ஷங்கரும் வெற்றி மாறனும் இணைந்து நடித்த படம்.. இது எத்தனை பேருக்குத் தெரியும்? இது லிஸ்ட்லயே இல்லையே!

சென்னை: தமிழ் சினிமாவில் நட்புக்காக பல நடிகர்களும் தயாரிப்பாளர்களும் நடிகைகளும் இயக்குநர்களும் பல விஷயங்களை செய்து கொடுத்துள்ளார்கள். இதில், பெரும்பாலும் நடிப்பு, பலர் படங்களை வெளியிடுவதற்கு உதவியுள்ளார்கள், பலர் படத்தின் கதை, திரைக்கதைக்கு உதவியுள்ளார்கள். அப்படி பல சம்பவங்கள் நடைபெற்று உள்ளது. அப்படி இருக்கும்போது, தற்போது தமிழ் சினிமாவில் மாபெரும் இயக்குநர்களாக வளர்ந்து நிற்கிற வெற்றி மாறன் மற்றும் ஷங்கர் ஆகியோர் இணைந்து ஒரு படத்தில் நடித்துள்ளார்கள் என்றால் நம்ப முடிகிறதா? இது குறித்து பார்க்கலாம்.

பிரமாண்ட இயக்குநர் என அழைக்கப்படுபவர் இயக்குநர் ஷங்கர். இவர் இயக்குநரும் விஜய்யின் அப்பாவுமான எஸ்.ஏ. சந்திரசேகரிடம் பல ஆண்டுகளாக உதவியாளராக இருந்தவர். 'என்னிடம் உதவியாளராக இருந்தது போதும், நீ தனியாக போய் படம் பண்ணு, உங்கிட்ட அதற்கான அத்தனை தகுதியும் உள்ளது' என எஸ்.ஏ. சந்திரசேகர் கூறியதற்கு, ' பரவாயில்லை சார், சினிமா குறித்து நான் இன்னும் கொஞ்சம் தெரிந்து கொண்ட பின்னர் போகிறேன்,சார்' என ஷங்கர் பதில் அளித்ததாக எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ஷங்கருக்கு அந்த அளவிற்கு சினிமா மீது வெறி இப்போதும் உள்ளது. இவரது பிரமாண்டமான படங்கள் தமிழ் சினிமாவிற்கு மட்டும் இல்லாமல், தென்னிந்திய சினிமாவிற்கு பெருமை தேடிக் கொடுத்துள்ளது. இப்படி இருக்கும் போது, இவர் பல படங்களில் நடித்துள்ளார் என்றால் நம்ப முடிகிறதா? ஆமாம், ஷங்கர் உதவி இயக்குநராக இருந்தபோது, வசந்த ராகம் படத்தில் பிரிண்டிங் பிரஸ்ஸில் வேலை பார்ப்பவராக நடித்துள்ளார். அதேபோல், பூவும் புயலும் படத்தில் மாணவராக நடித்துள்ளார். சீதா படத்தில் ஒரு காட்சியில் நடித்துள்ளார்.

Take a Poll

ஷங்கர்: அதேபோல் கடந்த 2002ஆம் ஆண்டு இறுதியில் அதாவது டிசம்பர் 27 ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் காதல் வைரஸ். இயக்குநர் கதிர் இயக்கத்தில் வெளியான இந்த படம், திரைப்படம் மற்றும் நிஜ வாழ்க்கை கதையை கதைக்களமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம். இந்த படத்தில் தான் நடிகர் விஜயகுமார் மகள் ஸ்ரீதேவி விஜயகுமார் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தில் மறைந்த இயக்குநர் இமயம் கே. பாலசந்தர் இயக்குநராக நடித்துள்ளார். அதேபோல், இயக்குநர் ஷங்கரும் இந்த படத்தில் இயக்குநராக நடித்துள்ளார்.

Throwback Directores Shankar And Vetri Maaran Acts In Same Movie Fans Getting Surprise

வெற்றிமாறன்: அதேபோல் இந்த படத்தின் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை உதவி இயக்குநர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இயக்குநர் வெற்றிமாறன். இயக்குநர் வெற்றிமாறன் தற்போது தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒன்றாக உள்ளார். இது மட்டும் இல்லாமல், தயாரிப்பாளராகவும் பல தைரியமான கதைகளை தயாரித்து ரிலீஸ் செய்தும் வருகிறார். மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் பட்டறையில் இருந்து வந்தவர் என்பதை தனது ஒவ்வொரு சினிமாவிலும் நிரூபித்து வருபவராக உள்ளார்.

காதல் வைரஸ்: இப்படியான நிலையில் அவர் காதல் வைரஸ் படத்தில் நடித்துள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. இந்த படத்தில் ஷங்கர், கே. பாலசந்தர் என மூத்த இயக்குநர்களும் நடித்துள்ளார்கள். இந்த தகவலைத் தெரிந்து கொண்ட பலரும் இது தொடர்பாக இணையத்தில் வேகமாக பகிர்ந்து வருகிறார்கள். வெற்றிமாறன் கடந்த ஆண்டு கவின் நடிப்பில் வெளியான ஸ்டார் படத்தில் இயக்குநராக நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது இயக்கத்தில் அடுத்து, வாடி வாசல் படம் உருவாகவுள்ளது.

Throwback Directores Shankar And Vetri Maaran Acts In Same Movie Fans Getting Surprise

கே. பாக்யராஜ்: அதேபோல் பல படங்களில், தற்போது தமிழ் சினிமாவில் ஜாம்பவான்களாக உள்ள பலர், அவர்கள் உதவி இயக்குநராக பணியாற்றிய காலத்தில் நடித்துள்ளார்கள். அவை குறித்தும் பார்க்கலாம். 1978 ல் வந்த பாரதிராஜா இயக்கிய படம், அப்போ அசிஸ்டன்ட் இயக்குநர் கே. பாக்யராஜ் தான். அசிஸ்டன்ட் இயக்குநர் ஒரு சில காட்சிகளில் வருவதுண்டு அது போலவே இந்த படத்திலும் கே. பாக்யராஜ். ஒரு சின்ன ரோல்ல சர்வரா வருவார்.

பார்த்திபன்: கே. பாக்யராஜ் இயக்கத்தில் 1984 இல் வந்த தாவணிக்கணவுகள் படத்தில் அசிஸ்டன்ட் இயக்குநர் தான் பார்த்திபன், அதே படத்தில் ஒரு போஸ்ட்மேன் கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடித்திருப்பார். ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர் PC ஶ்ரீராம்மின் அசிஸ்டன்ட் தான் மறைந்த இயக்குநர் KV. ஆனந்த் . 1992ல் PC ஶ்ரீராம் இயக்கிய படம் தான் மீரா, இதில் ஒரு காட்சியில் மறைந்த இயக்குநர் KV ஆனந்த் நடித்திருப்பார்.

கௌதம் மேனன்: 2002 இல் ஜீவா அறிமுக படமான ஆசை ஆசையாய் இயக்கியவர் ரவி மரியா. இவர் 2000ம் ஆண்டு SJ சூர்யா இயக்கிய குஷியில் கோவில்ல விளக்கு அனையாம விஜய் ஜோதிகா வரும் காட்சிக்கு முன் வரும் காட்சியில் ரவிமரியா நடித்திருப்பார்.1997 இல் உதயிஷங்கர் இயக்கிய பூச்சூடவா படத்தில் மணிவண்ணன் அப்பாஸ் கூட ஒரு காட்சியில் முருகதாஸ் நடித்திருப்பார். 1997 இல் ராஜிவ் மேனன் இயக்கிய இந்த படத்தில் பிரபு தேவா தற்கொலைக்கு முயலும் ஒருவரை காப்பாற்றும் போது, அப்போ அரவிந்த் சாமி இருக்கும் கூட்டத்தில் கெளதம் மேனன்னும் இருப்பார்.எஸ்.ஜே. சூர்யா, இவர் 1993 இல் பாரதி ராஜா இயக்கிய கிழக்கு சீமையிலே படத்தில் சேவல் சண்ட காட்சியில் வருவார். 1989 இல் பாண்டியராஜன் இயக்கிய நெத்தியடி படத்தில் ஒரு காட்சியில் வருவார். 1995 இல் வசந்த் இயக்கிய ஆசை படத்தில் ஆட்டோ டிரைவராக ஒரு காட்சியில் வருவார்.

பா.ரஞ்சித் & மாரி செல்வராஜ்: பா.ரஞ்சித் வெங்கட் பிரபுவின் உதவி இயக்குநராக இருந்தவர் பா. ரஞ்சித். இவர் வெங்கட் பிரபுவிடம் சென்னை 28 படத்தில் மட்டுமே உதவி இயக்குநராக இருந்தார். இந்த படத்தில் கிரிக்கெட் ஆடும்போது நடுவர் போல நடித்திருப்பார். இயக்குநர் ராம் இயக்கிய கற்றது தமிழ் படத்தில், இயக்குநர் மாரி செல்வராஜ் மாணவராக ஒரு காட்சியில் நடித்திருப்பார். அட்லீ இயக்கிய மெர்சல் படத்தில் க்ளைமேக்ஸ் காட்சியில் செய்தியாளராக ஒரு காட்சியில் நடித்திருப்பார் டான் பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி . 2004 இல் மகாராஜன் இயக்கத்தில் வந்த படம் தான் அரசாட்சி, இதில் க்ளைமேக்ஸ் காட்சியில் பத்திரிகையாளராக ஒரு காட்சியில் நடித்திருப்பார் இயக்குநர் பேரரசு. தற்போது ஜாம்பவான்களாக உள்ளவர்கள் தங்களது ஆரம்ப காலத்தில் பல படங்களில் சின்ன சின்ன் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த தகவல் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X