொன்னது.. சாப்பிடும்போது பட்ட அசிங்கம்.. சூரி ஓபன் டாக்.. எவ்வளவு பட்டிருக்காரு பாருங்க

சென்னை: தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக தனது பயணத்தை ஆரம்பித்த சூரி இப்போது ஹீரோவாக ஜொலித்துவருகிறார். இவ்வருடத்தில் அவர் நடித்த மாமன் படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. அடுத்ததாக மண்டாடி என்ற படத்தில் நடித்திருக்கிறார். இதுவும் அவருக்கு பெரிய வெற்றியை பெற்றுக்கொடுத்து அவரது கரியரில் முக்கியமான படமாக அமையும் என்ற எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது. இந்நிலையில் சூரி அளித்த பேட்டி ஒன்று ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டாகியிருக்கிறது.

சினிமாவில் கிடைத்த வேலைகளை எல்லாம் செய்து; எப்படியாவது வென்றுவிடுவோம் என்ற நம்பிக்கையோடு உழைத்தவர் சூரி. காதல், தீபாவளி என ஏராளமான படங்களில் சின்ன சின்ன ரோல்களை செய்த அவருக்கு; வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மிகப்பெரிய அடையாளத்தை தந்தது. புரோட்டா சாப்பிடும் காமெடி அவரது நீண்ட கால வெற்றி பசியை அணைத்தது என்றே சொல்ல வேண்டும். அந்தப் படத்திலிருந்து சூரியின் காட்டில் மழைதான் பெய்ய ஆரம்பித்தது. விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியில் கலக்க ஆரம்பித்தார்.

ஹீரோ சூரி: தொடர்ச்சியாக காமெடியில் ஜொலித்த அவருக்கு வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் கதையின் நாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி சூப்பராக நடித்திருந்தார். படமும் சூப்பர் ஹிட்டானது. அப்போதிருந்து காமெடி ரோல்களை மூட்டை கட்டிவிட்டு ஹீரோவாக தொடர்ந்துவருகிறார். அப்படி அவர் நடித்த கொட்டுக்காளி, கருடன் படங்கள் எல்லாம் அவருக்கு நல்ல ரெஸ்பான்ஸையே கொடுத்தன. ஹீரோ சூரிக்கென்றும் தனி வியாபாரமும் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

Soori Opens Up Emotional Real-Life Incident That Changed His Life
Photo Credit:

அடுத்த படம்: இந்த வருடத்தில் அவர் நடித்த மாமன் படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. அதனையடுத்து மண்டாடி என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படமும் அவருக்கு கண்டிப்பாக பெரிய பெயரை பெற்றுத்தரும் என்று நம்பப்படுகிறது. இது தவிர்த்து இன்னும் சில இயக்குநர்களிடம் அவர் கதை கேட்டிருப்பதாகவும்; அதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் தனது ஆரம்ப கால வாழ்க்கை குறித்து பேசிய விஷயங்கள் கவனத்தை ஈர்த்திருக்கின்றன.

சூரி பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "அஜித்தின் ஜி படத்தில் நடித்தபோது எனக்கு அடிபட்டுவிட்டது. அதை பார்த்த அஜித் என்னிடம், எந்த ஊர் என்று கேட்டார். மதுரை என சொன்னேன். அது எப்படி மதுரைக்காரங்க எல்லோரும் இவ்வளவு ஃபயராக இருக்கிறார்கள் என அவர் கேட்டார். பெயிண்ட்டர் வேலை செய்தபோது எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். அப்போது எங்கள் முதலாளி வந்தார். வந்தவர் என்ன நினைத்தார் என்று தெரியவில்லை எல்லோரும் எழுந்து ஓரமாக போங்க என சொல்லிவிட்டு சாப்பிட்ட இலையை இழுத்து ஓரமாக போட்டார்.

அப்படியே மாறியது: அப்படியே காலங்கள் ஓடி வெண்ணிலா கபடி குழு ரிலீஸாகி எனக்கு பெயர் கிடைக்க ஆரம்பித்தது. அந்த சமயத்தில் ஒரு துணி கடைக்கு சென்றோம். என்னை அடையாளம் கண்டுகொண்டு என்னிடம் வந்து ஆட்டோகிராஃப் கேட்டு ஃபோட்டோ எடுத்துக்கொண்டாரக்ள். உடனே அந்த கடையின் மேனேஜர் வந்து என்னை அவர்களுடைய முதலாளில் ரூமில் அமர சொன்னார். உங்களுக்கு துணி அங்கே வரும். அங்கேயே பார்த்து எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னார். பெயிண்ட்டர் வேலை பார்த்தபோது சாப்பாடு இலையை ஒரு ஓனர் இழுத்தார் அல்லவா. அவரது கடைதான். அந்த ஓனரின் ரூமிலேயே என்னை அமர செய்தார்கள்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X