ஜெமினி கணேசன் மகள் ரேகாவிடம் அத்துமீறல்..கட்டாயப்படுத்தி லிப் லாக் செய்த நடிகர்..என்னாச்சு தெரியுமா?
சென்னை: தமிழ் சினிமாவின் ப்ளாக் அண்ட் ஒயிட் காலத்தில் காதல் மன்னன் என்று அழைக்கப்பட்டவர்தான் ஜெமினி கணேசன். ஏராளமான படங்களில் நடித்திருக்கும் அவர் நடிகை சாவித்திரியையும் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். ஜெமினியின் மகள்களில் ஒருவர்தான் நடிகை ரேகா. ரேகாவும் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், போஜ்புரி உள்ளிட்ட மொழிகளில் படு ஃபேமஸான நடிகையாக வலம் வந்தவர். இந்தச் சூழலில் அவரது வாழ்வில் நடந்த சம்பவம் ஒன்று தெரியவந்திருக்கிறது.
புதுக்கோட்டையில் பிறந்தவர் ஜெமினி கணேசன். கணபதி சுப்ரமணியன் சர்மா என்ற இயற்பெயரை கொண்ட அவர் பின் நாட்களில் ராமசாமி கணேசன் என தன்னுடைய பெயரை மாற்றிக்கொண்டார். அடிப்படையில் வேதியியல் படித்த அவர் சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றினார். ஆசிரியராக இருந்தாலும் அவருக்கு கலை மீது தீராத ஆர்வம் இருந்ததுவந்தது.
ஜெமினி: கலை மீது ஆர்வம் கொண்டாலும் எப்படி திரையுலகில் நுழைவது என்று தெரியாமல் இருந்தவர் ஆரம்பத்தில் ஜெமினி ஸ்டூடியோவில் பணிக்கு சேர்ந்தார். பிறகு மிஸ் மாலினி என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். கணேசன் என்ற பெயரில் அவர் அறிமுகமானாலும் பராசக்தி மூலம் பிரபலமான சிவாஜியும் கணேசன் என்று அழைக்கப்பட்டதால் தான் பணியாற்றிய ஜெமினி ஸ்டூடியோவின் பெயரை தன்னுடைய பெயருக்கு முன்னர் சேர்த்து ஜெமினி கணேசனாக மாறினார்.

ஹீரோ ஜெமினி: கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக அறிமுகமான ஜெமினி கணேசன் பெண் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன்படி மனம்போல மாங்கல்யம், வஞ்சிக்கோட்டை வாலிபன் நான் அவனில்லை உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்தவர்; நான் அவனில்லை படத்தில் மட்டும் ஒன்பது ரோல்களில் நடித்து அனைவரையும் அசத்தினார்.
பலமும், பலவீனமும்: தற்போது விஜய் சேதுபதி எப்படி ஹீரோவாக இருந்தாலும் இன்னொரு நடிகருடன் சேர்ந்து நடிப்பது, வில்லனாக நடிப்பது என கலக்கிவருகிறாரோ அதேபோல்தான் ஜெமினி கணேசனும். தன்னுடைய கரியர் பீக்கில் இருந்தபோதே எம்ஜிஆர், சிவாஜி கணேசன் உள்ளிட்டோருடன் இணைந்து நடித்தார். அது ஒருபக்கம் அவருக்கு பலமாக இருந்தாலும் மற்றொரு பக்கம் பலவீனமாக இருந்தது.
காதல் மன்னன்: சிவாஜியை நடிகர் திலகம், எம்ஜிஆரை புரட்சி தலைவர் என்று பலரும் அழைக்க கோலிவுட்டில் முதல் காதல் மன்னனாக ஜெமினி கணேசன் மாறினார். அவரது உருவம், ஹேர் ஸ்டைல் என அனைத்துமே பெண்களை கவர்ந்தன. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் தமிழ் சினிமாவின் முதல் சாக்லேட் பாயாக வலம் வந்தவர் ஜெமினி கணேசன் என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் அவர் தன்னுடைய 18ஆவது வயதில் அலமேலு என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

அவரைத் தொடர்ந்து நடிகை சாவித்திரியையும் காதலிக்க ஆரம்பித்தார். முதலில் இரண்டு பேரின் காதலும், திருமணம் செய்துகொண்டதும் வெளியே தெரியாமல்தான் இருந்தது. ஆனால் ஒரு விளம்பர ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்ட சாவித்திரி, தன் பெயருடன் கணேசன் என்பதையும் சேர்த்து போட்டார் என்றும் அதன் மூலம்தான் இருவரும் திருமணம் செய்துகொண்டனர் என்பது தெரியவந்ததாகவும் ஒரு தகவல் உண்டு. சாவித்திரிக்கும், ஜெமினிக்கும் இருந்த உறவை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநடி படத்தில் தெளிவாக காட்டியிருப்பார்கள்.
அடுத்த திருமணம்: இதற்கிடையே புஷ்பவள்ளி என்பவரையும் திருமணம் செய்து சில வருடங்கள் வாழ்ந்தார் ஜெமினி கணேசன். பிறகு ஜூலியானா ஆண்ட்ரு என்ற பெண்ணுடன் அவருக்கு தொடர்பு இருந்ததாகவும் ஒரு பேச்சு உண்டு. இப்படி பெண்கள் விஷயத்தில் அவர் அப்படி இப்படி இருந்தாலும் தனக்கு இருந்த உறவுகளை அவர் பொதுவெளியில் சொல்வதற்கு என்றுமே அச்சப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சாவித்திரியுடன் இருந்த உறவை ஆரம்பத்தில் அவர் சில காலம் மறைத்தாலும் அது வெளியே தெரிந்த பிறகு மறுக்கவும் இல்லை, மறைக்கவும் இல்லை. அதேபோல் சாவித்திரிக்கு உண்டான மரியாதையை ஜெமினி கணேசனின் மற்ற மனைவிகளும், குழந்தைகளும் கொடுக்கத்தான் செய்திருக்கிறார்கள் என்பது திரைத்துறையில் பலரது கருத்து என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.
ரேகா வாழ்வில் நடந்தது: ஜெமினி கணேசனுக்கும், புஷ்பவள்ளிக்கும் பிறந்தவர்தான் நடிகை ரேகா. குழந்தை நட்சத்திரமாக தனது திரையுலக பயணத்தை தெலுங்கில் ஆரம்பித்த அவர் ஹீரோயினாக பல வருடங்கள் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் கலக்கியவர். இந்தச் சூழலில் அவரது வாழ்வில் நடந்த சம்பவம் குறித்து பார்க்கலாம். அதாவது, ரேகா தனது 32ஆவது வயதில் வங்காள மொழி படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகர் பிஸ்வஜித் சாட்டர்ஜி நடித்திருக்கிறார்.

நடுங்க வைத்த சம்பவம்: அந்தப் படத்தில் இரண்டு பேரும் ஒரு காதல் காட்சியில் நடித்திருக்கிறார்கள். அந்த சமயத்தில் பிஸ்வஜித்தும், படத்தின் இயக்குநரும் ரேகாவின் சம்மதம் வாங்காமலேயே ஒரு முடிவை எடுத்திருக்கிறார்கள். அதாவது ரேகாவை முத்த காட்சியில் நடிக்க வைப்பதுதான் அது. இயக்குநர் ஸ்டார்ட், கேமரா, ஆக்ஷன் என்று சொன்னவுடன் காதல் காட்சியில் இரண்டு பேரும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். சீன் முடிந்ததாக ரேகா நினைத்தபோது டைரக்டரோ கட்டே சொல்லாவில்லையாம்.
கட்டாயப்படுத்தி முத்தம்: பிஸ்வஜித்தோ ரேகாவின் உதடுகளில் முத்தத்தை கொடுக்க ஆரம்பித்துவிட்டாராம். கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்கள்வரை தொடர்ந்து முத்தத்தை கொடுத்துக்கொண்டே இருந்திருக்கிறார் ஹீரோ. அதிர்ச்சியடைந்த ரேகாவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இதனை பார்த்து அந்த ஸ்பாட்டில் இருந்த யூனிட்காரர்கள் கைத்தட்டி விசில் அடித்தார்களாம். இதனால் மேலும் அதிர்ச்சியடைந்த ரேகா, பிஸ்வஜித் விட்டதும் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்துவிட்டாராம்.
இயக்குநர் சொன்னதைத்தான் செய்தேன்: இந்த சம்பவம் அப்போது திரைத்துறையில் பெரும் விவாதத்தை கிளப்பியதாம். உடனடியாக விளக்கமளித்த பிஸ்வஜித்தோ நான் வேண்டுமென்றே செய்யவில்லை. இயக்குநர் என்ன சொன்னாரோ அதைத்தான் செய்தேன் என்று சொல்லி நழுவிவிட்டாராம். ரேகாவோ எதுவும் சொல்லவில்லையாம். அதேசமயம் இந்த விஷயம் பெரிதாகிவிட்டது ஏதாவது சொன்னால் கண்டிப்பாக படத்திலிருந்து தன்னை நீக்கிவிடுவார்கள் என்று அமைதியாக இருந்தாராம்.
கடுமையான நஷ்டம்: ஆனால் இந்த முத்தக் காட்சி விவகாரம் சென்சார் போர்டில் கடும் கண்டனத்தை கிளப்பியதாம். இதன் காரணமாக படம் ரிலீஸாவதற்கு சில வருடங்கள் ஆகிவிட்டனவாம். சில வருடங்கள் கழித்து வெளியான அந்தப் படம் படுதோல்வியை சந்தித்து அந்தத் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டதாம். இந்தத் தகவல் நடிகை ரேகாவின் சுயசரிதையான, ரேகா தி அன் டோல்ட் ஸ்டோரி புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவம் ரசிகர்களிடையே உச்சக்கட்ட ஷாக்கை ஏற்படுத்தியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











