Sridevi: முதல் லேடி சூப்பர் ஸ்டார் ஸ்ரீதேவியின் வாழ்நாள் கனவு... கடைசியில் நடந்தது இதுதான்!
சென்னை: கந்தன் கருணை படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதேவி.
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த அவர், பின்னாளில் இந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக மாஸ் காட்டினார்.
ரசிகர்களின் மனதில் நிரந்தர இடம் பிடித்துவிட்ட ஸ்ரீதேவியின் 60வது பிறந்தநாள் இன்று.
அவர் மரணிக்கும் போது தனது மகள்கள் குறித்து அவருக்கு இருந்த வாழ்நாள் கனவும் ஆசையும் தற்போது என்ன ஆனது என்பது தெரியவந்துள்ளது.

ஸ்ரீதேவியின் வாழ்நாள் கனவு என்ன ஆனது..?: 1963ம் ஆண்டு சிவகாசியில் உள்ள மீனாம்பட்டி கிராமத்தில் பிறந்த ஸ்ரீதேவி, 4வது வயதிலேயே கந்தன் கருணை படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 1976ல் மூன்று முடிச்சு என்ற படத்திற்காக, தனது 13வது வயதில் நாயகியாக அறிமுகமான அவர், பின்னர் முன்னணி நடிகையாக கலக்கத் தொடங்கினார். 1980களில் கோலிவுட்டை கலக்கிய ரஜினி, கமல் இருவருக்கும் ஆஸ்த்தான நாயகி என்றால் அது ஸ்ரீதேவி தான்.
ஒருகட்டத்தில் தமிழை கடந்து தெலுங்கு, இந்தி என வலம் வரத் தொடங்கிய ஸ்ரீதேவி, 50 ஆண்டுகளாக 5 மொழியில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கோலிவுட்டின் கனவுக் கன்னியை இந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக ரசிகர்கள் கொண்டாடினர். இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவி 2018ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி துபாயில் மரணமடைந்தார். அவர் மரணிக்கும் முன்னர் தனது மகள்கள் ஜான்வி கபூர், குஷி கபூர் இருவரையும் நினைத்து ரொம்பவே கலங்கியுள்ளாராம்.
அதாவது, பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான போனிகபூரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஸ்ரீதேவி. ஆனால் போனிகபூருக்கு ஸ்ரீதேவி இரண்டாவது மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் போனி கபூருக்கு ஏற்கனவே மோனா என்பவருடன் திருமணமாகியிருந்தது. மேலும், அவர்களுக்கு அர்ஜுன் என்ற மகனும், அன்சுலா என்ற மகளும் இருந்தனர். இதனிடையே போனிகபூர் அவரது முதல் மனைவி, குழந்தைகளை பார்க்கக் கூடாது என ஸ்ரீதேவி கூறியதாக சொல்லப்படுகிறது.
இதனால், போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூர் தன்னிடம் ஏதும் பிரச்சினை செய்வாரோ என்ற அச்சமும் ஸ்ரீதேவிக்கு இருந்துள்ளதாம். அதேநேரம் அர்ஜுன் கபூர், ஜான்வி கபூர், குஷி கபூர் மூவரும் அண்ணன், தங்கையாக பழகவேண்டும் எனவும் ஸ்ரீதேவி ஆசைப்பட்டுள்ளார். ஆனாலும் ஸ்ரீதேவி உயிருடன் இருக்கும் வரை இது நடக்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் யாரைப் பார்த்து ஸ்ரீதேவி அஞ்சினாரோ, அதே அர்ஜுன் கபூர் தான் ஸ்ரீதேவியின் மரணச் செய்தி கேட்டு முதல் ஆளாக ஓடிச் சென்றுள்ளார்.
பின்னர் மனைவியையும் அம்மாவையும் பறிகொடுத்த சோகத்தில் இருந்த போனிகபூர், ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகியோருக்கு ஆறுதலாக நின்றுள்ளார். அண்ணன் அர்ஜுன் கபூருடன் தனது மகள்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என ஆசைப்பட்ட ஸ்ரீதேவியின் கனவு, அவர் உயிரிழந்த போது நடந்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் தற்போதும் அர்ஜுன் கபூர் வீட்டிற்கு ஜான்வி கபூர் அடிக்கடி சென்று வருவகு குறிப்பிடத்தக்கது. மேலும் அர்ஜுன் கபூர், ஜான்வி கபூர், குஷி கபூர் மூவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். இந்தச் சம்பவம் ஸ்ரீதேவி ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











