Rajinikanth: தனுஷ் நல்ல மனிதன்.. என்னோட மாப்பிள்ளை என்பதற்காக சொல்லல.. சர்டிஃபிகேட் கொடுத்த ரஜினி!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாளை மறுநாள் அதாவது வரும் 12ஆம் தேதி தனது 74வது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ளார். இவரது இந்தப் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட அவரது ரசிகர்கள் திட்டம் தீட்டி வருகின்றனர். அதேநேரத்தில் அவரது நடிப்பில் உருவாகி வரும் கூலி படத்தின் அப்டேட் வரும் என ரசிகர்கள் காத்துக் கொண்டு உள்ளனர். மேலும் தளபதி படம் ரீ ரிலீஸ் செய்யப்போவதாக கூறப்படுகின்றது. அதேபோல், ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது எனக் கூறப்படுகின்றது. இப்படியான நிலையில் தனுஷ் குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்த ஆண்டு தமிழ் சினிமாவில் தனது பொன் விழாவைக் கொண்டாடுகின்றார். இதற்காக அவருக்கு சிறப்பு விழா திரைத்துறையினரால் நடத்தப்பட வாய்ப்புள்ளது. மேலும், தமிழ் சினிமாவில் தனது 50வது ஆண்டினைக் கொண்டாடும் விதமாக ரசிகர்களுக்கு ட்ரீட் வைக்க, அடுத்த ஆண்டில் அவரது நடிப்பில் மொத்தம் இரண்டு படங்களை ரிலீஸ் செய்ய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகின்றது. லோகேஷ் கனகராஜின் கூலி மற்றும் நெல்சனின் ஜெயிலர் 2 ஆகிய படங்கள் அடுத்த ஆண்டு வெளியாகும் என கூறப்படுகின்றது.

rajinikanth rajinikanth birthday

இதற்கிடையில், சூப்பர் ஸ்டார் அமெரிக்காவுக்குச் சென்று, முழு உடல் பரிசோதனை மேற்கொண்டு, சிகிச்சை பெறவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. சில ஆண்டுகளுக்கு முன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காலா படத்தின் இசை வெளியீட்டு விழாவில், தனுஷ் குறித்து பேசியது பலரது கவனத்தினை ஈர்த்தது. மேலும் அது தொடர்பான வீடியோவை பலரும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

rajinikanth rajinikanth birthday

ரஜினிகாந்த்: அதாவது, தனுஷ் குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசும்போது, “ தனுஷ் உண்மையிலேயே ரொம்ப நல்ல மனிதர். என்னுடைய மருமகன் என்பதற்காகச் சொல்லவில்லை. அவரை நினைத்து நான் ரொம்பவும் பெருமைப் படுகின்றேன். அருமையான பையன், தங்கமான பையன். அப்பா அம்மாவை மதிக்கின்றார். அப்பா அம்மாவை தெய்வமாக பார்க்கின்றார். பொண்டாட்டியை நல்லா பாத்துக்குறாங்க. தன்னுடைய குழந்தைகளுக்கு நல்ல அப்பாவாகவும் உள்ளார். நல்ல மாப்பிள்ளையாகவும் உள்ளார். நல்ல டேலண்டேட்” என பேசியுள்ளார்.

rajinikanth rajinikanth birthday

தனுஷ் விவாகரத்து: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - லதா தம்பதியருக்கு மொத்தம் இரண்டு மகள்கள். அவர்களில் ஒருவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு பின்னர் பிரிந்துவிட்டனர். கடந்த 2004ஆம் ஆண்டு இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த மாதம் சென்னை குடும்பநல நீதிமன்றம் அவர்களின் விவாகரத்தை உறுதி செய்தது. 20 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் இருந்து இருவரும் வெளியேறினார்கள். இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர்.

காலா: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான படம் காலா. பா. ரஞ்சித் இயக்கிய இந்தப் படத்திற்கு தனுஷ்ஷின் வொண்டர் பார் நிறுவனம்தான் தயாரிப்பு பணிகளை மேற்கொண்டது. படம் ரிலீஸ் ஆகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X