T.Rajendar - சத்யராஜை அடி வெளுத்துவிட்ட டி.ராஜேந்தர்.. மனுஷன் ரொம்ப டெடிகேட்டிவா இருப்பாரோ?

சென்னை: T.Rajendar Attack on Sathyaraj (சத்யராஜை அடித்த டி.ராஜேந்தர்) தங்கைக்கோர் கீதம் படத்தின் படப்பிடிப்பில் சத்யராஜை டி.ராஜேந்தர் உண்மையில் அடித்துவிட்டாராம்.

ஒருதலை ராகம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான டி.ராஜேந்தர் எந்த பின்புலமும் இல்லாமல் தன்னுடைய திறமையை கொண்டு தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர். வெறும் இயக்கம் மட்டுமின்றி வசனம் எழுதுவது, கேமரா, இசையமைப்பது என எந்த ஜானரிலும் கில்லியாக இருப்பவர். குறிப்பாக இளையராஜா தமிழ் சினிமாவை ஆட்சி செய்துகொண்டிருந்தபோது ஒரு படத்துக்கூட அவரிடம் செல்லாமல் தானே இசையமைத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார் டி.ராஜேந்தர்.

T. Rajendar really beat Sathyaraj in Thangaikor Geetham Movie Shooting

இப்போதும் ஆக்டிவ்தான்: சினிமாவின் காலகட்டம் மாறும்போது பலரும் அதற்கு ஈடுகொடுக்க முடியாமல் ஒதுங்கிக்கொள்வார்கள். ஆனால் டி.ராஜேந்தரோ அப்படி இல்லை. தற்போதைய தலைமுறை சினிமா மாறிக்கொண்டிருந்த ஆரம்பக்கட்டத்தில் வீராசாமி என்ற படத்தை இயக்கினார். ஏன் சமீபத்தில்கூட சந்தானத்திடம் ஒரு கதை யோசித்திருக்கிறேன் நீ நடிகர் சந்தானமாகவே நடி என அவர் சொன்னதாக சந்தானமே தெரிவித்திருந்தார்.

உறவுக்கு முக்கியத்துவம்: டி.ராஜேந்தருடைய படங்களின் வெற்றிக்கு முக்கிய காரணம் அவர் உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்கள் எடுத்ததுதான். ஆபாச காட்சியோ அல்லது டபுள் மீனிங் வசனமோ எதுவும் அவரது படங்களில் இருக்காது. அதனாலேயே டிஆரின் படங்களை குடும்பம் குடும்பமாக கொண்டாடினார்கள். முக்கியமாக அவருடைய தங்கச்சி செண்ட்டிமெண்ட் ரொம்பவே பிரபலம். அப்படி அவர் எடுத்த படம்தான் தங்கைக்கோர் கீதம்.

சத்யராஜை வெளுத்துவிட்ட டி.ஆர்: கடந்த 1983ஆம் ஆண்டு வெளியான அந்தப் படம் மெகா ஹிட்டானது. அதில் சத்யராஜும் நாயகா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அந்தப் படத்தின் ஷூட்டிங்கின்போது சத்யராஜை டி.ஆர் உண்மையில் அடித்துவிட்டாராம். அதாவது அந்தப் படத்தில் ஒரு டி.ராஜேந்தருக்கும், சத்யராஜுக்கும் ஒரு சண்டைக்காட்சியை படமாக்கியிருக்கிறார்கள்.

T. Rajendar really beat Sathyaraj in Thangaikor Geetham Movie Shooting

சண்டை பயிற்சியாளர் சொல்லிக்கொடுத்தப்படி ராஜேந்தர் நடித்திருக்கிறார். ஆனால் சின்ன மாறுதல் என்னவென்றால் அவர் உண்மையிலேயே சத்யராஜை அடிக்க ஆரம்பித்துவிட்டாராம். இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத சத்யராஜ் கோபப்பட்டபடி ஏன் இப்படி பண்றீங்க என்று சொல்லிவிட்டு ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து வெளியேறிவிட்டாராம்.

அதுமட்டுமின்றி அடுத்த இரண்டு நாட்கள் ஷூட்டிங்கிற்கும் வரவில்லையாம். நிலைமை விபரீதமானதை உணர்ந்த டி.ராஜேந்தர் சத்யராஜை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டு சமாதானப்படுத்தினாராம். இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் மனுஷன் ரொம்ப டெடிக்கேட்டிவா இருக்காரே என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X