ஏக்கத்தில் விஜய் அம்மா! சங்கீதாவுக்கு நான் மாமியாராக இருப்பது.. என இழுத்துக் கொண்டு சொன்னது இதுதான்!
சென்னை: தமிழ் சினிமாவில் தனது தொடக்க காலத்தில் பெரும் விமர்சனங்களையும் அவமானங்களையும் சந்தித்த பலர் அதன் பின்னர் தமிழ் சினிமாவின் உச்சகட்ட நட்சத்திரமாக மாறியுள்ளனர். இந்த வரிசையில் நடிகர் விஜய்க்கும் இடம் உண்டு. விஜயின் சினிமா வாழ்க்கை குறித்து விமர்சிப்பவர்கள், விஜயின் அப்பா சினிமா இயக்குநர் அதனால்தான், அவர் எளிதாக சினிமாவில் காலூன்ற முடிந்தது எனக் கூறுவார்கள். ஆனால் விஜயின் ஆரம்பகால சினிமா அவ்வளவு எளிதானதாக இல்லை. விஜய் மனமுடைந்த காலகட்டங்களில் வேண்டுமானால் அவரது குடும்பம் அவருக்கு உறுதுணையாக இருந்திருக்கலாமே தவிர, தன்னை தமிழ் சினிமாவின் உச்சகட்ட நடிகராக நிலைநிறுத்திக் கொள்வதற்கு விஜய் எக்கச்சக்க முயற்சிகளை எடுத்தார் என்றே கூறவேண்டும்.
உச்சநட்சத்திரமாக மாறிய பின்னர் அடுத்த சூப்பர் ஸ்டார் இவர்தான் என பேசிக்கொண்டு இருக்கும்போது, சினிமாவில் இருந்து விலகி முழுநேர அரசியல்வாதியாக செயல்படபோகின்றேன் என அறிவித்தது தமிழ்நாடு அரசியல் களத்தில் பலருக்கு பெருமூச்சை ஏற்படுத்தியது என்றே கூறலாம். விஜய் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் தி கோட். இந்த படம் இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதையடுத்து விஜய் தனது 69வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படமே இவரது சினிமா வாழ்க்கையில் கடைசிப் படமாக பார்க்கப்படுகின்றது.

தளபதி 50: இந்நிலையில் நடிகர் விஜய் வரும் 22ஆம் தேதி தனது 50வது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார். இதற்கான ஏற்பாடுகள் தமிழ்நாடு முழுவதும் விஜய் ரசிகர்களும் அவரது தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகளும் மும்முரமாக ஏற்பாடு செய்து வருகின்றனர். அன்றைய தினத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான துப்பாக்கி மற்றும் போக்கிரி படங்கள் ரி ரிலீஸ் செய்யப்படவுள்ளது.

விஜயின் குடும்பம்: தமிழ் சினிமாவின் உச்சபட்ச நடிகராக ஒருவர் இருக்கின்றார் என்றால் அவரது சொந்த வாழ்க்கை குறித்து தெரிந்து கொள்ள யாருக்குத்தான் ஆசை இருக்காது. விஜயின் தொடக்க கால சினிமாவில் அன்றைய காலகட்டத்தில் இருந்த ஒரு நடிகையுடன் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டார். கடந்த 2009ஆம் அண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜோசன் சஞ்சய் மற்றும் திவ்யா சாஷா என ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

விஜய் அம்மா பேட்டி: இந்நிலையில் விஜயின் மனைவி குறித்து விஜயின் தாயாரான, ஷோபா சந்திரசேகர் சில ஆண்டுகளுக்கு முன்பு அளித்த பேட்டி ஒன்றில், " சங்கீதாவும் நானும் நல்ல நண்பர்கள், அவ்வளவுதான். அதுவும் அதுவாகவே அமைந்தது. கீதாவின் குடும்பம் இலங்கையில் பிறந்து லண்டனில் வளர்ந்தவர்கள். லண்டனில் படித்துவிட்டு சென்னைக்கு வந்தாலும், சங்கீதா ஒரு டிப்பிக்கள் ஹவுஸ் வைஃப். குடும்பத்தை பராமரிப்பதில் தலை சிறந்தவர். குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது. அவர்களை பள்ளிக்கு அழைத்துச் சென்றுவிட்டு மீண்டும் கூட்டி வருவது என எல்லா வேலைகளையும் அவரே பார்த்துக் கொள்வார். எங்களுக்கு எந்த வேலைகளும் இல்லை.

மாமியார்: சங்கீதாவுக்கு மாமியாராக இருப்பதும் விஜயின் குழந்தைகளுக்கு பாட்டியாக இருப்பதும் எனக்கு மகிழ்ச்சியாகவே இருக்கின்றது. வாரம் ஒருமுறை எங்களது வீட்டிற்கு அழைத்து வருவார்கள். அந்த ஒரு மணி நேரம் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன். அந்த ஒரு மணி நேரம் மீண்டும் எப்போது வரும் என ஏங்கிக்கொண்டே இருப்பேன்" எனக் கூறியுள்ளார்.

விஜயின் பிறந்த நாள் இன்னும் 5 நாட்களில் வரவுள்ள நிலையில் விஜயின் ரசிகர்கள் விஜய் குறித்த தகவல்களையும் அவரது குடும்பம் குறித்த தகவல்களையும் அதிகமாக இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











