மூன்று வேளை சோத்துக்கு பாடு.. புலம்பிய விஜய்.. அட இப்படியும் ஃபீல் செஞ்சிருக்காரா?

சென்னை: கோலிவுட்டின் மிகப்பெரிய ஹீரோக்களில் ஒருவரான விஜய்; இப்போது அரசியலில் முழு கவனத்தையும் செலுத்திவருகிறார். இதன் காரணமாக ஜனநாயகன் படம்தான் அவரது கடைசி படம் என்று சொல்லப்பட்டது. ஆனால் இன்றுவரை அந்தப் படம் ரிலீஸாகவில்லை. இது ஒருபக்கம் இருக்க அவரது பெர்சனல் வாழ்க்கையிலும் தொடர்ந்து பிரச்னைகள் வந்துகொண்டே இருக்கின்றன. அதற்கு அவரே சலங்கை கட்டிவிடும்படி நடந்துகொள்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

கோலிவுட்டில் அதிக வியாபாரம் நடக்கும் ஹீரோக்களில் ஒருவர் விஜய். அவரது படங்கள் விமர்சன ரீதியாக அடி வாங்கினாலும் வசூல் ரீதியாக சக்கைப்போடு போடும் என அந்தப் படங்களை தயாரித்த தயாரிப்பாளர்கள் சொல்வதுண்டு. சில சமயங்களில் 200 கோடி ரூபாய் போஸ்டர் எல்லாம் விடுவார்கள். இதன் காரணமாக அவர் கரியரின் உச்சத்தில் இருக்கிறார் என்று அவரது ரசிகர்கள் நம்ப தொடங்கினார்கள். அதனையே அவர் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு தங்களது முழக்கங்களாகவும் மாற்றிக்கொண்டார்கள்.

Three Meals Need So Much Hard Work Vijay Told Me Reveals Yogi Babu
Photo Credit:

ஜனநாயகன் பட பிரச்னை: ஜனநாயகன் படத்தோடு விலகுவதாக அறிவித்திருந்தார். எனவே அப்படத்தை மிகப்பெரிய ஹிட்டாக்கிவிட காத்திருந்தார்கள் ரசிகர்கள். ஆனால் அவர்களது கெட்ட நேரமோ என்னமோ படம் சென்சார் அதிகாரிகளால் முடக்கப்பட்டது. நீதிமன்றம்வரை தயாரிப்பு நிறுவனம் சென்றுவிட்டது. எதுவும் சாதகமாக அமையவில்லை. சில மாதங்களுக்கு முன்பு திரைத்துறையின் ஹெட்லைன்ஸாக ஜனநாயகன் இருந்தது. இப்போது ஒரு பெட்டிக்குள் அடங்கி கிடக்கிறது.

சங்கீதா கொடுத்த பிரச்னை: ஜனநாயகன் பிரச்னைக்கு பின்னணியில் திமுகதான் இருக்கிறது என கூறினார்கள் தவெகவினர். அடுத்தக்கட்டமாக அவரது மனைவி சங்கீதா அடுக்கடுக்காக குற்றச்சாட்டுக்களை வைத்து விவாகரத்து கேட்டிருந்தார். அதற்கு சைலெண்ட்டாக இருந்த விஜய்; திரிஷாவுடன் ஒரு திருமணத்துக்கு ஜோடியாக வந்து மீண்டும் விவாதத்தை கிளப்பிவிட்டார். இதனையடுத்து நீலாங்கரை வீட்டுக்குள் தன்னை விஜய் அனுமதிக்க மறுக்கிறார். அவர் அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என இரண்டாவது மனுவையும் தாக்கல் செய்திருக்கிறார்.

Also Read
திரிஷாவுக்கு எதை பற்றியும் கவலை இல்லை.. ஜாலியாக இருக்காங்க.. இன்ஸ்டாகிராமில் சொல்லியிருப்பதை பாருங்க
திரிஷாவுக்கு எதை பற்றியும் கவலை இல்லை.. ஜாலியாக இருக்காங்க.. இன்ஸ்டாகிராமில் சொல்லியிருப்பதை பாருங்க

ஜீவனாம்சமும் கேட்கும் சங்கீதா: அதேபோல் விஜய் கோடி கோடியாக சம்பாதிக்கிறார். எனவே வாழ்நாள் முழுவதும் தனக்கு ஜீவனாம்சம் வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் சங்கீதா கேட்கும் தொகையை கொடுக்க விஜய் தரப்பு முன்வரவில்லை என்றும்; ரொம்பவே கம்மியாக கொடுப்போம் அல்லது கொடுக்கவே மாட்டோம் என்ற நிலைப்பாட்டில் அவர்கள் இருப்பதால்தான்; இந்தப் பிரச்னை இவ்வளவு சீரியஸாக போய்க்கொண்டிருப்பதாகவும் ஒரு தகவல் ஓடுகிறது.

யோகிபாபு பேட்டி: ஆனால்; இந்த விஷயத்தில் விஜய்யின் இமேஜ் கொஞ்சம் டேமேஜ் ஆகிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். இந்நிலையில் விஜய் குறித்து யோகிபாபு பேசிய விஷயம் ஒன்று கவனத்தை ஈர்த்திருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு தனியார் யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில், "நானும், விஜய் அண்ணாவும் சர்கார் படத்தில் சேர்ந்து நடித்தோம். அப்போத் ஒரு பாடலில் ஒரே ஷாட்டில் ஆட வேண்டும் என ஷோபி மாஸ்டர் சொன்னார்.விஜய்யும் ஆடிவிட்டார். அது முடிந்த பிறகு எனது தோளை பிடித்து, 'என் கால் முட்டியை பாரு டா' என்று சொன்னார். நானும் தொட்டு பார்த்தேன், கடகடவென்று ஆடியது. உடனே அவர், '3 வேளை சோத்துக்கு எவ்வளவு பாடு பட வேண்டியது இருக்கு டா' என கேஷுவலாக கூறினார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X