பாலசந்தர் ஃபோன் செய்தால் போதும்.. ரஜினிகாந்த் இதைத்தான் செய்வார்.. பிரபலம் ஓபன் டாக்
சென்னை: ரஜினிகாந்த் இப்போது வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். அந்தப் படமானது அக்டோபர் மாதம் வெளியாகவிருக்கும் சூழலில் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்கிறார். இதன் டைட்டில் டீசர் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி சக்கைப்போடு போட்டு வரவேற்பை பெற்றது. கண்டிப்பாக இந்தப் படம் ரஜினியின் கரியரில் மெகா ப்ளாக் பஸ்டராக அமையும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். சூழல் இப்படி இருக்க பாலசந்தர் மீது ரஜினிகாந்த் வைத்திருந்த அளவு கடந்த மரியாதையை பார்க்கலாம்.
ரஜினிகாந்த் என்ற பெயரை தவிர்த்துவிட்டு தமிழ் சினிமாவின் வரலாற்றை எழுத முடியாது. தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்திய அளவில் அவருக்கு ஏராளமானோர் ரசிகர்களாக இருக்கிறார்கள். முக்கியமாக சாதாரணமானவர்கள் மட்டுமின்றி செலிபிரிட்டிகளும் ரஜினிகாந்த்தின் ரசிகர்கள்தான். ஏனெனில் தனது தனித்துவமான ஸ்டைல், பாடி லாங்குவேஜ், நடிப்பு என ஒவ்வொன்றிலும் ரஜினிகாந்த் அதகளம் செய்பவர். சினிமா துறைக்கு வருபவர்கள் எப்போதும் ரஜினிகாந்த்தை ரோல் மாடலாக எடுத்துக்கொண்டதுண்டு.

வேட்டையன்: அவரது நடிப்பில் கடைசியாக லால் சலாம் (கெஸ்ட் ரோலில் நடித்தார்) படம் வெளியானது. அதற்கு முன்னதாக ஜெயிலர் திரைப்படம் வெளியானது. ஜெயிலர் ரிலீஸ்வரை ரஜினிகாந்த்தின் சூப்பர் ஸ்டார் நாற்காலில் ஆடிக்கொண்டிருப்பதாகவும் விரைவில் அந்த சிம்மாசனத்திலிருந்து ரஜினி இறக்கப்படுவார் என்றும் பலர் பேசினார்கள். ஆனால் ஜெயிலர் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி எப்போது ரஜினிதான் சூப்பர் ஸ்டார் என்று அவரது ரசிகர்களை பேச வைத்தது. ஆனால் அடுத்து நடித்த லால் சலாம் சறுக்கிவிட்டது. இப்போது வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார் அவர்.
கூலி: அந்தப் படம் அக்டோபர் மாதம் திரைக்கு வரவிருக்கிறது. ஜெய் பீம் படத்தின் இயக்குநர் இயக்குவதால் இப்படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்கிறார். படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது. கமல் ஹாசனுக்கு எப்படி லோகேஷ் பிரமாண்ட ஹிட்டை கொடுத்தாரோ அதேபோல் கூலியும் அமைய வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
வறுமையில் ரஜினிகாந்த்: இதற்கிடையே ரஜினிகாந்த் இப்போது பக்குவப்பட்ட மனிதராகவும், உச்சபட்ச பணக்காரராகவும் இருக்கிறார். ஆனால் அவரது ஆரம்ப காலம் வறுமையின் பிடியில் சிக்கியிருந்தது. கூலி வேலை, நடத்துநர் என்று ஏகப்பட்ட பணிகளை செய்திருக்கிறார் அவர். பிறகு சினிமாவுக்கு வந்து சூப்பர் ஸ்டார் ஆனார். உயர்ந்த இடத்துக்கு சென்றாலும் தனது வறுமையை அவர் மறக்காததால்தான் அவர் எல்லோரிடமும் சகஜமாகவும், எளிமையாகவும் பழகுகிறார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்வதுண்டு.
பாலசந்தர் மேல் மரியாதை: ரஜினிகாந்த் இந்த உலகத்திலேயே ரொம்பவே மதிக்கக்கூடிய வெகு சிலரில் இயக்குநர் பாலசந்தருக்கு தனி இடம் உண்டு. தன்னை அறிமுகப்படுத்தியதால் அவரை கடைசிகாலம்வரை மரியாதையோடு நடத்தினார் ரஜினிகாந்த். அதாவது, பாலசந்தர் ஃபோன் செய்தால்கூட ரஜினிகாந்த் எழுந்து நின்றுதான், 'ஹலோ சொல்லுங்க சார்' என்று சொல்வாராம். அதேபோல் ரஜினி ஏதேனும் தவறான முடிவு எடுத்துவிட்டால் அதனை தடுத்து நிறுத்துவதும் பாலசந்தர்தானாம். அவர் கூறினார் மறுவார்த்தை பேசாமல் அந்த முடிவிலிருந்து சூப்பர் ஸ்டார் பின்வாங்கிவிடுவாராம். மேலும் தன்னுடைய வீட்டுக்கு பாலசந்தர் வருகிறேன் என்று சொன்னால் போதும், அவரை எப்படி வரவேற்பது, என்ன மாதிரியான சாப்பாடு கொடுப்பது என வீட்டில் இருப்பவர்களை படுத்தி எடுத்துவிடுவாராம் ரஜினி. இதனை தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.


Click it and Unblock the Notifications











