கதையே பிடிக்கல.. ஆனா ஜோதிகாவுக்காக நடித்த சூர்யா.. என்ன படம் தெரியுமா?
மும்பை: நடிகையும், சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா இடையில் சில காலம் சினிமாவிலிருந்து ரெஸ்ட் எடுத்திருந்தார். பிறகு 36 வயதினிலே படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்கு வந்த அவர் இப்போது பாலிவுட்டிலும் நடிக்க ஆரம்பித்தார். அந்தவகையில் அவர் கடைசியாக ஸ்ரீகாந்த் படத்தில் நடித்தார். அந்தப் படம் நல்ல வரவேற்பையே பெற்றது. இந்தச் சூழலில் ஜோதிகாவுக்காக சூர்யா செய்த செயல் ஒன்று தெரியவந்திருக்கிறது.
ஜோதிகா 90களில் சினிமாவில் நுழைந்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர். க்யூட் எக்ஸ்பிரெஷன், பப்ளி தோற்றம் என தமிழ் ரசிகர்களை கட்டிப்போட்டிருந்தவர். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டாப் ஹீரோயினாக வலம் வந்தார். எந்தக் கதாபாத்திரத்தை ஏற்றாலும் அதுவாகவே மாறி தனது நடிப்பு, எக்ஸ்பிரெஷன், பாடி லாங்குவேஜ் என அனைத்திலும் கலக்கக்கூடியவர். விஜய், அஜித், கமல் ஹாசன், விக்ரம் என பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடி போட்டவர்.

சந்திரமுகி, மொழி: ஆரம்பத்தில் கமர்ஷியல் படங்களில் நடித்துவந்த அவர் காலம் செல்ல செல்ல நடிகைகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். அந்தவகையில் அவர் நடித்த மொழி, சந்திரமுகி ஆகிய இரண்டு படங்களுமே அவரது கரியரில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. மொழியில் காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியாக கலங்கடித்திருந்த அவர், சந்திரமுகியில் ரஜினியை தாண்டி ஸ்கோர் செய்து அதகளம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யாவுடன் திருமணம்: இதற்கிடையே பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் சூர்யாவுடன் நடித்தபோது இருவரும் காதலிக்க தொடங்கினர். ஆனால் இவர்களது காதலுக்கு சிவக்குமார் ஆரம்பத்தில் ஒத்துக்கொள்ளவில்லை. அதற்கு பிறகு வீட்டு சம்மதத்துக்காக பல வருடங்கள் இரண்டு பேரும் காத்திருந்து திருமணம் செய்துகொண்டனர். கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடியாக இப்போது வலம் வரும் அவர்களுக்கு தேவ் என்ற மகனும், தியா என்ற மகளும் இருக்கிறார்கள்.
பிஸி ஜோதிகா: திருமணத்துக்கு பிறகு சில வருடங்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்த அவர் 36 வயதினிலே படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். தொடர்ந்து ராட்சசி, உடன்பிறப்பே என ஏகப்பட்ட படங்களில் நடித்த அவர் இப்போது பாலிவுட்டில் பிஸியாக ஆரம்பித்திருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் ஷைத்தான் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய இரண்டு படங்கள் வெளியாகின. இரண்டு படங்களும் நல்ல வரவேற்பையே பெற்றன. இதற்கிடையே சூர்யாவின் தந்தை சிவக்குமாருக்கும், ஜோதிகாவுக்கும் பிரச்னையால்தான் மும்பையில் செட்டில் ஆகிவிட்டார்கள் என்று வதந்தி கிளம்பியது. ஆனால் சூர்யா சமீபத்திய பேட்டியில் மறைமுகமாக மறுத்திருந்தார்.
ஜோவுக்காக சூர்யா செய்தது: இந்நிலையில் ஜோதிகாவுக்காக சூர்யா செய்த செயல் ஒன்று தெரியவந்திருக்கிறது. அதாவது இருவரும் சேர்ந்து நடித்து சூப்பர் ஹிட்டான படங்களில் ஒன்று சில்லுனு ஒரு காதல். அந்தப் படத்தின் கதையை இயக்குநர் கிருஷ்ணா, சூர்யாவிடம் சொல்லும்போது அவருக்கு பிடிக்கவில்லையாம். அதேசமயம் ஜோதிகாவிடம் அவர் சொல்லியபோது ஜோவுக்கு பிடித்திருக்கிறது. இந்த விஷயம் சூர்யாவுக்கு தெரிந்ததையடுத்து; ஜோதிகாவுக்கு ஏன் இன்னொருவர் ஜோடியாக நடிக்க வேண்டும். நாமே நடிக்கலாம் என்று முடிவு செய்துதான் அந்தப் படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டாராம்.


Click it and Unblock the Notifications











