Rajinikanth - கமல் வீட்டு பெண்களிடம் ரஜினி செய்த குறும்பு.. விஷயம் தெரிந்ததும் ஆள் எஸ்கேப்

சென்னை: Rajinikanth (ரஜினிகாந்த்) கமல் ஹாசன் வீட்டு பெண்களிடம் ரஜினிகாந்த் செய்த குறும்பு குறித்து தெரியவந்திருக்கிறது.

சூப்பர் ஸ்டார் என்ற நாற்காலியில் அமர்ந்திருப்பவர் ரஜினிகாந்த். அவருக்கென்று செலிபிரிட்டிகளிலிருந்து சாமானியர்கள்வரை ரசிகர்களாக இருக்கின்றனர். அவரது நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் மெகா ஹிட்டடித்திருக்கிறது. அதே உற்சாகத்தோடு அடுத்ததாக ஜெய்பீம் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் தனது 170ஆவது படத்தில் நடித்துவருகிறார் ரஜினிகாந்த். அதன் ஷூட்டிங் கன்னியாகுமரியில் தற்போது நடந்துவருகிறது.

Suhasini Talks about Rajinikanths Unknown Fun Side

தலைவர் 171: அதேபோல் இந்தப் படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171ஆவது படத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினி. அந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அதன் ஷூட்டிங் மார்ச் அல்லது ஏப்ரலில் தொடங்கவிருக்கிறது. கண்டிப்பாக இந்தப் படம் இந்திய அளவில் மெகா ஹிட்டாகும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் இருக்கிறது. ஏனெனில் லோகேஷ் கனகராஜ் தொட்டதெல்லாம் ஹிட் என்பதால் அந்த நம்பிக்கை பெரும்பாலானோரிடம் இருக்கிறது.

கஷ்டம்: ரஜினிகாந்த்தின் சம்பளம் இப்போது நூறு கோடி ரூபாயை தாண்டியிருக்கிறது. அதுமட்டுமின்றி படத்தின் லாபத்திலும் அவருக்கு பங்கு செல்வதாகவும் ஒரு பேச்சு உண்டு. இப்போது பெரும் சாம்ராஜ்ஜியத்தை அவர் உருவாக்கி வைத்திருந்தாலும் ஆரம்பத்தில் ரொம்பவே அவர் கஷ்டப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை அவரே பல மேடைகளில் சொல்லியும் இருக்கிறார்.

கார்: உதாரணமாக ஒரு படத்தில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக நடித்தபோது சம்பளம் கேட்டதற்கு சம்பளம் கொடுக்காமல் நடந்தே செல்லும்படி சொன்ன சம்பவம் எல்லாம் அரங்கேறியிருக்கிறது. ஆனால் அதனால் உடைந்துபோகாத ரஜினிகாந்த் தான் அவமானப்படுத்தப்பட்ட ஏவிஎம் ஸ்டூடியோவுக்குள் காரோடு வந்திறங்கிய வரலாறும் உண்டு. அந்த கார் இத்தாலியன் ஃபியர்ட் கார் என அவர் தர்பார் ஆடியோ வெளியீட்டு விழாவில் சொன்னார்.

குறும்பு: ரஜினிகாந்த் தன்னுடைய இளமை காலத்தில் ரொம்பவே சேட்டை பிடித்தவர். அப்படி ஒரு சம்பவம்தான் நடந்திருக்கிறது. அதாவது கமல் ஹாசனின் அண்ணன் மகள்களான சுஹாசினியும் அவரது அக்காவும் ஆழ்வார்ப்பேட்டையில் வாக்கிங் சென்றுகொண்டிருந்தார்களாம். சுஹாசினியின் அக்கா அப்போது மருத்துவமும், சுஹாசினி பத்தாம் வகுப்பும் படித்துக்கொண்டிருந்திருக்கிறார்கள்.

Suhasini Talks about Rajinikanths Unknown Fun Side

அந்த சமயத்தில் ஃபியர்ட் காரில் வந்த ரஜினிகாந்த் அழகாக இருக்கும் சுஹாசினியின் அக்காவை பார்த்து நிறுத்திவிட்டு, "கேர்ள்ஸ் லிஃப்ட் வேண்டுமா?" என கேட்டிருக்கிறார். உடனடியாக சுஹாசினி ரஜினியிடம், "நாங்க கமல் ஹாசனோட அண்ணா பொண்ணுங்க" என்று சொன்னாராம். உடனே ரஜினிகாந்த் அய்யய்யோ இது என்னைய்யா விவகாரம் என்று நினைத்துக்கொண்டு மறுவார்த்தை பேசாமல் காரை எடுத்துக்கொண்டு பறந்துவிட்டாராம். இந்த சுவாரசிய தகவலை சுஹாசினி ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X