Thaththuvamasi 6: சமூக நீதி குறித்து தவறான கருத்து.. விஜய் ஆண்டனியின் கிளாமர் பாட்டில் இப்படியா?
சென்னை: விஜய் ஆண்டனி நடித்து, இசையமைத்த படம் பிச்சைக்காரன் . இந்த படத்தின் ப்ரோமோவுக்காக கிளாமர் பாடல் என்றே ஒரு பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. நாம் ஏற்கனவே தத்துவமசி என்று துள்ளலிசை பாடல்களில் இருக்கும் வாழ்க்கை மற்றும் சமூகத் தத்துவங்களைப் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இம்முறை பிச்சைக்காரன் படத்தின் ப்ரோமோவுக்காக உருவாக்கப்பட்ட கிளாமர் பாடலில் இடம் பெற்ற வரிகளில் தத்துவமும் உள்ளது, தப்பும் உள்ளது. அது குறித்து பார்க்கலாம்.
இந்த கிளாமர் பாடலில் இடம் பெற்றுள்ள வரிகள் தொடக்கத்தில் இருந்து கடைசி வரை தத்துவங்கள் நிறைந்ததாகவும் சமூகத்தை நோக்கி கேள்வி கேட்பதாகவும் உள்ளது.
அதாவது, "பாழா போன
உலகத்துல காசு பணம்
பெருசே அந்த காசு பணம்
இல்லையினா காரி துப்பும்
பர்சே" என்று உள்ள இந்த வரிகள் இந்த பணம் இருந்தால்தான் மக்கள் நம்மை மதிப்பார்கள் என்று கூறுகிறது. இங்கு மனிதனும் மனிதனின் உணர்வுகளை காட்டிலும் பணத்துக்குத்தான் மதிப்பு அளிக்கிறார்கள் என்ற கசப்பான உண்மையை சொல்லுகிறார்.

அதேபோல், " நாலு பேரு
நல்லாருக்க நீ நியாயம்
தர்மம் பாத்த அந்த நாலு
பேரும் கண்டுக்கல சோ
வாழ்க்கையில நீ தோத்த" சுயநலத்துடன் இயங்குவதில் அதிக முனைப்பு காட்டும் இன்றைய உலகில் பொது நலனுக்காக அக்கறை காட்டும் நபர்கள் மிகவும் குறைவு. அப்படி இருக்கும்போது, சமூக நலனின் மீது அக்கறை காட்டும் மனிதர்களை சக மனிதர்கள் கூட ஆதரிப்பது இல்லை என்று கூறுகிறது.
இதற்கு அடுத்து, " ஜாதி பேர சொல்லி
சொல்லி ஊர் தாலிய அறுப்பார்
ஆண் : நான் அந்த கடவுளை
பார்த்து கேட்கிறேன்
ஆண் : தலைவர் ஜெயிலுக்குள்ள
போனா கூட ஏசில தான் இருப்பார்" இந்த வரிகள், சில அரசியல் கட்சித் தலைவர்கள் சாதி பெயரைச் சொல்லி கலவரங்களை உண்டாக்கி, அதனால் பல கொலைகளுக்கு வழி வகுக்கிறார்கள் என்றும், ஒருவேளை தலைவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு ஜெயிலுக்கு சென்றால் கூட அவர்கள் ஏ.சி. அறையில்தான் இருப்பார்கள் என்று கூறுகிறார் பாடலாசிரியர்.

அடுத்து, " நிர்பாயாவ கொன்ன
நாயி ரிலீஸ் ஆவுறான்
நியாயத்துக்கு போனவன்
எல்லாம் கம்பி எண்ணுறான்
பாடையில போனா கூட
லஞ்சம் கேக்குறான் கருப்பு
பணத்தை எல்லாம் எங்க
வைக்கிறான்" இந்த வரிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட நிர்பயாவை நினைவூட்டுகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய, நான்குபேர் கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் 20ஆம் தேதி தூக்கிலடப்பட்டனர். அதே நேரத்தில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மைனர் மட்டும் சிறை தண்டனை முடிந்து விடுதலை ஆனார். ஆனால் நியாயத்துக்காக போராடுபவர்கள் சிறையில் இருக்கிறார்கள். இறந்த பின்னரும் கூட அரசு மருத்துவமனைகளில் லஞ்சம் கேட்கிறார்கள் என்று விவரிக்கிறது இந்த வரிகள்.
மேலும், " கந்து வட்டி
விட்டவென்லாம் நாட்ட
ஆளுறான் வேலை வெட்டி
இல்லாதவன் சாமியார்
ஆகுறான் கோட்டாவுல
சீட்டு வாங்கி டாக்டர்
ஆவுறான் தப்பு தப்பா
ஊசி போட்டு சாவடிக்கிறான்" என்ற வரிகளில் தத்துவமும் இடம் பெற்றுள்ள அதே நேரத்தில், போகிற போக்கில் ஒரு பிற்போக்குத்தனமான கருத்தை நியாயப்படுத்தும் வரிகளும் இடம் பெற்றுள்ளது. அதாவது, கந்து வட்டி விட்டவென்லாம் நாட்ட ஆளுறான் வேலை வெட்டி இல்லாதவன் சாமியார் ஆகுறான் என்று கூறிவிட்டு, அதன் பின்னர் சொல்லி இருக்கும் வரிகள் விஷமத்தனமான வரிகள், அதாவது, " கோட்டாவுல சீட்டு வாங்கி டாக்டர் ஆவுறான் தப்பு தப்பா ஊசி போட்டு சாவடிக்கிறான்" என்ற வரிகள் மிகவும் அபத்தமான வரிகள். போகிற போக்கில் தமிழ்நாட்டை முற்போக்கு மாநிலமாக மாற்றி உள்ள சமூக நீதி தத்துவத்தை அவலமாக சித்தரிக்கிறது. இந்த வரிகள் கண்டனத்துக்கு உரியது.

கற்பழிப்பு பெருகிடிச்சே
தமிழின கலாச்சாரம்
மறைஞ்சிடுச்சே
எல்லாத்தையும் மறந்து
கொண்டாடுவோம் நம்ம
சுதந்திர தினத்த
கொண்டாடுவோம்" இந்த வரிகள் சாமானியனின் மனதில் இருப்பதை பிரதிபலிப்பது போல உள்ளது. வருடாவருடம் சுதந்திர தினம் என்ற ஒரு தினத்தை நாம் கொண்டாடிக் கொண்டு தான் இருக்கிறோம், ஆனால் நாட்டில் ஆண்டுக்கு ஆண்டு கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவுகள் பெருகிக் கொண்டே உள்ளது என்றும், தமிழனத்தின் கலாச்சாரம் மறைந்துவிட்டது என்றும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











