Vikram - பிதாமகனில் மிருகத்தனமாக சண்டை போட்ட விக்ரம்.. என்ன ரெஃபரன்ஸ் தெரியுமா?

சென்னை: Vikram (விக்ரம்) பிதாமகன் படத்தில் விக்ரம் மிருகத்தனமாக சண்டை போட்டதற்கு பின்னணியில் இருக்கு ரெஃபரன்ஸ் குறித்த விஷயம் தெரியவந்திருக்கிறது.

சினிமாவில் ஏகப்பட்ட கஷ்டங்களை கடந்தவர் நடிகர் விக்ரம். இப்போது தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அவரது மகன் துருவ் விக்ரமும் சினிமாவில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் சினிமாவை விட்டு ஒதுங்க விருப்பமில்லாத விக்ரம் பிற ஹீரோக்களுக்கு டப்பிங் கொடுத்தார். சூழல் இப்படி இருக்க பாலாவின் முதல் படமான சேதுவில் நடித்தார் விக்ரம். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக ஆனது. இதனால் சினிமாவில் விக்ரம் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக்கொண்டார்.

Stunt Siva Shares about Pithamagan Movie Stunt Scenes

இரட்டை குதிரையில் சவாரி: சேது படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு விக்ரமுக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. இருப்பினும் எல்லா கதைகளிலும் நடிக்காமல் தன்னை நிரூபிக்கும் வகையில் உருவாகியிருக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார். ஒரு பக்கம் காசி, பிதாமகன் என நடிப்புக்கு தீனி போடும் படங்களிலும், மறுபக்கம் ஜெமினி, தூள், தில் என கமர்ஷியலுக்கு தீனி போடும் படங்களில் நடித்து இரட்டை குதிரையில் லாவகமாக பயணித்தார். இதனால் கரியரின் உச்சத்திற்கு சென்று இப்போது மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.

ஆதித்த கரிகாலன்: விக்ரம் நடிப்பில் சமீபத்தில் பொன்னியின் செல்வன் 2 படம் வெளியானது. ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தை ஏற்று அதில் மிரட்டியிருந்தார் விக்ரம். அடுத்ததாக பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் தங்கலான் படம் அவரது திரையுலக வாழ்க்கையில் நிச்சயம் ஒரு மைல் கல்லாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் அவரது ரசிகர்கள். படத்தின் ஷூட்டிங் சமீபத்தில்தான் முடிவடைந்தது.

பிதாமகன்: விக்ரமின் கரியரில் தி பெஸ்ட்டாக இருப்பது பிதாமகன் படம். பாலா இயக்கிய அந்தப் படத்தில் பிணங்களை எரிப்பவர் கதாபாத்திரத்தை விக்ரம் ஏற்றிருந்தார். அந்தக் கதாபாத்திரத்தை அதைவிட வேறு யாராலும் செய்யவே முடியாது என்பதை தனது நடிப்பின் மூலம் உணர்த்தியிருந்தார். குறிப்பாக ஒட்டுமொத்த படத்திலும் ஒரே ஒரு இடத்தில் மட்டும் பேசும் விக்ரம் மற்ற இடங்களில் பார்வையிலும், உடல் மொழியிலும் வெறித்தனமாக நடித்து அதகளம் செய்திருந்தார். அதன் காரணமாக அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது.

சண்டைக்காட்சிகளுக்கு அதுதான் ரெஃபரன்ஸ்: படத்தில் விக்ரமின் நடிப்பு, பாலாவின் மேக்கிங்கிற்கு பிறகு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது சண்டைக் காட்சிகள்தான். விக்ரமின் ஒவ்வொரு ஆக்‌ஷன் சீனும் ஒரு மிருகம் எப்படி மூர்க்கத்தனமாக தாக்குமோ அப்படித்தான் இருக்கும். அதனை வடிவமைத்தவர் ஸ்டண்ட சிவா. தற்போது அந்த சண்டை காட்சிகளை அப்படி வடிவமைத்தது எப்படி என்பது குறித்த விஷயம் தெரியவந்திருக்கிறது.

சிறுத்தைதான் காரணம்: அதாவது ஸ்டண்ட் சிவா எப்போதும் கொரிய படங்களை அதிகமாக பார்த்துக்கொண்டிருப்பாராம். ஆனால் பிதாமகனில் கமிட்டான பிறகு எந்தப் படத்தையும் பார்க்கக்கூடாது. அப்படி பார்த்தால் அதன் தாக்கம் இதில் வந்து மிருகத்தனமான கேரக்டரை கெடுத்துவிடும் என முடிவெடுத்த சிவா டிஸ்கவரி சேனலை தொடர்ந்து பார்த்திருக்கிறார். அப்படி அவர் பார்த்துக்கொண்டிருக்கும்போது சிறுத்தை வேட்டையாடுவதை பார்த்திருக்கிறார்.

உடனே அதை ரெஃபர்ன்ஸாக எடுத்துக்கொண்டுதான் பிதமாகன் க்ளைமேக்ஸ் சண்டைக் காட்சியை வடிவமைத்திருக்கிறார். அந்த சண்டைக்காட்சியில் விக்ரம் வில்லனை அடித்துவிட்டு மிருகம் எப்படி தண்ணீர் குடிக்குமோ அப்படி குடித்துவிட்டு வில்லனின் தொண்டையை கடித்துவிடுவார். அதை பார்க்கும்போது ஒரு மிருகம் சண்டையிடுவது போல்தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தகவலை ஸ்டண்ட் சிவா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டார். அதேபோல் நந்தா படத்துக்கும் ஸ்டண்ட் சிவாதான் சண்டை பயிற்சியாளர். அதிலும் ஒரு பாம்பை ரெஃபரன்ஸாக வைத்து சூர்யாவுக்கு சண்டை காட்சிகளை வடிவமைத்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X