என்னது படையப்பா படத்தில் விஜய் நடித்திருக்க வேண்டியதா?.. அடடா மிஸ் ஆகிடுச்சே
சென்னை: ரஜினி நடித்து மெகா ஹிட்டான படையப்பா படத்தில் விஜய்யும் நடிக்க வேண்டியதிருந்தது என்ற செய்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த படம் படையப்பா. அவருடன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்,ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா, நாசர், மணிவண்ணன், வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்தப் படம் 90ஸ் கிட்ஸின் பேவரைட்டாக இன்றுவரை திகழ்கிறது.

மெகா ஹிட்டான படையப்பா
படையப்பா திரைப்படம் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியானது. அதுவரை ரஜினிகாந்த் பல படங்களை மெகா ஹிட்டாக கொடுத்திருக்கிறார். ஆனால் படையப்பா படம் அதையெல்லாம் தாண்டிய ஹிட்டாக அமைந்தது. ரஜினியின் ஸ்டைல், ரம்யா கிருஷ்ணனின் மிரட்டலான நடிப்பு, ஏ.ஆர்.ரஹ்மானின் இசை, கே.எஸ்.ரவிக்குமாரின் மேக்கிங் என படையப்பா திரைப்படம் முழுக்க முழுக்க பக்கா கமர்ஷியல் பேக்கேஜாக அமைந்தது.

படையப்பா படம் பார்த்துவிட்டு கமல் ஹாசன் கொடுத்த ஐடியா
படையப்பா படத்தை முழுவதுமாக படமாக்கி முடித்துவிட்டு பார்க்கும்போது அதன் ரன்னிங் டைம் மொத்தம் நான்கு மணி நேரமாக இருந்ததாம். இதனால் என்ன செய்வதென்று தெரியாத ரஜினியும், கே.எஸ்.ரவிக்குமாரும் படத்துக்கு மொத்தம் இரண்டு இடைவேளைகள் விடலாம் என முடிவெடுத்தார்களாம். ஆனால் இதை கேள்விப்பட்ட கமல் ஹாசன் இரண்டு இடைவேளைகள் விடுவதெல்லாம் ஒத்துவராத விஷயம். எனவே படத்தின் நீளத்தை குறைத்து வெளியிடுங்கள் என ஐடியா கூறினாராம்.

நடிகர் திலகம் சிவாஜிக்கு ஒருகோடி சம்பளம்
நடிப்பு பல்கலைக்கழகம் என புகழப்படும் என சிவாஜி கணேசன் படையப்பா படத்தில் நடிக்கும்வரை அதிகபட்ச சம்பளமாக 20 லட்சம் ரூபாயைத்தான் பெற்றிருக்கிறார். எனவே படையப்பா படத்துக்கும் லட்சங்களில்தான் சம்பளம் கிடைக்கும் என நினைத்திருந்த சிவாஜிக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளமாக அளிக்கப்பட்டிருக்கிறது. அப்படி ஒரு கோடி ரூபாயை சம்பளமாக தர சொன்னது ரஜினிகாந்த் என்பதும், அதுதான் சிவாஜி கணேசன் முதலும் கடைசியுமாக ஒரு கோடி சம்பளம் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

படையப்பா படத்தில் விஜய் நடிக்க வேண்டியதா?
இப்படி பல சிறப்புகளை கொண்ட மெகா ஹிட் திரைப்படமான படையப்பா குறித்து புதியவிஷயம் ஒன்று தெரியவந்திருக்கிறது. அதாவது அந்தப் படத்தில் நடிக்க விஜய்யிடம்தான் முதலில் படக்குழு கேட்டதாகவும் சில காரணங்களால் விஜய்யால் அந்தப் படத்தில் நடிக்க முடியவில்லை எனவும் கோலிவுட்டில் பேச்சு ஒன்று ஓடிக்கொண்டிருந்தது.. ஆனால் படையப்பா படத்தில் நடிக்க தளபதி விஜய் மறுப்பு தெரிவிக்கவில்லையாம். மாறாக அவரே வாண்ட்டடாக சான்ஸ் கேட்டாராம். அதை விஜய்யே பகிர்ந்திருக்கிறார்.

படையப்பாவில் சான்ஸ் கேட்டேன்
நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட விஜய் அந்த விவகாரம் குறித்து பேசிய வீடியோ இப்போது ட்ரெண்டாகியுள்ளது. அந்த வீடியோவில் பேசியிருக்கும் விஜய், "படையப்பா படத்தில் நடிக்க சொல்லி யாரும் என்னை கேட்கவில்லை. ரஜினி சாருடன் நடிக்க வேண்டும். எனக்கு சின்ன சான்ஸ் கொடுங்க என்று நானேதான் கேட்டேன். அந்த வாய்ப்பு வந்தால் நிச்சயம் நடிப்பேன்" என பேசியிருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் அடடா படையப்பா படத்தில் விஜய்யும் ரஜினியுடன் நடித்திருந்தால் சிறப்பாக இருந்திருக்குமே. அது மிஸ் ஆகிடுச்சே என கூறிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











