ஏய் உதை வாங்குவ.. ஷூட்டிங்கில் குறும்பு செய்த கமல்ஹாசன்.. செமயாக திட்டிவிட்ட நடிகை

சென்னை: நடிகர் கமல் ஹாசன் இந்தியாவில் அனைவராலும் அறியப்பட்டவர். சிவாஜிக்கு அடுத்ததாக நடிப்பு பல்கலைக்கழகம் என்று புகழப்படுபவர் அவர். நடிப்பு, நடனம், கதை, திரைக்கதை, பாடல்கள் என அனைத்திலும் புகுந்து விளையாடக்கூடிய அவர் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் என்ற படத்தில் நடித்துவருகிறார். கடந்த மாதம் வெளியான இந்தியன் 2 படம் தோல்வியடைந்தது. இந்தச் சூழலில் கமல் ஹாசனை நடிகை ஷூட்டிங் ஸ்பாட்டில் திட்டிய சம்பவம் தெரியவந்திருக்கிறது.

தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை அனைவரும் நடிப்பு பல்கலைக்கழகம் என்று சொல்வார்கள். அவருக்கு அடுத்ததாக கமல் ஹாசன் அந்த இடத்தில் இருக்கிறார். ஆனால் ஒரு வித்தியாசம் சிவாஜியை நடிப்பு பல்கலைக்கழகம் என்று சொல்லலாம்; கமல் ஹாசனை சினிமா பல்கலைக்கழகம் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு அவர் சினிமாவில் பல்துறைகளில் வித்தகராக ஜொலித்துக்கொண்டிருக்கிறார். டெக்னாலஜி பெரிதாக வளராத காலகட்டத்திலேயே பல டெக்னாலஜிகளை முயன்று பார்த்து கோலிவுட்டுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் அவர்.

Throwback Stories Kamal Haasan Sumithra

ரீ என்ட்ரி: அப்படிப்பட்ட கமல் ஹாசன் சில வருடங்களுக்கு முன்பு சினிமாவிலிருந்து ஒதுங்கி அரசியலுக்கு சென்றார். ஆனால் அங்கு அவர் எதிர்பார்த்தபடி சூழல் சாதகமாக அமையவில்லை. அதனையடுத்து மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்த அவர் விக்ரம் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். படம் மெகா ஹிட்டானது. அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்துவருகிறார். கடந்த மாதம் வெளியான இந்தியன் 2 தோல்வியடைந்தது.

செம ட்ரோல்: முக்கியமாக படம் கடுமையான ட்ரோல்களை சந்தித்திருக்கிறது. தியேட்டரில் இருந்தபோதுகூட அளவாகத்தான் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்தனர். ஆனால் சில நாட்களுக்கு முன்பு நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. அதனையடுத்து படத்திலிருந்து பல காட்சிகளை வெட்டி எடுத்து கடுமையாக ட்ரோல் செய்துவருகின்றனர். இதுவரை கமல் ஹாசனின் படங்களிலேயே இந்தியன் 2தான் இவ்வளவு ட்ரோலுக்கு ஆளாகியிருப்பதாக அவரது ரசிகர்கள் உச்சக்கட்ட வேதனையடைந்திருக்கின்றனர்.

அன்பறிவ்: இந்தியன் 2வை முடித்திருக்கும் அவர்; கோலிவுட்டில் சண்டை பயிற்சியாளர்களாக கலக்கிவரும் ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் அன்பறிவ் இயக்கத்தில் நடிக்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதும் பலரும் ஆச்சரியம்தான் பட்டார்கள். ஏனெனில் இளம் படைப்பாளிகள் மீது கமல் ஹாசன் வைத்திருக்கும் உச்சபட்ச நம்பிக்கையைத்தான் இது காட்டுவதாக ஒட்டுமொத்த திரைத்துறையும் பேசுகிறது.

திட்டிய நடிகை: இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகை ஒருவர் கமல் ஹாசனை கடுமையாக திட்டிய சம்பவம் தெரியவந்திருக்கிறது. அதாவது தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த சுமித்ரா சிங்கார்வேலன் படத்தில் கமல் ஹாசனுக்கு தாயாக நடித்தார். ஏற்கனவே இருவரும் ஜோடியாக நடித்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் சுமித்ராவை கமல் ஹாசன், 'சுமி சுமி' என்று அழைப்பாராம். ஆனால் சிங்காரவேலன் ஷூட்டிங் ஸ்பாட்டில் மம்மி மம்மி என்று அழைத்தாராம். இதனால் கடுப்பான சுமித்ரா, 'ஏய் உதை கிடைக்கும் பார்த்துக்க' என்று கமல் ஹாசனை ஜாலியாக திட்டினாராம். அதற்கு பிறகுதான் அப்படி அழைப்பதை நிறுத்தினாராம் கமல். இதனை சுமித்ரா ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X