அஜித்தை அவமானப்படுத்திய இயக்குநர்.. அந்த நாள் வரும்.. பதிலுக்கு ஏகே செய்தது என்ன தெரியுமா?
சென்னை: அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. அந்தப் படத்தில் நடித்துகொண்டிருந்தபோதே தன்னுடைய 62ஆவது படத்தில் கமிட்டானார். அந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் ஷூட்டிங் இடையில் தடைப்பட்டிருந்த சூழலில் மீண்டும் தொடங்கி இப்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்துவருவதாக சொல்லப்படுகிறது. இந்தச் சூழலில் அஜித் வாழ்க்கையில் நடந்த சம்பவம் ஒன்றை பற்றி தெரியவந்திருக்கிறது.
அஜித் இப்போது விடாமுயற்சி படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். மகிழ் திருமேனி இயக்கும் அந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்திலிருந்து எந்த அப்டேட்டும் வராவிட்டாலும் படத்தின் ஷூட்டிங் முதல் ஷெட்யூல் அஜர்பைஜானில் தொடங்கி நடந்து முடிந்தது. அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் அஜித்தின் பிஆர்ஓ சுரேஷ் சந்திரா வெளியிட்டிருந்தார். இதனால் படம் உயிர்ப்போடுதான் இருக்கிறது என்று அவரது ரசிகர்கள் நிம்மதியடைந்தனர்.

இறுதிக்கட்ட பணிகள்: நீண்ட இடைவெளிக்கு பிறகு படத்தின் ஷூட்டிங் மீண்டும் அஜர்பைஜானில் தொடங்கியது. அங்கு விறுவிறுப்பாக நடந்த ஷூட்டிங் முடிவடைந்ததை அடுத்து; இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுவருவதாக கூறப்படுகிறது. படத்தின் ரிலீஸ் தேதி எப்போது என்பது உறுதியாக தெரியாத சூழலில்; இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் விடாமுயற்சி ரிலீஸாகும் என்று நடிகர் அர்ஜுன் தெரிவித்திருப்பது அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
குட் பேட் அக்லி: இதற்கிடையே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க கமிட்டானார் அஜித். இதுவரை படத்திலிருந்து இரண்டு போஸ்டர்கள் வெளியாகியிருக்கின்றன. மேலும் முதல் ஷெட்யூல் ஷூட்டிங்கும் நடந்து முடிந்திருப்பதாக கூறப்படுகிறது. இதில் ஸ்ரீலீலா ஹீரோயினாக நடிக்கிறார் என்றும், நயன்தாராவை நடிக்க வைக்கவும் பேச்சுவார்த்தைகள் நடந்துவருவதாகவும் கூறப்படுகிறது. இருந்தாலும் உறுதியான தகவல்கள் இதுவரை எதுவும் வரவில்லை.
விறுவிறு ஷூட்டிங்: படமானது அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்தப் படத்தில் இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கிறார். ஏற்கனவே அஜித்தை வைத்து வாலி படத்தையும் இயக்கியிருந்த சூர்யா; ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி படத்திலும் நடித்திருந்தார். எனவே இந்த காம்போ இப்படத்திலும் ஒர்க் அவுட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அஜித் சந்தித்த அவமானம்: இந்நிலையில் அஜித் தனது வாழ்க்கையில் சந்தித்த அவமானம் குறித்து தெரியவந்திருக்கிறது. அதாவது அஜித் வளர்ந்துவந்த சமயத்தில் ஒரு பெரிய இயக்குநரின் பிறந்தநாள் வந்ததாம். அதற்காக அவர் ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் பார்ட்டி ஏற்பாடு செய்திருந்தாராம். அவரது பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லலாமே என்று அஜித்தும் அந்த ஹோட்டலுக்கு சென்று வெளியே நீண்ட நேரம் காத்துக்கொண்டிருந்தாராம்.
ஒருநாள் வரும்: அஜித் காத்திருந்தது அந்த இயக்குநருக்கும் தெரியுமாம். ஆனால் அஜித்தை அவர் கண்டுகொள்ளவே இல்லையாம். ரொம்ப நேரம் கழித்து அந்த இயக்குநரின் உதவி இயக்குநர் வந்து அஜித்திடம், 'டைரக்டர் சார் இப்போ பிஸியா இருக்காங்க. பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்ல சொன்னார்' என கூறினாராம். இதனால் கடுப்பான அஜித், 'ஒரு நாள் வரும்' என்று மட்டும் சொல்லிவிட்டு சென்றாராம். காலப்போக்கில் அஜித் பெரிய ஸ்டாராக வளர்ந்துவிட்டார். அந்த இயக்குநர் அஜித்தை வைத்து ஒரு படம் செய்யலாம் என்று முடிவெடுத்து எவ்வளவோ முயற்சி செய்தாராம். ஆனால் அஜித்தோ கடைசிவரை அந்த இயக்குநரோடு பணியாற்றவே இல்லையாம். இதனை தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்திருந்தார்.


Click it and Unblock the Notifications











