எதற்குமே ஒத்துக்கொள்ளவில்லை.. கடுப்பான ஏ.ஆர்.ரஹ்மான் அப்பா.. அவர் செஞ்சது என்ன தெரியுமா?
சென்னை: ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் கடைசியாக காதலிக்க நேரமில்லை திரைப்படம் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது. அதேசமயம் அவரது இசை பெரிதும் கொண்டாடப்பட்டது. இழு இழு இழுக்குதடி பாடலுக்கு இளைஞர்கள் பலரும் வைப் செய்தார்கள். அடுத்ததாக அவரது இசையமைப்பில் தமிழில் தக் லைஃப் உள்ளிட்ட படங்கள் வரவிருக்கின்றன. கண்டிப்பாக இனி வரவிருக்கும் படங்களுக்கும் ரஹ்மானின் இசை பலம் சேர்க்கும் என்று அவரது ரசிகர்கள் நம்பிக்கையில் இருக்கிறார்கள்.
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இப்போது பிஸியான இசையமைப்பாளராக வலம் வந்துகொண்டிருக்கிறார். பல விருதுகளை வென்று சாதித்து காட்டிய அவர் இன்னமும் தான் பணியாற்றும் ஒவ்வொரு படத்தையும் முதல் படம் போல் நினைத்து பணியாற்றுகிறார். இதன் காரணமாகத்தான் அவரது இசை இன்றளவும் பலரையும் வசீகரிக்கிறது. அவரது இசையமைப்பில் கடைசியாக காதலிக்க நேரமில்லை திரைப்படம் வெளியானது. அதில் இடம்பெற்ற பாடல்களும் பின்னணி இசையும் ரசிகர்களை வெகுவாகவே ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தக் லைஃப் ரஹ்மான்: ஏ.ஆர். ரஹ்மானின் அடுத்தடுத்த லைன் அப்புகளில் பெரிதும் ஆவலை ஏற்படுத்தியிருக்கும் படம் என்றால் அது தக் லைஃப். அந்தப் படத்தை மணிரத்னம் இயக்க கமல் ஹாசன் ஹீரோவாக நடிக்கிறார். ஏற்கனவே மணிரத்னமும், ரஹ்மானும் இணைந்த ரோஜா, இருவர், பம்பாய், அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால், ராவணன், ஓகே கண்மணி, பொன்னியின் செல்வன் என ஏகப்பட்ட படங்களின் பாடல்கள் கல்ட் க்ளாசிக்காக இருப்பவை. இதன் காரணமாக தக் லைஃப் படத்தின் பாடல்களும் அந்த லிஸ்ட்டில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சர்ச்சையில் சிக்கிய ரஹ்மான்: திரைத்துறையில் மிஸ்டர் க்ளீன் இமேஜில் இருப்பவர்களில் ஏ.ஆர்.ரஹ்மான் முதன்மையான இடத்தில் இருப்பவர். அவர் உண்டு அவரது இசை உண்டு, குடும்பம் உண்டு என்று இருந்தவர். ஆனால் கடந்த வருடம் அவர் தனது மனைவி சாய்ரா பானுவை பிரிவதாக அறிவித்தார். அதற்கான காரணங்களாக பல விஷயங்கள் சொல்லப்பட்டன. அந்த யூகங்கள் பலவும் வதந்திதான் என்று பின்னர் உறுதியானது. அதனை சாய்ரா பானுவே உறுதிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னமும் கணவன், மனைவிதான்: இரண்டு பேரும் பிரிவதாக அறிவித்திருந்தாலும் சட்டப்பூர்வமாக விவாகரத்து இன்னும் பெறவில்லை. சமீபத்தில்கூட சாய்ரா பானு, 'தானும் ரஹ்மானும் கணவன் மனைவிதான். விவாகரத்து இன்னும் பெறவில்லை. அதன் காரணமாக யாரும் தன்னை ஏ.ஆர். ரஹ்மானின் முன்னாள் மனைவி என அழைக்க வேண்டாம்' என்று தெரிவித்திருந்தது கவனிக்கத்தக்கது. சாய்ராவின் அந்த விளக்கம் ரஹ்மானின் ரசிகர்களை உச்சக்கட்ட நிம்மதியில் ஆழ்த்தியது. அதுமட்டுமின்றி சாய்ராவுக்கு அண்மையில் அறுவை சிகிச்சை நடந்ததாகவும் அப்போது ரஹ்மான் உடனிருந்ததாகவும் பேச்சுக்கள் எழுந்தன.
ரஹ்மானின் தந்தை செய்த செயல்: இதற்கிடையே ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தையான சேகர் மலையாள படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றியவர். மொத்தம் 50 படங்களுக்கும் மேல் இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் அவர் செய்த செயல் ஒன்று தெரியவந்திருக்கிறது. அதாவது ஒரு மலையாள படத்துக்கு சேகர் இசையமைத்தாராம். அப்போது எந்த ட்யூனை கொடுத்தாலும் அந்தப் படத்தின் இயக்குநர் ஒத்துக்கொள்ளவே இல்லையாம். இதனால் கடுப்பான சேகர் தேசிய கீதமான ஜன கன மண பாடலின் ட்யூனை மெதுவாக வாசித்தாராம். அதனை கேட்ட அந்த இயக்குநரோ இது நல்லா இருக்கே என்று சொன்னாராம். மேலும் கடுப்பான சேகர் யோவ் இது தேசிய கீதம்யா என்று கூறினாராம். இந்த சம்பவத்தை ஒரு வீடியோவில் பகிர்ந்துகொண்ட ரஹ்மான் தனது தந்தைக்கு நிறைய சென்ஸ் ஆஃப் ஹியூமர் இருந்ததாக கூறியிருந்தார்.


Click it and Unblock the Notifications











