என்னது ரஜினிகாந்த் தற்கொலைக்கு முயன்றாரா?.. இது என்னங்க புது கதையா இருக்கு.. என்ன நடந்தது?

சென்னை: ரஜினிகாந்த் இப்போது வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். அந்தப் படமானது அக்டோபர் மாதம் வெளியாகவிருக்கும் சூழலில் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்கிறார். இதன் டைட்டில் டீசர் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி சக்கைப்போடு போட்டு வரவேற்பை பெற்றது. கண்டிப்பாக இந்தப் படம் ரஜினியின் கரியரில் மெகா ப்ளாக் பஸ்டராக அமையும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். சூழல் இப்படி இருக்க ரஜினிகாந்த் தற்கொலைக்கு முயன்றதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் தீயாக பரவிவருகிறது.

ரஜினிகாந்த் என்ற பெயரை தவிர்த்துவிட்டு தமிழ் சினிமாவின் வரலாற்றை எழுத முடியாது. தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்திய அளவில் அவருக்கு ஏராளமானோர் ரசிகர்களாக இருக்கிறார்கள். முக்கியமாக சாதாரணமானவர்கள் மட்டுமின்றி செலிபிரிட்டிகளும் ரஜினிகாந்த்தின் ரசிகர்கள்தான். ஏனெனில் தனது தனித்துவமான ஸ்டைல், பாடி லாங்குவேஜ், நடிப்பு என ஒவ்வொன்றிலும் ரஜினிகாந்த் அதகளம் செய்பவர். சினிமா துறைக்கு வருபவர்கள் எப்போதும் ரஜினிகாந்த்தை ரோல் மாடலாக எடுத்துக்கொண்டதுண்டு.

There are reports that Super Star Rajinikanth tried to commit suicide


வேட்டையன்: அவரது நடிப்பில் கடைசியாக லால் சலாம் (கெஸ்ட் ரோலில் நடித்தார்) படம் வெளியானது. அதற்கு முன்னதாக ஜெயிலர் திரைப்படம் வெளியானது. ஜெயிலர் ரிலீஸ்வரை ரஜினிகாந்த்தின் சூப்பர் ஸ்டார் நாற்காலில் ஆடிக்கொண்டிருப்பதாகவும் விரைவில் அந்த சிம்மாசனத்திலிருந்து ரஜினி இறக்கப்படுவார் என்றும் பலர் பேசினார்கள். ஆனால் ஜெயிலர் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி எப்போது ரஜினிதான் சூப்பர் ஸ்டார் என்று அவரது ரசிகர்களை பேச வைத்தது. ஆனால் அடுத்து நடித்த லால் சலாம் சறுக்கிவிட்டது. இப்போது வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார் அவர்.

கூலி: அந்தப் படம் அக்டோபர் மாதம் திரைக்கு வரவிருக்கிறது. ஜெய் பீம் படத்தின் இயக்குநர் இயக்குவதால் இப்படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்கிறார். படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது. கமல் ஹாசனுக்கு எப்படி லோகேஷ் பிரமாண்ட ஹிட்டை கொடுத்தாரோ அதேபோல் கூலியும் அமைய வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

வறுமையில் ரஜினிகாந்த்: இதற்கிடையே ரஜினிகாந்த் இப்போது பக்குவப்பட்ட மனிதராகவும், உச்சபட்ச பணக்காரராகவும் இருக்கிறார். ஆனால் அவரது ஆரம்ப காலம் வறுமையின் பிடியில் சிக்கியிருந்தது. கூலி வேலை, நடத்துநர் என்று ஏகப்பட்ட பணிகளை செய்திருக்கிறார் அவர். பிறகு சினிமாவுக்கு வந்து சூப்பர் ஸ்டார் ஆனார். உயர்ந்த இடத்துக்கு சென்றாலும் தனது வறுமையை அவர் மறக்காததால்தான் அவர் எல்லோரிடமும் சகஜமாகவும், எளிமையாகவும் பழகுகிறார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்வதுண்டு.

தற்கொலை முயற்சி: இந்நிலையில் ரஜினிகாந்த் குறித்து புதிய தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் தீயாக பரவிவருகிறது. அதாவது, ரஜினிகாந்த் வறுமையில் இருந்தபோது ஆஃபிஸ் பாய், கூலி வேலை பார்த்திருக்கிறார். அப்போது வாழ்க்கையின் மீது பிடிப்பு இல்லாமல் தற்கொலை செய்துகொள்ளலாம் என்று முடிவு செய்தாராம். ஆனால் சுவரில் வரையப்பட்டிருந்த ஒரு கடவுளின் முகம் அவரது எண்ணத்தை மாற்றியதாம். பிறகு அன்றைய இரவு தூங்க சென்றிருக்கிறார்.

கனவில் வந்த கடவுள்: அப்போது கனவில் முகப்பொலிவுடன் ஒருவர் அவரை நோக்கி வந்தாராம். பிறகு ஆற்றின் மீது அவர் நடந்து வந்தது போலவும்; அவரை நோக்கி ரஜினிகாந்த் ஓடியதுபோலவும் கனவில் காட்சிகள் வந்திருக்கின்றன. மறுநாள் அனைவரிடமும் இதுகுறித்து ரஜினி சொல்ல; சுவரில் வரையப்பட்டிருந்தது ராகவேந்திரர் ஓவியம் என்று கூறியிருக்கிறார். அதனையடுத்து நேராக ராகவேந்திரர் கோயிலுக்கு சென்று வேண்டியிருக்கிறார் ரஜினி. அதன் பின் அவருக்கு நடத்துநர் வேலை கிடைத்ததாம்; தொடர்ந்து நடிகராகவும் மாறினாராம். அந்த சம்பவம்தான் ராகவேந்திரரின் தீவிர பக்தராக ரஜினிகாந்த்தை மாற்றியதாம். இந்தத் தகவல்தான் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X