பாரதிராஜா போட்ட பிளான்.. எல்லோரும் தப்பிச்சாங்க.. இல்லைனா ஹீரோதான்.. கங்கை அமரன் கலகல
சென்னை: இளையராஜாவின் சகோதரரான கங்கை அமரன் இயக்குநர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பல திறமைகளை கொண்டிருப்பவர். இவரது இரண்டு மகன்களும் கோலிவுட்டில் ஃபேமஸான இயக்குநராகவும், நடிகராகவும் வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். இந்தச் சூழலில் கங்கை அமரனை ஹீரோவாக நடிக்க வைக்க பாரதிராஜா போட்டிருந்த பிளானை பார்க்கலாம்.
இசைஞானி இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன். ஆரம்பத்தில் தனது அண்ணன்களுடன் மேடைகளில் வாசித்துக்கொண்டிருந்த அவர்; இளையராஜா இசையமைப்பாளரானதும் பாடலசிரியராக மாறினார். அதற்கு முன்னதாக பஞ்சு அருணாச்சலத்திடம் உதவியாளராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏகப்பட்ட ஹிட் பாடல்களை இளையராஜாவின் இசையில் கங்கை அமரன் எழுதியிருக்கிறார்.
இயக்குநர் அவதாரம்: இப்படிப்பட்ட சூழலில் ராமராஜன், கனகாவை வைத்து கரகாட்டக்காரன் திரைப்படத்தை இயக்கினார் அவர். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு கொள்ளை லாபத்தை பார்த்த படம் அது. இன்றுவரை அந்தப் படத்தின் பாடல்கள், இசை என அத்தனையுமே பலரது ஃபேவரைட்டாக இருக்கிறது. படத்தின் இரண்டாம் பாகம் வந்தாலும் வரலாம் என அண்மையில் ஒரு தகவலும் வெளியானது.

இசையமைப்பாளர்: பாடலாசிரியர், இயக்குநர் மட்டுமின்றி இசையமைப்பாளராகவும் கோலோச்சியவர் கங்கை அமரன். மௌன கீதங்கள், வாழ்வே மாயம் உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு அவர் இசையமைத்திருக்கிறார். அவரது இரண்டு மகன்களும் திரைத்துறையில்தான் இருக்கிறார்கள். இந்நிலையில் அவரை ஹீரோவாக நடிக்க வைக்க பாரதிராஜா போட்ட பிளான் பற்றி தெரியவந்திருக்கிறது.
என்ன நடந்தது?: அதாவது புதிய வார்ப்புகள் படத்தை பாரதிராஜா ஆரம்பிக்கும்போது அதில் கங்கை அமரனை ஹீரோவாக நடிகக் வைக்க திட்டமிட்டிருந்தாராம். அதற்கான வேலைகளிலும் அவர் இறங்கிவிட்டாராம். ஷூட்டிங் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பாக பாக்யராஜை பார்த்த பாரதிராஜா; கங்கையைவிடவும் பாக்யராஜ் செட் ஆவார் என்று முடிவெடுத்து அவரை ஹீரோவாக நடிக்க வைத்துவிட்டாராம்.
கங்கை சொன்னது: அதுகுறித்து கங்கை அமரனுக்கு எந்த வருத்தமும் இல்லை. ஏனெனில் அவருக்கே ஹீரோவாக நடிக்க பெரிதாக இஷ்டமில்லை என்றே தெரிகிறது. இதுகுறித்து பத்திரிகையாளரும், நடிகருமான கயல் தேவராஜ் கங்கை அமரனிடம் பேசியபோது, 'நல்லவேளை நான் ஹீரோவாக நடிக்கவில்லை. அப்படி நடித்திருந்தால் மக்கள் நிலைமையை நினைத்து பாருங்கள். தப்பித்துவிட்டார்கள்' என ஜாலியாக கூறினாராம். இதனை கயல் தேவராஜ் பகிர்ந்துகொண்டார்.


Click it and Unblock the Notifications











