Suriya - அந்த நடிகைதான் வேண்டும்.. அடம் பிடித்த சூர்யா; ஒத்துக்கொள்ளாத பாலா
சென்னை: Suriya (சூர்யா) தன்னுடைய படத்தில் அந்த நடிகைதான் நடிக்க வேண்டும் என சூர்யா அடம் பிடித்ததும் அதற்கு இயக்குநர் பாலா ஒத்துக்கொள்ளாததும் தற்போது தெரியவந்திருக்கிறது.
இந்திய சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவர் பாலா. யாரும் தொட யோசிக்கும் கதைக்களத்தை தேர்ந்தெடுத்து அதில் நடிகர்களிடம் சிறப்பான நடிப்பை வாங்குவதில் வல்லவர் இயக்குநர் பாலா. தற்போது அவர் அருண் விஜய்யை வைத்து வணங்கான் படத்தை இயக்கிவருகிறார். இந்தப் படத்தில் முதலில் சூர்யா நடிக்க வேண்டியதாக இருந்தது. ஆனால் பாலாவுக்கும், சூர்யாவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சூர்யா படத்திலிருந்து விலகினார்.

சேது மூலம் கவனம் ஈர்த்த பாலா: பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிவிட்டு சேது படத்தை இயக்கினார் பாலா. அந்தப் படம் பெரும் வெற்றி பெற்று விக்ரமுக்கும், பாலாவுக்கும் வாழ்க்கை கொடுத்தாலும் அந்தப் படம் ரிலீஸ் ஆவதற்குள் ஏகப்பட்ட சிக்கலை சந்தித்தது. படம் ரிலீஸாவதற்கு முன்னதாக விநியோகஸ்தர்களுக்கு மட்டுமே 100 தடவை திரையிட்டு காண்பிக்கப்பட்டது. ஒருவழியாக படம் ரிலீஸாகி மெகா ஹிட்டாக, சேது படம் ஒரு குறிஞ்சி பூ என்றெல்லாம் விமர்சனங்கள் நல்லவிதமாக எழுந்தன.
இரண்டாவது படத்திலும் கவனம் ஈர்த்த பாலா: சேது படத்துக்கு எடுத்துக்கொண்ட சிரத்தையைவிட இரண்டாவது படமான நந்தாவுக்கு பாலா அதிகம் சிரத்தையை எடுத்துக்கொண்டார். தமிழ்நாட்டுக்கு வரும் ஈழத்து அகதிகள், அவர்களுக்கு உதவும் ஒரு பெரியவர் மற்றும் அவருடன் இருக்கும் ஹீரோ என்பதை ஒன்லைனாக வைத்து உருவாக்கப்பட்டிருந்த அந்தப் படம் அதுவரை பேசாத ஈழத்து அகதிகளின் வலிகளையும், வாழ்வியலையும் பேசியது.

நந்தாவில் சூர்யாவை ஏன் கமிட் செய்தார் பாலா?: சூர்யா இப்போது மிகச்சிறந்த நடிகராக வலம் வருகிறார். அதற்கான விதையை போட்டது நந்தா திரைப்படம். முதல் படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு அடுத்ததாக பெரிய ஹீரோவிடம் செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட பாலா வளர்ந்துவரும் ஹீரோவான சூர்யாவை கமிட் செய்தார். அதற்கு சூர்யா திறமைக்காரர் என்ற காரணம் இருந்தாலும்; மிக முக்கிய காரணம் சூர்யாவின் தந்தையான சிவக்குமர். சிவக்குமார் மீது பாலாவுக்கு எப்போதுமே பெரிய மரியாதை இருக்கிறது. அதன் வெளிப்பாடாகத்தான் சூர்யாவை கமிட் செய்தார் பாலா.
நடிப்பில் மிரட்டிய சூர்யா: சிவக்குமாருக்காக கமிட் செய்யப்பட்டாலும் சூர்யா தனது திறமையை மிக அருமையாக வெளிப்படுத்தியிருப்பார். ஆக்ஷன் காட்சிகளில் ராவாகவும், காதல் காட்சிகளில் க்யூட்டாகவும், எமோஷனல் காட்சிகளில் கலங்கவைத்தும் நடித்திருந்தார். குறிப்பாக படத்தின் க்ளைமேக்ஸில் தனது தாயின் கையில் உணவு அருந்திவிட்டு இறக்கும் காட்சியில் சூர்யாவின் நடிப்பை பார்த்து கலங்காதவர்களே இருக்க முடியாது. சூர்யா எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் அந்தக் காட்சிதான் தனக்கு மிகவும் பிடித்தது என சிவக்குமாரும் கூறியிருக்கிறார்.

ஜோதிகாவுக்காக அடம் பிடித்த சூர்யா: பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் இணைந்து நடித்தபோதே ஜோதிகாவும், சூர்யாவும் காதலிக்கத் தொடங்கிவிட்டனர். ஆனால் வெளியில் யாருக்கும் சொல்லாமல் இருந்திருக்கின்றனர். இடையில் இருவரும் சேர்ந்து சில படங்களில் நடித்திருந்தனர். சூழல் இப்படி இருக்க நந்தா படத்தில் கமிட்டானதும் கதாநாயகியாக ஜோதிகா நடித்தால் நன்றாக இருக்கும் என சூர்யா கூறியிருக்கிறார். அதற்கு பாலாவோ இல்லை இந்தக் கதாபாத்திரத்திற்கு லைலாதான் செட் ஆவார் என பாலா சொன்னாராம்.
என்னப்பா சூர்யா ஜோதிகாவை லவ் பண்றியா?: ஆனாலும் சூர்யா தொடர்ந்து வலியுறுத்த ஒருகட்டத்தில் கடுப்பான பாலா, ஏன்ப்பா இவ்வளவு தூரம் சொல்றேன். அந்தப் பொண்ணுதான் வேணும்னு அடம் பிடிக்குற. நான் நினைத்திருக்கும் கதாபாத்திரத்திற்கு லைலாதான் செட் ஆவா. நீ ஏன் ஜோதிகாவுக்கு இவ்வளவு அடம் பிடிக்கிற.
ஏன் லவ் ஏதும் பண்றியா என கேட்டாராம். விஷயம் எங்கே வெளியே தெரிந்துவிடும் என்று பயந்த சூர்யா அதன் பிறகு கப் சிப்பென்று ஆனாராம். அதன் பிறகுதான் காக்க காக்க படம் வெளியானது. அதில் சூர்யாவும், ஜோதிகாவும் நடித்தனர். அந்தப் படத்துக்கு பின்னர் இருவரும் காதலிப்பது எப்படியோ வெளியில் தெரிந்துவிட்டதாம்.


Click it and Unblock the Notifications











