அஜித் ரசிகர் மன்றத்தை கலைத்ததற்கு இதுதான் காரணமா?.. செம ரகளையாம்.. வெளியான சீக்ரெட்

சென்னை: அஜித் நடிப்பில் பிப்ரவரி ஆறாம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியாகவிருக்கிறது. மகிழ் திருமேனி இயக்கியிருக்கும் அந்தப் படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. இந்தப் படத்துக்கு பிறகு ஏப்ரல் பத்தாம் தேதி குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகவிருக்கிறது. இப்படி வரிசையாக இரண்டு படங்கள் இந்த வருடம் வெளியாகவிருப்பதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இது ஒருபக்கம் இருக்க அவருக்கு பத்ம பூஷன் விருதினையும் ஒன்றிய அரசு வழங்கியிருக்கிறது.

சினிமா பின்னணியுள்ள குடும்பத்திலிருந்து வந்து ஹீரோவானவர்களே காணாமல் போயிருக்கிறார்கள். ஆனால் அஜித்துக்கோ அப்படி எதுவும் இல்லை. சொல்லப்போனால் சினிமாவில் சரியான வழிகாட்டலும் இல்லை. இருந்தாலும் அஜித் தானாகவே விழுந்து, எழுந்து, கற்றுக்கொண்டு தனக்கான தனியிடத்தை பிடித்திருக்கிறார். இதுவரை 64 படங்களில் நடித்திருக்கும் அவருக்கென்று பலர் ரசிகர்களாக இருக்கிறார்கள். எந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளாவிட்டாலும், ரசிகர் மன்றங்களை கலைத்தாலும் அவரை திரையில் காண்பதற்கு தவம் இருக்கிறார்கள்.

throwback stories ajith vidaamuyarchi

விடாமுயற்சி: அவரது நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியாகி சக்கைப்போடு போட்டது. தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்த மாதம் படம் வெளியாகிறது. அந்தப் படத்துக்கு பிறகு குட் பேட் அக்லி படம் ஏப்ரல் மாதம் ரிலீஸாகிறது. இப்படி ஒரே வருடத்தில் அஜித்தின் இரண்டு படங்களும் ரிலீஸாவது பல வருடங்களுக்கு பிறகு இப்போதுதான் என்பது அவரது ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கார் ரேஸ்: ஒருபக்கம் நடிப்பில் பிஸியாக இருந்தாலும் மறுபக்கம் தனக்கு பிடித்த விஷயங்களை செய்வதிலும் அவர் தவறுவதில்லை. அந்தவகையில் தனக்கு ரொம்ப பிடித்த கார் ரேஸில் கவனம் செலுத்திவருகிறார் அவர். சமீபத்தில்கூட துபாயில் நடந்த ஒரு கார் ரேஸ் பந்தயத்தில் தனது டீமுடன் களமிறங்கி பரிசினை வென்று அசத்தினார். தொடர்ந்து கார் ரேஸில் கவனம் செலுத்தவிருப்பதாகவும்; ரேஸ் நடக்கும் சீசன்களில் படங்களில் நடிக்க மாட்டேன் என்றும் கட் அண்ட் ரைட்டாக சொல்லிவிட்டார்.

பத்ம பூஷன்: சூழல் இப்படி இருக்க அவருக்கு ஒன்றிய பத்ம பூஷன் விருது வழங்கி கௌரவித்திருக்கிறது. சமீபத்தில்தான் அதற்கான அறிவிப்பு வெளியானது. ஏகேவுக்கு பத்ம பூஷன் விருது கிடைத்திருப்பதை அவரது ரசிகர்கள் கொண்டாடிவருகிறார்கள். அஜித்தும் நெகிழ்ச்சியுடன் பலருக்கு நன்றி தெரிவித்து ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். சூழல் இப்படி இருக்க அவர் தனது ரசிகர் மன்றங்களை ஏன் கலைத்தார் என்பது குறித்த விஷயம் தெரியவந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது.

என்ன நடந்தது?: அதாவது ஒருமுறை கேம்ப்பா கோலா திடலில் அஜித்தின் ஒரு ஷூட்டிங் இரவு 12 மணிக்கு நடந்துகொண்டிருந்ததாம். அப்போது அவரது ரசிகர்கள் அங்கு வந்து அஜித்தை பார்க்க வேண்டும் என்று சொன்னார்களாம். ஆனால் அங்கிருந்தவர்கள் அதற்கு அனுமதி தர மறுத்துவிட்டார்களாம். இதனால் கோபமடைந்த அவர்கள் அத்துமீறி உள்ளே நுழைந்துவிட்டார்களாம். அப்படி உள்ளே நுழைந்தபோது அங்கிருந்த லைட்டுகள் எல்லாம் சேதமடைந்து ஷூட்டிங்கும் கேன்சல் ஆகிவிட்டதாம். இதனால் கோபமான அஜித்தோ அடுத்த நாளே ரசிகர் மன்றத்தை கலைக்கிறேன் என்று சொல்லிவிட்டாராம். இதனை பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியா ஒரு பேட்டியில் கூறினார். அதுமட்டுமின்றி அஜித்தின் மன்ற பெயரை பயன்படுத்தி அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டது ஒரு காரணம் என்றும் சொல்வார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X