ஏன் சாணியை நீ அள்ள மாட்டியா?.. அசிங்கமா திட்டிய மணிவண்ணன்.. சுந்தர் சி ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?

சென்னை: அரண்மனை 4 படத்தின் வெற்றியில் ரொம்பவே உற்சாகமாக உள்ள இயக்குநர் சுந்தர் சி சமீபத்தில் அளித்த பேட்டியில் மணிவண்ணன் தன்னை சூட்டிங் ஸ்பாட்டில் கெட்ட வார்த்தையால் திட்டியது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

சுந்தர் சி இயக்கி நடித்த அரண்மனை 4 திரைப்படம் இரண்டாவது வாரமும் வெற்றிநடை போட்டு வருகிறது. இந்த வாரம் தமிழ் சினிமாவில் கவின் நடித்த ஸ்டார், அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியான ரசவாதி மற்றும் அமீர் நடிப்பில் வெளியான உயிர் தமிழுக்கு உள்ளிட்ட படங்கள் வெளியாகி உள்ளன.

Sundar C opens up how Manivannan scolded him at the first day of shoot

ஆனாலும், தொடர்ந்து சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 திரைப்படம் தியேட்டர்களில் சக்கை போடு போட்டு வருகிறது. அந்த படத்தின் புரமோஷனுக்காக சுந்தர் சி தீவிரமாக பல யூடியூப் சேனல்களில் பேட்டி கொடுத்து வந்தார். அவர் பேசும்போது வெளிப்படையாக மனதில் இருந்து பல விஷயங்களை பேசியது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

குஷ்பு அந்த வார்த்தை சொல்லல: அரசியலில் தனது மனைவி குஷ்புவுக்கு தான் ஒரு துணையாக மட்டுமே இருப்பேன் என்றும் அவர் எடுக்கும் முடிவுகளில் தலையிட மாட்டேன் என்றும் கூறியுள்ளார். ஒருமுறை தமிழ்நாட்டு பெண்கள் கற்பு குறித்து குஷ்பு பேசியதாக பத்திரிகைகளில் பொய்யான செய்தி வந்தது. அப்போது அவருக்காக ரொம்பவே சப்போர்ட் செய்து ஒரு புருஷனாக கூட நின்றேன். அந்த நேரத்தில் ஜெயலலிதா அம்மா தான் உதவி செய்தார் என்றார். மேலும், பிரச்சனையை முடிக்க குஷ்புவை மன்னிப்பு கேட்க சொல்ல, அவரும் கேட்டார். ஆனால், அவரை ஏன் மன்னிப்பு கேட்க சொல்ல சொன்னேன் என்பதை நினைத்து இதுவரை நான் ஃபீல் பண்ணிக் கொண்டு இருக்கிறேன் என பேசியுள்ளார்.

சாணி அள்ள மாட்டியா?: மணிவண்ணன் இயக்கத்தில் உருவான படத்தில் உதவி இயக்குநராக சினிமாவில் களமிறங்கினேன். முதல் நாள் சூட்டிங் நடுரோட்டில் ஷாட் வைக்கப்பட்டிருந்த நிலையில், அங்கே இருந்த சாணியை மணிவண்ணன் சார் அள்ள சொன்னார். நான் இன்னொரு உதவி இயக்குநரிடம் சாணி அள்ளும் படி சொன்னதைக் கேட்டதும் அசிங்கமான வார்த்தைகளால் திட்டி, ஏன் நீ அள்ள மாட்டியான்னு இன்னொரு அசிங்கமான வார்த்தையால் திட்டி அதுக்கா வந்திருக்க எனக் கேட்டார்.

சுந்தர் சி ரியாக்சன்: நல்ல பெரிய குடும்பத்தில் இருந்து தான் சினிமாவுக்கு வந்தேன். நான் போய் எப்படி சாணி அள்ளுவது என அப்போது நினைத்தேன். ஆனால், மணிவண்னன் சார் அன்னைக்கு திட்டிய திட்டு தான் என்னை இயக்குநராக மாற்றியது. சினிமாவில் எந்தவொரு விஷயத்தையும் அவங்க செய்வாங்க, இவங்க செய்வாங்கன்னு நினைக்கக் கூடாது. நாமே எடுத்து செய்ய வேண்டும் என்பதை கற்றுக் கொண்டேன் என பேசியுள்ளார்.

தலைகனம் அடங்கியது: அதன் பின்னர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்த போது சினிமாவை அவர்கள் எப்படி அணுகுகின்றனர் என்பதை கற்றுக் கொண்டேன். அவ்வளவு பெரிய உச்ச நட்சத்திரங்களே எளிமையாக இருக்கும் போது நாமெல்லாம் எம்மாத்திரம் என நினைத்தேன். என்னுடைய தலைகனம் அப்போதுதான் அடங்கியது என பேசியுள்ளார். சுந்தர். சி அடுத்து கலகலப்பு 3 படத்தை இயக்க போகிறார். சங்கமித்ரா, அரண்மனை 5 படங்களையும் இயக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X