இப்படி செய்யுங்கள் சூர்யா.. அப்போதான் நல்லா இருக்கும்.. அட்வைஸ் சொன்ன ரசிகர்
சென்னை: சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான கங்குவா திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. தற்போது கார்த்திக் சுப்புராஜின் ரெட்ரோ படத்தில் நடித்து முடித்திருக்கும் அவர்; ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்துவருகிறார். இதனைத் தொடர்ந்து வெற்றிமாறனின் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவிருக்கிறது. இந்நிலையில் சூர்யாவுக்கு ரசிகர் ஒருவர் சொன்ன அட்வைஸ் குறித்து தெரியவந்திருக்கிறது.
வசந்த் இயக்கிய நேருக்கு நேர் படத்தில் அறிமுகமான சூர்யாவுக்கு அவரது கரியரின் ஆரம்ப காலம் அவ்வளவு சரியாக இல்லை. நடனம் ஆட தெரியவில்லை, ஆக்ஷன் வரவில்லை என ஏகப்பட்ட விமர்சனங்களை சந்தித்தார். அப்படிப்பட்ட சூழலில்தான் பாலா இயக்கத்தில் நந்தா படத்தில் நடித்தார் சூர்யா. அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. முக்கியமாக சூர்யாவுக்கு நடிக்க தெரியும்; அவரால் ஆக்ஷன் ஹீரோவாகவும் மிளிர முடியும் என்பதை ரசிகர்களுக்கும், கோலிவுட்டுக்கும் உணர்த்தியது.

முன்னணி ஹீரோ: அந்தப் படத்துக்கு பிறகு அவர் நடித்த காக்க காக்க உள்ளிட்ட படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. ஒருபக்கம் கமர்ஷியல் பாதையிலும் மறுபக்கம் நடிப்புக்கு தீனி போடும் கதைகளிலும் நடித்தார். இதன் காரணமாக டாப் 5 இடங்களுக்குள் வந்தார். அதுமட்டுமின்றி நன்றாக நடிக்க தெரியாது என்று சொன்னவர்கள் வாயாலேயே; கோலிவுட்டின் நல்ல நடிகர்களில் சூர்யாவும் ஒருவர் என்று பேச வைத்தார். ஆனால் அவருக்கு கடந்த சில வருடங்களாக ஹிட் படங்கள் எதுவும் அமையவில்லை.
கங்குவா சூர்யா: அவரது நடிப்பில் கடைசியாக வெளியான கங்குவா, எதற்கும் துணிந்தவன் ஆகிய இரண்டு படங்களுமே தோல்வியடைந்தன. அதிலும் கங்குவா பற்றி சொல்லவே வேண்டாம். அந்தப் படத்துக்கு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும், சூர்யாவும் ஓவர் ஹைப் ஏற்றி வைத்தார்கள். அந்த ஹைப்புக்கு ஏற்றவாறு படம் இருக்குமா என்று ரசிகர்கள் பார்க்க சென்றபோது அவர்களுக்கு படம் திருப்தியை கொடுக்கவில்லை. இதனால் படத்துக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் கிடைத்தன. முக்கியமாக ட்ரோலும் செய்யப்பட்டது.
அடுத்த படங்கள்: கங்குவா படத்துக்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். மே ஒன்றாம் தேதி படம் ரிலீஸாகவிருக்கிறது. தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் தனது 45ஆவது படத்தில் நடித்துவருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். இந்தப் படத்தை முடித்துவிட்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கிறார். படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவிருக்கிறது. கண்டிப்பாக இந்தப் படம் அவரது கரியரில் முக்கியமான ஒன்றாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
ரசிகரின் அட்வைஸ்: இதற்கிடையே வணங்கான், புறநானூறு ஆகிய படங்களிலிருந்து வெளியேறினார் சூர்யா. இவற்றில் புறநானூறு படம் பராசக்தி என்று பெயர் மாற்றம் அடைந்து அதில் சிவகார்த்திகேயன் நடித்துவருகிறார். அதன் டைட்டில் டீசரை பார்த்த ரசிகர்கள்; இந்தப் படத்தையா சூர்யா மிஸ் செய்தார் என்று ஆச்சரியத்துடன் கேட்டுவருகிறார்கள். இந்நிலையில் சூர்யாவுக்கு ரசிகர் செய்த அட்வைஸ் ஒன்று தெரியவந்திருக்கிறது.
அதாவது சிங்கப்பூரிலிருந்து ஒரு ரசிகர் சூர்யாவை பார்க்க வந்தாராம். அப்போது சூர்யா தனது பேண்ட்டை இடுப்புக்கு மேல் போடுவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். அதனை கவனித்த அந்த ரசிகரோ; பேண்ட்டை இப்படி போட்டால் உங்களுக்கு நன்றாக இருக்காது, லோ ஹிப்பில் போடுங்கள் அப்போதுதான் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும் கூறினாராம். அப்போதிருந்து ரசிகர் சொன்னபடிதான் பேண்ட்டை அணிந்துவருகிறாராம் சூர்யா.


Click it and Unblock the Notifications











