எங்கேயும் போறதே இல்ல.. ஒரு ஷீல்டுகூட கிடைக்கல.. எமோஷனலான டி.ராஜேந்தர்
சென்னை: டி.ராஜேந்தர் கோலிவுட்டில் பிரபலமான இயக்குநர், நடிகர். சிம்புவின் தந்தையும்கூட. சினிமாவில் ஒரு துறையில் வெற்றி காண்பதே கஷ்டம். ஆனால் டி.ராஜேந்தரோ நடிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு என அனைத்து துறைகளிலும் புகுந்து விளையாடியவர். இவரது எதுகை மோனை பேச்சு பலரை ரசிக்க வைத்திருக்கிறது. இந்நிலையில் அவரது பேச்சு ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிற்து.
ஒருதலை ராகம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான டி.ராஜேந்தர் எந்த பின்புலமும் இல்லாமல் தன்னுடைய திறமையை கொண்டு தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர். வெறும் இயக்கம் மட்டுமின்றி வசனம் எழுதுவது, கேமரா, இசையமைப்பது என எந்த ஜானரிலும் கில்லியாக இருப்பவர். குறிப்பாக இளையராஜா தமிழ் சினிமாவை ஆட்சி செய்துகொண்டிருந்தபோது ஒரு படத்துக்கூட அவரிடம் செல்லாமல் தானே இசையமைத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார் டி.ராஜேந்தர்.
சிம்புவை செதுக்கிய உளி: தன்னை போலவே தன்னுடைய மகனையும் உருவாக்க நினைத்தார். அதன் காரணமாக சிறு வயதிலிருந்தே சிம்புவை கேமரா முன்பு நிறுத்தி அதகளம் செய்தவர். சிம்புவின் வளர்ச்சியில் ஒவ்வொரு நொடியிலும் ராஜேந்தரின் பங்கு இருக்கிறது என்பதுதான் உண்மை. அதன் காரணமாகத்தான் சிம்புவாக சிறு வயதிலேயே நடிக்க முடிந்தது, இளம் வயதிலேயே படத்தை இயக்க முடிந்தது, இசையமைக்க முடிந்தது, பாடல் எழுந்த முடிந்தது.

என்ன ஆனாலும் டி.ஆர்தான்: சினிமாவின் காலகட்டம் மாறும்போது பலரும் அதற்கு ஈடுகொடுக்க முடியாமல் ஒதுங்கிக்கொள்வார்கள். ஆனால் டி.ராஜேந்தரோ அப்படி இல்லை. தற்போதைய தலைமுறை சினிமா மாறிக்கொண்டிருந்த ஆர்மபக்கட்டத்தில் வீராசாமி என்ற படத்தை இயக்கினார். ஏன் சமீபத்தில்கூட சந்தானத்திடம் ஒரு கதை யோசித்திருக்கிறேன் நீ நடிகர் சந்தானமாகவே நடி என அவர் சொன்னதாக சந்தானமே தெரிவித்திருந்தார்.
படு கஷ்டம்: டி.ராஜேந்தர் தனது ஆரம்பகாலத்தில் ரொம்பவே கஷ்டப்பட்டவர். அதாவது வறுமையின் கோரப்பிடியிலிருந்துதான் அவர் வளர்ந்து எழுந்தார். தனது சொந்த ஊரான மயிலாடுதுறையில் திரைப்படம் பார்க்க டிக்கெட் எடுப்பதற்கு பணம் இல்லாமல், அந்தத் தியேட்டருக்கு வெளியே இருக்கும் சாக்கடை ஓரமாக நின்றுகொண்டு வசனங்களையும் பாடல்களையும் கேட்டு வளர்ந்தவர் அவர். அதேபோல் தனது முதல் படமான ஒருதலை ராகம் படத்தின் தயாரிப்பாளர் இப்ராஹிமின் வீட்டு தோட்ட வேலைகளையும் செய்தவர்.
கூலியில் ராஜேந்தர்: சினிமாவிலிருந்து ஒதுங்கிய அவர் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படத்தில் ஒரு பாடலை பாடியிருக்கிறார். சமீபத்தில்தான் அந்தப் பாடலின் வீடியோ வெளியானது.அதில் டி.ராஜேந்தர் படு ஸ்டைலாக நடனமாடியிருந்தார். அது பெரிய வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றிருக்கிறது. இந்நிலையில் அவர் ஒரு விழாவில் பேசிய விஷயம் ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
டி.ஆர்.பேச்சு: அவர் பேசுகையில், "நான் இப்போதெல்லாம் எங்கேயும் போவதில்லை. ஒரு தலை ராகம் படம் செய்த பிறகு அதில் பணியாற்றிய அனைவருக்குமே ஷீல்டு கிடைத்தது. ஆனால் எனக்கு ஒரு டி கிளாஸ்தான் கிடைத்தது.உங்களுக்கு ஷீல்டு தரவில்லையே என்று பலரும் கேட்டார்கள்.எனக்கு ஷீல்டு கொடுக்க்காவிட்டாலும் இந்த ஃபீல்டை கொடுத்த ஆண்டவனுக்குத்தான் தினமும் நன்றி சொல்லிக்கொண்டிருக்கிறேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











