அந்தாளு நம்பர் 1 ஃப்ராடு.. மேனேஜர் ஜெகதீஷ் பற்றி விஜய்யிடம் எச்சரித்த ஜிவி பிரகாஷ்.. என்ன ஆனது?

சென்னை: நடிகராக மட்டுமின்றி ஒரு அரசியல் கட்சிக்கு தலைவராகவும் மாறியிருக்கிறார் விஜய். அடுத்த மாதம் நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்தும் களம் காண்கிறார். சூழல் இப்படி இருக்க விஜய்யுடன் கடந்த சில வருடங்களாக நிழலாக இயங்கிவரும் மேனேஜர் ஜெகதீஷ் பழனிசாமி குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை கூறுகிறார்கள். அவருக்கு தேவையான அத்தனையையும் ஜெகதீஷ்தான் செய்கிறார் என்றும்; சங்கீதா பிரச்னை இவ்வளவு தூரம் வருவதற்கும் அவரே காரணம் என்றும் பேச்சுக்கள் எழுந்துள்ளன.

நடிகராக ஜொலித்துவரும் விஜய்; தனது ஆசைப்படியும், ரசிகர்களின் ஆசைப்படியும் அரசியல் கட்சியை ஆரம்பித்திருக்கிறார். தமிழக வெற்றிக் கழகம் என்றும் பெயர் வைக்கப்பட்டு; அடுத்த வருடம் நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலையும் தனித்து எதிர்கொள்கிறது. இந்தத் தேர்தலில் விஜய்க்கு ஓரளவு வாக்குகள் விழும் நிலைதான் இருக்கிறது. ஆனால் மனைவி சங்கீதா தொடுத்திருக்கும் விவாகரத்து மனு, கரூர் துயர சம்பவம், திரிஷாவுடன் ஹாயாக வந்தது உள்ளிட்ட விஷயங்கள் எல்லாம் வாக்குகள் விழும் நிலையை கடினமாக்கியிருப்பதாக கருதப்படுகிறது.

Throwback Buzz Did GV Prakash Kumar Warn Vijay About Manager Jagadish Palanisamy
Photo Credit:

மோசமான சங்கீதா பிரச்னை: அதிலும் மனைவி சங்கீதா பிரச்னை மோசமான நிலைமையை எட்டியிருக்கிறது. ஒரு மனுவோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் இரண்டாவதாகவும் ஒரு மனுவை தாக்கல் செய்து குண்டை போட்டார். ஈகோ எதுவும் பார்க்காமல் சங்கீதா வைக்கும் டிமாண்டை ஏற்றுக்கொண்டு அவருடன் விஜய் சேர்ந்து வாழ வேண்டும் என அவர் மீது உண்மையான அக்கறை இருப்பவர்கள் எல்லாம் அறிவுரை கூறுகிறார்கள். ஆனால் விஜய்யோ அதையெல்லாம் தனது காதிலேயே போட்டுக்கொள்ளாத மாதிரிதான் இருக்கிறார். மேலும் சங்கீதாவை பிரிவதில் உறுதியாகவும் அவர் இருப்பதாகவே தெரிகிறது.

ஜெகதீஷ் பழனிசாமி: விஜய் இப்படி ஆனதற்கு அவருடன் இப்போது இருப்பவர்கள்தான் என்ற விமர்சனமும் பலமாக எழுந்திருக்கிறது. அதாவது அரசியல் தளத்தில் புஸ்ஸி ஆனந்த்தும், ஆதவ் அர்ஜுனாவும் விஜய்யை தவறாக வழிநடத்துகிறார்கள். பெர்சனல் வாழ்க்கையை பொறுத்தவரை ஜெகதீஷ் பழனிசாமி அனைத்தையும் செய்கிறார். விஜய்யின் நிழல் போலவே இருக்கும் அவர்; தேவையில்லாத விஷயங்களை எல்லாம் விஜய்யின் தலைக்குள் போட்டு உருட்டிவருவதாகவும் பலர் கூறுகிறார்கள்.

Also Read
TVK பெண்களை அவதூறாக பேசிய பொன்ராஜ்.. DGP அலுவலகத்தில் புகாரளித்த விஜய்!
TVK பெண்களை அவதூறாக பேசிய பொன்ராஜ்.. DGP அலுவலகத்தில் புகாரளித்த விஜய்!

பி.டி.செல்வக்குமார் பேட்டி: இந்நிலையில் இப்போதைக்கு ஜெகதீஷ் இருக்கும் இடத்தில் பல வருடங்கள் இருந்தவரான விஜய்யின் முன்னாள் மேனேஜர் பி.டி.செல்வக்குமார் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் ஜெகதீஷ் பற்றி பேசிய அவர், "கத்தி படத்தின்போதுதான் ஜெகதீஷ் பழனிசாமி உள்ளே வந்தார். இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்தான் அவரை கொண்டு வந்து வேலைக்கு சேர்த்துவிட்டார். முதலில் சின்ன சின்ன வேலைகளை செய்துகொண்டிருந்தார். பிறகு எப்படியோ விஜய்யை கவர்ந்துவிட்டார்.

எச்சரித்த ஜிவி பிரகாஷ்: அவர் வேலைக்கு வந்தபோதே இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் என்னை அழைத்தார். அப்போது, 'தலைவரிடம் (விஜய்) சொல்லுங்கள் அண்ணா. ஜெகதீஷ் ஒன்னாம் நம்பர் ஃப்ராடு பய. பார்த்து ஜாக்கிரதையாக இருக்க சொல்லுங்கள்' என சொன்னார்" என்றார். முன்னதாக, ஜெகதீஷ் பழனிசாமி தனி அணி ஒன்றை வைத்துக்கொண்டு குறிப்பிட்ட சிலரை டார்கெட் செய்து இணையத்தில் தாக்குதல் நடத்துவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார் என்றும்; அதில் பிரியங்கா மோகனும் சிக்கியிருந்தார் என்றும் ஒரு தகவல் ஓடுவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X