ரஜினிகாந்த்துக்காக 7 நாட்கள் விரதம் இருந்த ஸ்ரீதேவி.. என்ன காரணம் தெரியுமா?.. இவ்வளவு பாசமா?

சென்னை: ரஜினியின் நடிப்பில் கடைசியாக வெளியான வேட்டையன் திரைப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்துவருகிறார். வேட்டையன் போல் இந்தப் படம் கலவையான விமர்சனத்தை பெறாமல் மெகா ப்ளாக் பஸ்டர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார் ரஜினி. இந்தச் சூழலில் அவருக்காக ஸ்ரீதேவி ஏழு நாட்கள் விரதம் இருந்த விஷயம் ஆச்சரியத்தை ரசிகர்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது.

ஜெய்பீம் படத்தின் மூலம் பெரும் கவனம் ஈர்த்த ஞானவேல் இயக்கத்தில் உருவான வேட்டையன் திரைப்படம் கடந்த பத்தாம் தேதி வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்போடு ரிலீஸான படத்துக்கு ரசிகர்கள் தங்களது கலவையான விமர்சனத்தை கொடுத்தனர். அதேசமயம் படத்தின் கதைக்களத்தை அவர்கள் பாராட்ட தவறவில்லை. இதுமாதிரியான கதைக்களத்தை ரஜினிகாந்த் தேர்ந்தெடுத்ததற்காக வாழ்த்துகளையும் தெரிவித்தார்கள். மேலும் ரஜினியின் நடிப்பும் படத்தில் மிக அருமையாக இருந்தது.

throwback stories rajinikanth sridevi

கூலி: வேட்டையன் படத்தை முடித்த கையோடு கூலி படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார் ரஜினி. இதனை லோகேஷ் கனகராஜ் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடித்துவருகிறார்கள். 73 வயதிலும் ரஜினிகாந்த் அடுத்தடுத்து படங்களில் நடித்துவருவது அவரது ரசிகர்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த திரைத்துறையினரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்திருக்கிறது. மேலும் மீசை வைத்த குழந்தையப்பா என்று வைரமுத்து எழுதியது ரஜினிக்கு பக்காவாக பொருந்துகிறது என்றும் புகழ்ந்துவருகிறார்கள்.

மருத்துவமனையில் அனுமதி: இதற்கிடையே ரஜினிகாந்த் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சமீபத்தில் அனுமதிக்கப்பட்டார். நன்றாக இருந்தவர் ஏன் திடீரென மருத்துவமனையில் அட்மிட் ஆனார் என்று அவரது ரசிகர்கள் உச்சக்கட்ட அதிர்ச்சியடைந்தனர். ஆனால் ரஜினிகாந்த்தின் உடல்நிலை சீராக இருக்கிறது என்று குடும்பத்தினர் தெரிவித்தனர். மேலும் அங்கு வைத்து அவருக்கு சிறுநீரக சம்பந்தமான பரிசோதனைகள் செய்யப்பட்டன. மேலும் அடிவயிற்று ரத்த நாளத்தில் வீக்கம் ஏற்பட்டதால் அதற்கான சிகிச்சையும் செய்யப்பட்டது.

விரதம் இருந்த ஸ்ரீதேவி: இந்நிலையில் ரஜினிக்காக ஸ்ரீதேவி விரதம் இருந்த விஷயம் தெரியவந்திருக்கிறது. அதாவது கடந்த 2011ஆம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமாரின் ராணா படத்தில் நடித்தபோது ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அதனையடுத்து சென்னையில் சிகிச்சை திருப்தி அளிக்காததால் அவர் சிங்கப்பூருக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டு நலமுடன் நாடு திரும்பினார். அந்தச் சமயத்தில் ரஜினியின் உடல்நிலையை கேள்விப்பட்ட ஸ்ரீதேவி; அவர் விரைவில் பூரண நலமடைய வேண்டும் என ஷீரடி சாய்ப்பாபாவுக்கு ஏழு நாட்கள் உண்ணாவிரதம் இருந்தாராம்.

செம நட்பு: அதுமட்டுமின்றி புனேவில் இருக்கும் சாய்பாபா கோயிலுக்கு சென்று அங்கும் சிறப்பு பூஜைகளையும் செய்திருக்கிறாராம். முன்னதாக ரஜினியும் ஸ்ரீதேவியும் இணைந்து போக்கிரி ராஜா, நான் அடிமை இல்லை, மூன்று முடிச்சு உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார்கள். ஸ்ரீதேவி இந்திய அளவில் ஃபேமஸ் நடிகையாக வலம் வந்தவர். அவர் கடந்த 2018ஆம் ஆண்டு துபாயில் ஒரு ஹோட்டலில் உடல்நல குறைவால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X