ஏய் யார் மேல கை வைக்கிற.. அஜித்துக்காக ஹீரோவின் சட்டையை பிடித்த சிம்பு
சென்னை: நடிகர் சிம்பு தற்போது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48ஆவது படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இதனை கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது. இரண்டாவது இன்னிங்ஸில் சிம்பு தரமான கம்பேக் கொடுத்திருப்பதால் இந்தப் படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்தச் சூழலில் அஜித்துக்காக ஹீரோ சட்டையை சிம்பு பிடித்த விஷயம் தெரியவந்திருக்கிறது. அதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
எஸ்டிஆர் என ரசிகர்களால் அழைக்கப்படும் சிம்பு சில காரணங்களால் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார். பிறகு உடல் எடையை குறைத்து எண்ணங்களை ஒருநிலைப்படுத்தி ஈஸ்வரன் படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். ஆனால் படம் சரியாக போகவில்லை. அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்தார். அந்தப் படம் மெகா ப்ளாக்பஸ்டர் ஆனது. சிம்புவின் நடிப்பும், வெங்கட் பிரபுவின் மேக்கிங்கும் ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்துப்போக படமானது நூறு கோடி ரூபாய் வசூலித்து கெத்து காட்டியது.

அடுத்தடுத்த ஹிட்: மாநாடு வெற்றிக்கு பிறகு சிம்பு வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய படங்களில் நடித்தார். இவற்றில் வெந்து தணிந்தது காடு படம் சூப்பர் ஹிட்டானது. அதில் சிம்புவின் நடிப்பு பெரிதளவு பேசப்பட்டது. அடுத்து நடித்த பத்து தல திரைப்படம் சரியாக போகவில்லை. சூழல் இப்படி இருக்க கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48ஆவது படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் சிலம்பரசன்.
எஸ்டிஆர் 48: இந்தப் படத்தை கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. தேசிங்கு பெரியசாமி இயக்கம் என்பதால் கண்டிப்பாக இந்தப் படம் ஹிட்டாகும் என்ற நம்பிக்கை எஸ்டிஆர் ரசிகர்களிடம் இருக்கிறது. இப்படத்துக்காக சிம்பு செம ஃபிட்னெஸ்ஸோடு இருக்கிறார். அதுமட்டுமின்றி மார்ஷியல் ஆர்ட்ஸ் உள்ளிட்ட கலைகளையும் அவர் கற்றுக்கொண்டதாக தெரிகிறது. இதற்காக அவர் தாய்லாந்து, லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
தக் லைஃப்: இதற்கிடையே கமல் ஹாசன் நடிக்கும் தக் லைஃப் படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் சிம்பு. ஷூட்டிங் ஸ்பாட்டில் கமல் ஹாசனுடன் இருக்கும் புகைப்படம் சமீபத்தில் வெளியாகி ட்ரெண்டானது. அதனைப் பார்த்த ரசிகர்கள் அட சிம்பு வேற லெவலில் இருக்கிறாரே என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர். இருந்தாலும் எஸ்டிஆர் 48 படத்தின் அப்டேட் குறித்துதான் அவரது ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருக்கின்றனர்.
அஜித் ரசிகர்: சிம்பு அஜித்தின் வெறித்தனமான ரசிகர் என்பது அனைவருக்கும் தெரியும். தன்னுடைய மன்மதன், சிலம்பாட்டம் உள்ளிட்ட படங்களில் அஜித் ரெஃபரென்ஸை அவர் வைத்திருந்தது வரவேற்பையும் பெற்றது. தான் அஜித்தின் ரசிகர் என்று பல இடங்களில் ஓபனாகவே பேசியிருக்கிறார். இந்நிலையில் அஜித்துக்காக சக நடிகரின் சட்டையை சிம்பு பிடித்த விஷயம் பேசுபொருளாகியுள்ளது.
அதாவது மங்காத்தா படத்தில் அஜித்தை வைபவ் அடிப்பது போல் ஒரு காட்சி இருக்கும். அதற்கு அஜித்தின் ரசிகர்கள் பெரும் எதிர்வினையாற்றினார்கள். மங்காத்தா படத்தை சிம்புவுடன் வைபவ் பார்த்தாராம். அப்போது அஜித்தை வைபவ் அடிக்கும் காட்சி வந்தவுடன், அருகில் இருக்கும் வைபவ் சட்டையை பிடித்து ஏய் யார் மேல கை வைக்கிற என்று கோபப்பட்டாராம். இதனை சில வருடங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் வைபவ் பேசியிருந்தார். அது இப்போது மீண்டும் ட்ரெண்டாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











