ரஜினிக்கு நடுக்கம்.. 12 மணிக்கு அவர் சிகரெட் அடிச்சிட்டு செஞ்சது இருக்கே..சிவகுமார் உடைத்த சீக்ரெட்

சென்னை: ரஜினிகாந்த் என்றாலே அறிமுகம் தேவையில்லை. அவரது பெயரே ஒரு மிகப்பெரிய அடையாளம்தான். சாமானியர்கள் முதல் செலிபிரிட்டிகள்வரை அவருக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள். அவரது தாக்கம் இல்லாமல் தற்போதைய நடிகர்களில் ஒருவர்கூட இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு தனது திறமை மற்றும் ஸ்டைலால் அனைவரையும் கட்டிப்போட்டு வைத்திருக்கிறார் அவர். ரஜினியின் நடிப்பில் கடைசியாக வெளியான வேட்டையன் திரைப்படம் சரியாக போகாவிட்டாலும் அதில் அவரது நடிப்புக்கு பலத்த அப்ளாஸ் கிடைத்தது. இப்போது லோகேஷ் கனகராஜ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து முடித்திருக்கும் அவர்; நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்துவருகிறார்.

பெங்களூரில் நடத்துநராக இருந்த ரஜினிகாந்த்துக்கு கலை மீது ஆர்வம் இருந்தது. இதனால் அந்தப் பணியின்போதே சில நாடகங்களில் நடித்த அவர்; தீர்க்கமாக ஒரு முடிவெடுத்து சென்னையில் இருக்கும் சினிமா கல்லூரியில் சேர்ந்தார். கல்லூரியில் அவர் படிக்கும்போது ஏகப்பட்ட கஷ்டங்களை சந்தித்திருக்கிறார் அவர். ஒருவழியாக சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்த அவருக்கு எடுத்ததுமே வெற்றியோ மரியாதையோ கிடைக்கவில்லை. பல அவமானங்களை சந்தித்தார். இருந்தாலும் எப்படியாவது இதே சினிமாவில் தனக்கென ஒரு சாம்ராஜ்ஜியத்தை வளர்த்துவிட வேண்டுமென்ற தீவிரமான எண்ணம் அவருக்கு இருந்துகொண்டே இருந்தது.

Suriya s Father Sivakumar Shares Throwback Incident About Rajinikanth

வெற்றி பெற ஆரம்பித்த ரஜினிகாந்த்: அந்த எண்ணத்துடன் கடுமையாக உழைத்துக்கொண்டே இருந்தார். ஆரம்பத்தில் கமல் ஹாசனுடன் இணைந்து பல படங்களில் நடித்த அவருக்கு பைரவி படத்தில் ஹீரோவாகும் வாய்ப்பு கிடைத்தது. கமல் போல் பரிசோதனை முயற்சிகள் எதுவும் செய்யாமல் தன்னுடைய ஸ்டைல், திறமை ஆகியவைகளை நம்பி கமர்ஷியல் பாதையை தேர்ந்தெடுத்தார். அந்தப் பாதையில் எக்கச்சக்கமாக வித்தியாசமான மேனரிசம், ஸ்டைலை காண்பித்து தனக்கென ரசிகர்களை உருவாக்க ஆரம்பித்தார். இதனால் அவர் ஒரு கட்டத்தில் கமல் ஹாசனைவிடவும் ஒருபடி மேலே சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து சென்ட்டர்களிலும் அவரது படங்கள் சூப்பர் ஹிட்டாக ஆரம்பித்தான்.

எளிமையான ரஜினிகாந்த்: தான் எவ்வளவு வளர்ந்தாலும் வந்த பாதையையும், தனக்கு உதவியவர்களையும் எப்போதும் மறக்காதவர் அவர். அதன் காரணமாகத்தான் கலைஞானத்துக்கு வீடு ஒன்றையும் கட்டிக்கொடுத்தார். அவரது இந்த வளர்ச்சிக்கு அந்த குணம்தான் காரணம் என்று பலரும் சொல்வதுண்டு. இப்போதுகூட அவர் இளம் இயக்குநர்களை கண்டாலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் எழுந்து நிற்பதுண்டு. தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தையும் தன்னுடைய முதல் படம்போல் நினைத்து நடிக்கும் அவர்; ஏதேனும் ஒரு சீனை இம்ப்ரோவைஸ் செய்ய வேண்டுமென்றால் இயக்குநரிடம் சென்று இப்போதும் பெர்மிஷன் கேட்பதுண்டு. அதனை நெல்சன் உள்ளிட்டோரே மேடைகளில் ஓபனாக வெளிப்படுத்தியிருக்கின்றன.

இடையில் சறுக்கல்: அப்படிப்பட்ட ரஜினிகாந்த்துக்கு ஜெயிலர் படத்துக்கு முன்னதாக வெளியான அண்ணாத்த, தர்பார் ஆகிய படங்கள் சரியாக போகவில்லை. இதனால் அவரது சகாப்தம் முடிந்துவிட்டதாக பலரும் பேசினார்கள். ஆனால் அப்படிப்பட்ட ஆள் நான் இல்லை என்பதை ஜெயிலர் படத்தில் நிரூபித்தார். படம் அதிரிபுதிரி ஹிட்டடித்து மீண்டும் ரஜினிதான் சூப்பர் ஸ்டார் என்பதை ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்கும் உணர்த்தியது. அந்தப் படத்துக்கு பிறகு அவர் நடித்த வேட்டையன் திரைப்படம் தோல்வியடைந்தாலும்; ரஜினி போன்ற ஒரு மாஸ் ஹீரோ சமூக அக்கறையுள்ள ஒரு கதையில் நடித்ததை அனைவருமே பாராட்ட செய்தார்கள். வழக்கம்போல் ரஜினியும் தனது நடிப்பில் பட்டையை கிளப்பியிருந்தார்.

Suriya s Father Sivakumar Shares Throwback Incident About Rajinikanth

கூலி டூ ஜெயிலர் 2: வேட்டையன் படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்தார். அந்தப் படத்தில் அவருடன் அமீர் கான், நாகார்ஜுனா, சத்யராஜ், சௌபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். படமானது இந்த வருடம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. கமலுக்கு எப்படி லோகேஷ் விக்ரம் படத்தை மெகா ஹிட்டாக கொடுத்தாரோ அதேபோல் ரஜினிக்கும் கூலி அமையும் என்று அவரது ரசிகர்கள் அதீத எதிர்பார்ப்பை வைத்திருக்கிறார்கள். கூலி படத்தை முடித்த ரஜினி நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2வில் நடித்துவருகிறார். முதல் பாகம் போலவே இந்தப் பாகமும் பெரிய வெற்றியை பெறும் என்ற நம்பிக்கை சூப்பர் ஸ்டார் ரசிகர்களிடம் இருக்கிறது.

வியப்பில் திரையுலகம்: ரஜினிக்கு இப்போது 75 வயது ஆகிறது. இந்த வயதிலும் படு சுறுசுறுப்பாக இருக்கும் அவரை பார்த்து திரையுலகினர் வியப்பில் இருக்கிறார்கள். மேலும் யாராலும் இந்த வயதில் இவ்வளவு எனர்ஜியோடு இருக்க முடியாது. அந்த சுறுசுறுப்பும், டெடிகேஷனும்தான் சூப்பர் ஸ்டார் நாற்காலியை அவருக்கென்று நிரந்தரமாக கொடுத்திருக்கிறது என்றும் பலர் சொல்வதுண்டு. இந்நிலையில் நடிகரும், சூர்யாவின் அப்பாவுமான சிவகுமார் ரஜினிகாந்த் குறித்து சில வருடங்களுக்கு முன்பு ஒரு விழாவில் பேசியது சமூக வலைதளங்களில் பயங்கரமாக ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கிறது.

மேடையில் பேசிய சிவகுமார்: அந்த நிகழ்ச்சியில் பேசிய சிவகுமார், "ரஜினிகாந்த் சினிமா கல்லூரியில் படித்தார். அப்போது அவர் ஏதோ ஒரு நடுக்கத்தில்தான் இருப்பார். அந்த சமயத்தில் ஒரு நிகழ்ச்சிக்காக கே.பாலசந்தர் அங்கு சென்றிருந்தார். அப்போது கேபியிடம் ரஜினிகாந்த், 'ஒரு நடிகரிடம் நடிப்பை தவிர்த்து என்ன எதிர்பார்க்கிறீர்கள்' என்று கேட்டார். அதற்கு பதிலைத்த பாலசந்தரோ, 'நடிகன் எப்போதும் வெளியே நடிக்கக்கூடாது' என்று பதில் சொல்லிவிட்டார். அங்கிருந்து கிளம்பும்போது ரஜினிகாந்த்திடம் அவர், 'நாளை எனது அலுவலகத்துக்கு வா' என்று கூறிவிட்டு சென்றார். ரஜினியும் பாலசந்தர் சொன்னபடி அலுவலகத்துக்கு சென்றுவிட்டார்.

Suriya s Father Sivakumar Shares Throwback Incident About Rajinikanth

வில்லனாக நடிக்க ஆசை: அங்கு சென்றவுடன் எதையாவது நடித்து காமி என்று கே.பாலசந்தர் கூற; ரஜினியோ கட்டபொம்மன் திரைப்பட வசனத்தை பேசி காண்பித்தார். உடனே கேபி, 'அதான் சிவாஜி ஒருவர் ஏற்கனவே இருக்கிறாரே. அவரை மாதிரி நீ ஏன் செய்ய வேண்டும். நீயாக சொந்தமாக நடித்து காமி' என்று சொன்னார். ரஜினிகாந்த்தும் வித்தியாசமாக நடித்தார். அதில் ஈர்க்கப்பட்ட பாலசந்தர், 'நீ எதுவாக நடிக்க ஆசை' என்று கேட்டார். அதற்கு ரஜினியோ வில்லனாகத்தான் நடிக்க வேண்டும் என்று சொல்ல; ஆச்சரியமடைந்த பாலசந்தர், 'ஏன் ஹீரோவாகும் ஆசை இல்லையா' என்று கேள்வி கேட்டார். உடனே, 'வில்லனாக நடித்தால்தான் வெரைட்டி காண்பிக்க முடியும்' என்று சொன்னார்.

சிகரெட் அடித்து ரஜினி செய்தது: பிறகு அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு, அவர்கள் ஆகிய படங்களுக்கு புக் செய்யப்பட்டார். மூன்று முடிச்சு ஷூட்டிங்கின்போது பாலசந்தருக்கு ஷர்மா என்ற உதவி இயக்குநர் இருந்தார். அவரது ரூமும் ரஜினியின் ரூமும் பக்கத்து பக்கத்தில் இருந்தது. இரவு 12 மணிக்கு சிகரெட் அடித்துக்கொண்டே ஷர்மாவின் கதவை தட்டி இந்த வேஷத்துக்கு நான் தாங்குவேனா என்று இரண்டு நாட்கள் கேட்டுக்கொண்டே இருந்தார். அந்த அளவுக்கு நடுக்கம். அப்போதுதான் அவர் சிகரெட் அடிக்கும் ஸ்டைல் அவர்களால் கவனிக்கப்பட்டது. பாலசந்தர் மறுநாள் கூப்பிட்டு சிகரெட்டை எவ்வளவு வித்தியாசமாக பிடிக்க முடியுமோ பிடித்துக்காட்ட என்று சொல்ல; ரஜினியும் பல விதங்களில் சிகரெட்டை ஸ்டைலாக பிடித்தார். அந்த ஸ்டைல்களை எல்லாம் பாலசந்தர் தனது படங்களி பயன்படுத்திக்கொண்டார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X