இமய மலை சித்தர் சொன்னதை அப்படியே படத்தில் வைத்த ரஜினி.. பட்டித்தொட்டியெங்கும் ஹிட்.. என்ன தெரியுமா?

சென்னை: பி. வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா, நாசர், வடிவேலு, நயன்தாரா, மாளவிகா, விஜயகுமார் உள்ளிட்டோர் நடித்திருந்த படம். இது மலையாளத்தில் முதலில் மணிசித்திரதாலு என்ற பெயரில் எடுக்கப்பட்டு ஹிட்டடித்தது. அதனையடுத்து கன்னடத்தில் ஆப்தமித்ரா என்ற பெயரில் வந்து மெகா ஹிட்டானது. அடுத்ததாக தமிழில் வெளியாகியும் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அந்தப் படம் மொத்தம் 800க்கும் மேற்பட்ட நாட்கள் தியேட்டர்களில் ஓடி கெத்து காண்பித்தது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த் நடித்த பாபா திரைப்படம் மோசமான தோல்வியை சந்தித்தது. சொல்லப்போனால் ரஜினியின் கரியரே அவ்வளவுதான் என்று பலரும் சொன்னார்கள். ரஜினி எந்த பதற்றமும் படாமல் மூன்று வருடங்கள் ரெஸ்ட் எடுத்தார். ரெஸ்ட் எடுத்தார் என்பதைவிடவும் அடுத்த மெகா ஹிட்டுக்கு அந்த மூன்று வருடங்களை இன்வெஸ்ட் செய்தார் என்றுதான் சொல்ல வேண்டும். அதன்படி தீவிரமான கதை கேட்டலுக்கு பிறகு பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி படத்தில் நடிக்க கமிட்டானார் சூப்பர் ஸ்டார்.

The Story Behind Rajinikanth s Iconic Lakalakalaka Dialogue in Chandramukhi
Photo Credit:

பயந்த ரசிகர்கள்: சந்திரமுகி என்ற பேய் படத்தில் நடிக்கிறாரே; ரஜினிக்கு தேவையான விஷயங்கள் எல்லாம் இருக்குமா என அச்சப்பட்டார்கள் ரசிகர்கள். ஏனெனில் அந்தக் கதை ஹீரோயினை மையமாக வைத்து உருவானது ஆகும். இதில் சூப்பர் ஸ்டாருக்கு என்ன வேலை என்றுதான் எல்லோரும் யோசித்தார்கள். ஆனால் தமிழுக்கு தகுந்தபடி சில மாற்றங்களை செய்திருந்தார். முக்கியமாக வடிவேலுவின் காமெடி எல்லாம் பட்டையை கிளப்பியது. வித்யாசாகரின் இசையும் படத்துக்கு பக்கபலமாக இருந்தது.

Also Read
சி.எம் ஆன பிறகு விஜய் கோட் போட காரணம் இதுதான்.. அவர் அதெல்லாம் தாங்கமாட்டாராம்.. அம்மா சொன்ன காரணம்
சி.எம் ஆன பிறகு விஜய் கோட் போட காரணம் இதுதான்.. அவர் அதெல்லாம் தாங்கமாட்டாராம்.. அம்மா சொன்ன காரணம்

ஸ்கோர் செய்த ஜோதிகா; ஆனாலும் ரஜினி மாஸ்: கிட்டத்தட்ட படத்தில் முக்கால் வாசி நேரம் ஜோதிகாவை மையமாக வைத்தே காட்சிகள் நகரும். ரஜினி ஸ்கோர் செய்ய வேண்டுமென்றால் வேட்டையன் கதாபாத்திரத்தில் மட்டும்தான். திறமையிருப்பவருக்கு சிறு புல்லும் ஆயுதம்தான் என்பதை சூப்பர் ஸ்டார் நிரூபித்தார். படத்தில் பெரும்பாலான நேரத்தை ஜோதிகா ஆக்கிரமித்து ஸ்கோர் செய்தாலும்; க்ளைமேக்ஸில் ரஜினிகாந்த் வேட்டையனாக வந்து அசால்ட்டாக அத்தனை பெயரையும் தட்டிக்கொண்டு சென்றார்.

அனைவரும் ஆச்சரியம்: சூப்பர் ஸ்டார் ஒருவர் ஹீரோயின் சென்ட்ரிக் சப்ஜெக்ட்டில் நடிப்பதே பெரிய விஷயம்; அப்படி நடித்து ஒரு மெகா ஹிட்டை கொடுத்துவிட்டாரே என்று ஆச்சரியப்பட்டார்கள் திரைத்துறையினர். ஜோதிகா கூட சில வருடங்களுக்கு முன்பு அளித்த ஒரு பேட்டியில், ரஜினி மாதிரி மற்ற ஹீரோக்களும் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க வேண்டும் என விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தார். ரஜினியின் வெற்றி படங்களில் சந்திரமுகிக்கு எப்போதுமே டாப் 5க்குள் இடம் இருக்கும்.

பி. வாசு ஷேரிங்ஸ்: தான் யானை இல்லை குதிரை என்பதை மீண்டும் நிரூபித்தார் அந்தப் படத்தில். அதில் வரும் ஹைலைட்டுகளில் ஒன்று, ரஜினி சொல்லும்,'லகலகலக' வசனம். அதனை அவர் வில்லத்தனத்தோடு சொல்லியபோது தியேட்டரே ஆர்ப்பரித்தது. இந்நிலையில் அது உருவான விதம் குறித்து பி.வாசு சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். பிரபுவின் அண்ணன் ராம்குமாருடைய யூடியூப் சேனலில் பேசிய இயக்குநர் வாசு, "சந்திரமுகி திரைப்படத்தில் ரஜினிக்கு வேட்டையன் கேரக்டர் மட்டும்தான் இருக்கிறது. அவர்தான் இமயமலை கதை சொன்னார்.

சித்தர் சொன்னது: அப்போதுதான் அவர் என்னிடம், 'இமய மலையில் ஒரு சித்தரை பார்த்தேன். அவர் கையில் கம்போடு ஒரு இடத்தில் அமர்ந்துகொண்டு லகலகலக என்று சொன்னார். சத்தத்தை மட்டும்தான் கேட்டேன். இரண்டு நாட்களாகியும் அவரை பார்க்க முடியவில்லை என கூறினார். அதிலிருந்துதான் அந்த ஐடியாவை சந்திரமுகி படத்தில் வைத்தோம்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X