சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த ஃபேமிலி படங்கள்.. அடுத்தடுத்து ஹிட் அடித்த வி. சேகர்.. ஒரு ரவுண்டப்!

சென்னை: தமிழ் சினிமாவில் 90களில் தனது குடும்ப பாங்கான படங்களை எடுத்து அதன் மூலம் வெற்றி மேல் வெற்றி குவித்தவர் இயக்குநர் வி. சேகர். அவரது படம் வருகிறது என்றாலே, படம் முழுக்க செண்டிமெண்ட், அழுகை, எமோஷனல் என அனைத்திலும் கலந்து கட்டி அடித்தாலும், ஹேப்பி என்டிங் ரசிகர்களுக்கு தரமான டேக் அவே படங்களாக இருந்ததால், அவருக்கு வெற்றி மேல் வெற்றி குவிந்தது. மேலும் பல ஸ்டார் ஹீரோக்கள் இருந்தபோது, தனது படத்தின் கதாபாத்திரத்துக்கு ஏற்ற நடிகர்களை தேர்வு செய்து ஹிட் கொடுத்தவர்.

இயக்குநர் வி. சேகர் இயக்கத்தில் மொத்தம் 16 படங்கள் வெளியாகியுள்ளது. 1990ஆம் ஆண்டில் 2003ஆம் ஆண்டு வரை 15 படங்களும், 2014ஆம் ஆண்டு தனது 16 வது படத்தையும் இயக்கினார். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த சரவணப்பொய்கை படத்தின் மூலம் தனது மகன் கார்ல் மார்க்ஸை கதாநாயகனாக அறிமுகம் செய்து வைத்தார். அவரது படங்களில் காமெடி ஜாம்பவான்களான விவேக், வடிவேலு ஆகிய இருவரையும் ஒரே படத்தில் நடிக்க வைத்துள்ளார். அதில் சக்சஸ் கண்டவரும் இவர்தான் என்பது கவனிக்க வேண்டிய ஒன்று.

இயக்குநர் வீ. சேகரின் படங்கள் குறித்து எக்ஸ் பக்கத்தில் 'Pixelated Pigeon' என்ற பெயர் கொண்ட ரசிகர், பட்டியலிட்டு அசத்தியுள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அவரது பதிவில், " இயக்குநர் வி. சேகர் தமிழ் சினிமாவில் காமெடி கலந்து குடும்பப் படங்கள் எடுக்குறதுல பேமஸ். அவரு படத்தின் கேரக்டர்கள் எல்லாம் நம்ம வீட்டு ஆளுங்க மாதிரி இருப்பாங்க, சின்ன சின்ன சண்டை, அதேபோல் படத்தில் ஒவ்வொரு கேரக்டருக்கும் தனி இடம் கொடுத்து, குடும்ப பாசத்தை எளிமையா சொல்வார். எல்லாரும் ஒண்ணு சேர்ந்து பிரச்னையை தீர்க்கும் மாதிரி கதைய கலகலப்பா முடிப்பார்.

Tamil Cinema Family Entertainer Director V Sekar Cinema Roundup throw back

பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கனும்: "நீங்களும் ஹீரோதான்" 1990-ல வந்த தமிழ் படம், வி. சேகர் முதல் முதலா டைரக்ட் பண்ணது. ஒரு ஊருக்கு படப்பிடிப்புக்கு வரும் டைரக்டர் பிரேம்நாத் (நிழல்கள் ரவி) ரசிகர் கிளப் நடத்துற ரத்தன் ராஜ் (வாசு விக்ரம்), சினிமா நடிகனாகணும்னு கனவு காணும் பாவாடை சாமி (கவுண்டமணி), பக்கிரிசாமி (செந்தில்) அவங்க கூத்துதான் கதை. சில்க் ஸ்மிதா, எம்.என். நம்பியார் எல்லாம் நடிச்சு, கங்கை அமரன் பாட்டு போட்டு, நட்சத்திரங்களோட வாழ்க்கையை கிண்டல் செய்து சிரிப்பு கலந்து சொல்லியிருப்பாங்க. பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கனும் -கணவன்-மனைவி உறவில் மனைவி சொல்றத கேட்டு எப்படி வாழ்க்கைய சந்தோஷமா இருக்கும்னு சிரிச்சுக்கிட்டே சொல்ற படம் . கவுண்டமணி, செந்தில், மனோரமா நடிச்சு படத்தை கலகலப்பாக்கிருக்காங்க. பொண்டாட்டி சொல்லுறத கேட்டா வாழ்க்கை ஜாலியா போகும்னு பசங்க மத்தியில கலாய்ச்சு ஒரு மெசேஜ் விடுறாங்க!

பொறந்த வீடா புகுந்த வீடா: பொண்ணு பிறந்த வீட்டுக்கும் புகுந்த வீட்டுக்கும் இடையில இருக்குற பாசப் பிணைப்பையும், அதுல வர்ற சின்னச் சின்ன சண்டைகளையும் கலகலப்பா சொல்லுது. மனைவி வீட்டுக்காரங்கவும் மாமியார் வீட்டுக்காரங்கவும் ஒண்ணு சேர்ந்தா வாழ்க்கை எப்படி ஜோரா இருக்கும் கேள்வி கேட்குற படம் பொறந்த வீடா புகுந்த வீடா. குடும்பத்துல வருமானத்தை விட செலவு அதிகமாகும் போது வர்ற பிரச்சினைகளை காமெடி கலந்து சொல்லுது. கவுண்டமணி, செந்தில், காமெடி அற்புதமா பண்ணியிருக்காங்க. வரவு செலவு கணக்கு பார்த்து, குடும்பத்தை ஜாலியா நடத்தணும்னு கலகலப்பா ஒரு பாடம் சொல்லுது என்றால் அது வரவு எட்டணா செலவு பத்தணா படம் தான்.

Tamil Cinema Family Entertainer Director V Sekar Cinema Roundup throw back

கூடிவாழ்ந்தால் கோடி நன்மை - கூட்டு குடும்பமா ஒண்ணு சேர்ந்து வாழ்ந்தால் எல்லா பிரச்னையும் தீர்ந்து சந்தோஷம் கிடைக்கும், ஒற்றுமையின் சிறப்பை, வாழ்க்கை எதார்த்தங்களை காமெடியா சொல்லுகிற படம். திருமணத்திற்கு பிறகு அம்மா - மகன் உறவுல வர்ற சின்னச் சின்ன மனஸ்தாபங்களையும், குடும்ப பாசத்தையும் கலகலப்பா சொல்லும் படம் நான் பெத்த மகனே. இதில், கவுண்டமணி, செந்தில், வடிவேலு நடிச்சு, காமெடிய கலந்து கதையை கொண்டு போயிருக்காங்க. வி. சேகர் இயக்கிய படத்துலேயே மெஹா ஹிட் படம் இது தான். ஆண்களை போல பெண்களுக்கு சொத்து உள்ளிட்டவைகளில் சம பங்கு இருக்குன்னு சொல்லும் படம் "காலம் மாறிப் போச்சு" காமெடி ட்ராமாவா இந்த படம் இருக்கும்.

பொங்கலோ பொங்கல்: பொங்கல் பண்டிகை மையமாகக் கொண்டு, குடும்பத்தில் நடக்கும் சின்னச் சின்ன கலாட்டாக்கள், பாசப் பிணைப்பு எல்லாம் காமெடி கலந்து சொல்லுது. பண்டிகையின் சந்தோஷத்தையும், குடும்பம் ஒண்ணு சேர்ந்தா எப்படி ஜாலியா இருக்கும் என்பதையும் கலகலப்பா சொல்லும் படம் பொங்கலோ பொங்கல். இதில் விக்னேஷ், சங்கீதா உள்ளிட்ட பலர் நடித்தார்கள். கணவன்-மனைவி உறவில் மனைவியின் பாசமும், அக்கறையும் எப்படி வாழ்க்கைய ஜாலியா மாத்துதுன்னு கலகலப்பா சொல்லும் படம் எல்லாமே என் பொண்டாட்டி தான். பொண்டாட்டி அன்பா பார்த்துக்கிட்டா, வாழ்க்கை சூப்பரா இருக்கும்னு சிரிப்போட ஒரு மெசேஜ்! ஒவ்வொருத்தரும் தங்களோட திறமைக்கு ஏற்ற மரியாதையும், பெருமையும் பெறணும்னு காமெடியா சொல்ற படம். ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் உழைப்புக்கும் திறமைக்கும் மதிப்பு குடுத்தா வாழ்க்கை சிறப்பா இருக்கும்னு சொல்லும் படம் விரலுக்கேத்த வீக்கம்.

Tamil Cinema Family Entertainer Director V Sekar Cinema Roundup throw back

வீட்டோட மாப்பிள்ளை: மாப்பிள்ளை, மனைவியுடன் வீட்டோட இருந்தாலும், குடும்பத்துல அன்பும் மரியாதையும் எப்படி வாழ்க்கைய ஜாலியாக்கும்னு காமெடியா சொல்ற படம் வீட்டோட மாப்பிள்ளை. வீட்டு கல்யாணத்துல நடக்குற கலகலப்பான குழப்பங்கள், சின்னச் சின்ன சண்டைகள், அதையெல்லாம் அன்பால தீர்க்கும் விதத்தை காமெடியா சொல்ற படம் நம்ம வீட்டு கல்யாணம். கணவன் மனைவிக்குள் ஒவ்வொருத்தருக்கும் இருக்குற வெவ்வேர ஆசைகள், அதனால வர்ற கலாட்டாக்கள், குடும்பத்துல அன்பால எப்படி எல்லாம் சரியாகும் என்று காமெடியா சொல்லும் படம் ஆளுக்கொரு ஆசை.

Tamil Cinema Family Entertainer Director V Sekar Cinema Roundup throw back

விரலுக்கேத்த வீக்கம்: வி.சேகர் இயக்கத்தில் பல படங்கள் வெற்றிப் படங்கள் என்றாலும் "விரலுக்கேத்த வீக்கம்" படம் தான் பெரும்பான்மையான ரசிகர்களுக்கு பிடித்த படம் என்று கூறலாம். இவரது இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இவரது பதிவைப் பார்த்த ரசிகர்கள் இயக்குநர் வி. சேகரின் படங்களில் தங்களுக்கு மிகவும் பிடித்த படங்கள் குறித்து பதிவிட்டு வருகிறார்கள். இவர் படங்கள் மட்டும் இல்லாமல், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கியுள்ளார். அதாவது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ' பொறந்த வீடா புகுந்த வீடா" மற்றும் ராஜ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வீட்டுக்கு வீடு ஆகிய தொடர்களையும் இயக்கியுள்ளார். இந்த ரசிகரின் பதிவைப் பார்த்த பலரும் இதுபோன்ற படங்கள் இப்போது குறைந்து விட்டது எனவும் பேசி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X