நடிகையுடன் விஜயகாந்த்துக்கு நடக்கவிருந்த திருமணம்?.. உள்ளே புகுந்து தடுத்த நண்பர்.. சீக்ரெட் சொன்ன பிரபலம்
சென்னை: விஜயகாந்த் கடந்த 2023ஆம் ஆண்டு உடல்நல குறைவால் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. அவர் மறைவைத் தொடர்ந்து அவரது மகன் சண்முக பாண்டியன் திரைத்துறையில் தனது தந்தை போன்றே வளர வேண்டும் என்பது ரசிகர்களின் ஆசையாக இருக்கிறது. இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் டி.சிவா அளித்த ஒரு பேட்டியில் பேசியிருக்கும் விஷயம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
கேப்டன் விஜயகாந்த் 100 படங்களுக்கும் மேல் நடித்து தனக்கென தனி இடத்தை கடைசிவரை வைத்திருந்தார். ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கு அசால்ட்டாக டஃப் கொடுத்தது மட்டுமின்றி; கிராமங்களில் அவர்களைவிடவும் அதிக ரசிகர்களை கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகராக மட்டுமின்றி நடிகர் சங்க தலைவராகவும் பொறுப்பு வகித்த பல சிக்கல்களை தீர்த்து வைத்த அவர் அரசியலில் மட்டும் சறுக்கிவிட்டார்.
ஏன் சறுக்கினார்?: அவர் கட்சி ஆரம்பித்து முதல் தேர்தலில் தனக்கு இருக்கும் வாக்கு வங்கியை நிரூபித்தார். இதன் காரணமாக அடுத்தடுத்த தேர்தல்களில் பிரதான கட்சிகளான திமுகவும், அதிமுகவும் விஜயகாந்த்தை தன்னுடன் சேர்த்துக்கொள்ள முட்டிமோதின. அந்தப் போட்டியில் அதிமுக வெற்றி பெற்றது. ஆனால் ஜெயலலிதாவை கேப்டன் பகைத்துக்கொண்டது அவரது அரசியல் வாழ்க்கைக்கு முடிவுரை எழுத ஆரம்பித்தது. அவருடன் இருந்த எம்.எல்.ஏக்கள் அவரிடமிருந்து விலக; கொஞ்சம் கொஞ்சமாக சரிய ஆரம்பித்தார்.

உடல்நல குறைவு: ஒருகட்டத்தில் அவருக்கு உடல்நலமும் சரியில்லாமல் போக; அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை பெற்று திரும்பி வீட்டில் ஓய்வாக இருந்தார். ஆனால் திடீரென அவருக்கு மீண்டும் உடல்நலம் சரியில்லாமல் போக கடந்த 2023ஆம் ஆண்டு உயிரிழந்தார். அவர் உயிரிழந்ததை நினைத்து ஒட்டுமொத்த தமிழ்நாடும் கண்ணீர் சிந்தியது. இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் டி.சிவா விஜயகாந்த் பற்றி பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியிருக்கிறது.
டி.சிவா பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "விஜயகாந்த்துக்கு பெரிய பெரிய தொழிலதிபர்கள், பெரிய ஆட்கள் எல்லாம் தங்கள் பெண்ணை கட்டிக்கொடுக்க தயாராக இருந்தார்கள். அதுமட்டுமின்றி என்ன வேண்டுமானாலும் செய்ய ரெடி என்றும் சொன்னார்கள். மேலும் ஒரு நடிகையும் அவருக்கு திருமணம் நடக்கவிருந்தது. ஆனால் விஜயகாந்த்தின் நெருங்கிய நண்பரான ராவுத்தர் அந்தத் திருமணத்தை வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.
விஜயகாந்த்தும் மறுத்துவிட்டார்: தனது நண்பர் ராவுத்தர் சொன்னதை அடுத்து, 'எனக்கு உன்னைவிட யாரும் நல்லது யோசிக்கமாட்டார்கள்' என சொல்லிவிட்டு; அந்தத் திருமணத்தை வேண்டாம் என்று சொல்லிவிட்டார்" என்றார். அந்த நடிகை யார் என்று டி.சிவா சொல்லவில்லை. அதேசமயம் 80களில் விஜயகாந்த்தும், ராதிகாவும்தான் காதலித்தார்கள். அவர்களுக்குத்தான் திருமணம் நடக்கவிருந்தது என்று மூத்த சினிமா பத்திரிகையாளர்கள் கூறுகிறார்கள்.


Click it and Unblock the Notifications











