ஹீரோ அங்க அழுதுட்டு இருக்கார்.. நீ என்ன பண்ணிட்டு இருக்க.. திரிஷாவை திட்டிய பிரபல இயக்குநர்

சென்னை: நடிகை திரிஷா கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக முன்னணி நடிகையாக திகழ்ந்துகொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக லியோ படம் வெளியானது. அடுத்ததாக விடாமுயற்சி, தக் லைஃப் உள்ளிட்ட படங்களும் வரவிருக்கின்றன. இந்தச் சூழலில் அஜித்தின் ஃபேவரைட் இயக்குநர் திரிஷாவை ஷூட்டிங் ஸ்பாட்டில் திட்டிய சம்பவம் தெரியவந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது.

ஜோடி படத்தில் சிம்ரனுக்கு தோழியாக ஸ்க்ரீனில் தலை காட்டியவர் திரிஷா. அதன் பிறகு ப்ரியதர்ஷன் இயக்கத்தில் உருவான லேசா லேசா படத்தில் நடிப்பதற்கு கமிட்டானார். அந்தப் படம் வெளியாவதற்கு முன்னதாகவே அமீர் இயக்கத்தில் சூர்யா நடித்த மௌனம் பேசியதே படத்தில் நடித்து படமும் வெளியாகிவிட்டது. முதல் படத்திலேயே திரிஷாவின் நடிப்பும், அழகும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

Throwback Stories Trisha Siruthai Siva

முன்னணி நடிகை: முதல் இரண்டு படங்களின் வெற்றிக்கு பிறகு திரிஷாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. பொதுவாக தமிழ் சினிமா ரசிகர்கள் பப்ளியான ஹீரோயினைத்தான் கொண்டாடுவார்கள் என்ற மாயையை திரிஷா அடித்து நொறுக்கினார். அவர் நடித்த ஒவ்வொரு படத்திலும் அழகும், திறமையும் கூடிக்கொண்டே போக திரிஷாவுக்கு என்று ரசிகர்களும் கூடிக்கொண்டே போனார்கள். அஜித், விஜய், ரஜினி, கமல், ஆர்யா,சூர்யா என பல ஹீரோக்களுடனும் ஜோடி போட்டிருக்கிறார் திரிஷா.

குந்தவை திரிஷா: பொன்னியின் செல்வன் நாவலில் வாசகர்களை ரொம்பவே கவர்ந்த சில கதாபாத்திரங்களில் குந்தவையும் ஒன்று. எனவே அந்தக் கதாபாத்திரத்தை ஏற்றிருக்கும் திரிஷா அந்த வெயிட்டேஜை தாங்குவாரா என ரசிகர்களில் சில கேள்வி எழுப்பினர். அவர்களது கேள்விக்கு அவர் தனது நடிப்பால் பதில் சொல்லியிருந்தார். இரண்டு பாகங்களிலுமே அவரது நடிப்பு மிரட்டலாக இருந்தது. கடைசியாக அவரது நடிப்பில் லியோ வெளியானது. அஜித்துடன் விடாமுயற்சி படத்தில் தற்போது நடித்துவருகிறார்.

மீண்டும் லைம் லைட்டில்: திரிஷா இடையில் சறுக்கலை சந்தித்தார் என்பது உண்மைதான். ஆனால் விடாமுயற்சியுடன் தொடர்ந்து நடித்து வந்த அவருக்கு 96 படம் தரமான கம்பேக்காக அவருக்கு அமைந்தது. அதனைத் தொடர்ந்து மீண்டும் லைம் லைட்டுக்கு வந்தார் அவர். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக டாப் லிஸ்ட்டில் ஹீரோயின்கள் வெகு சிலர்தான். அவர்களில் முதன்மையானவர் திரிஷா என்பது கவனிக்கத்தக்கது.

அடுத்த படம்: விடாமுயற்சி படம் மட்டுமின்றி கமல் ஹாசனுடன் மீண்டும் இணைந்து நடிக்கிறார் திரிஷா. மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் தக் லைஃப் படத்தில் அவர் இணைந்திருப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியது. ஒருபக்கம் பெரிய ஹீரோக்களுடன் ஜோடி போடும் அவர் மறுபக்கம் ஹீரோயின் ஓரியண்ட்டட் சப்ஜெக்ட்டிலும் கவனம் செலுத்திவருகின்றார். அந்தவகையில் அவர் கௌரவ் நாராயணன் இயக்கத்தில் ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கிறார்.

திட்டிய சிவா: இந்நிலையில் திரிஷாவை இயக்குநர் சிறுத்தை சிவா திட்டிய சம்பவம் தெரியவந்திருக்கிறது. அதாவது திரிஷாவும், ஸ்ரீகாந்த் தேவாவும் நடித்த மனசெல்லாம் படத்துக்கு இப்போதைய இயக்குநர் சிறுத்தை சிவாதான் ஒளிப்பதிவாளர். அந்தப் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் திரிஷா ரொம்பவே அமைதியாக; எப்போதும் ஃபோனும் கையுமாகத்தான் இருப்பாராம். ஒருமுறை காட்சி ஒன்றில் ஸ்ரீகாந்த் அழுதபடி நடித்துக்கொண்டிருந்தாராம். ஆனால் திரிஷாவோ சேரில் அமர்ந்து கேஷுவலாக ஃபோனை நோண்டிகொண்டிருந்தாராம். அதனை கவனித்த சிவா, 'ஏம்மா அங்கு ஹீரோ அழுதுட்டு இருக்கார். நீ எனக்கென்னனு ஃபோன நோண்டிட்டு இருக்க. அப்படி என்னதான் அதுல பண்ணுற' என்று திட்டினாராம். உடனே திரிஷாவோ; எந்தவித பதற்றமும் இல்லாமல், ஓகே கூல் கூல் என்று சொல்லி சமாதானப்படுத்தினாராம். இதனை ஸ்ரீகாந்த் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.

Throwback Stories Trisha Siruthai Siva

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X